24 special

தமிழசையின் வெற்றியை பொறுத்து கொள்ளாத விஷமிகள் செய்த காரியம்... வேறோடு பிடுங்கி எரியப்படும் என தமிழசை சூளுரை...

TAMILISAI SOUNTHARAJAN
TAMILISAI SOUNTHARAJAN

தென்சென்னை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன்  அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குடியிருப்பு வாசிகளிடம் ஜும் மீட்டிங்கில் ஓட்டு சேகரித்தார். இந்த வேளையில் ஆபாச படம் காண்பிக்கப்பட்டதால் மீட்டிங் பாதியில் முடிந்தது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,   இதில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் சிட்டிங் எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடுகிறார்.  அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனும், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக செல்வியும் போட்டியிடுகின்றனர். பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார்.இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழிசை சவுந்தரராஜன் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்போருடன் ஜும்  மீட்டிங் மூலம் வாக்கு சேகரித்தார்.


இந்த மீட்டிங்கின்போது ஆபாசமான படங்களை வேண்டுமென்றே பகிர்ந்துள்ளனர்.   இதனால் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தமடைந்ததுடன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். முதலில் அந்த வீடியோவில் தமிழிசை சவுந்தரராஜன் ஆங்கிலத்தில் பேசுகிறார். அதில் ‛‛வணக்கம், முதலில் அனைவருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என கூறுகிறார். பின்னர் ஜூம் மீட்டிங் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்துள்ளேன் என குறிப்பிடுகிறார். ஏனென்றால் தென்சென்னை தொகுதியில் அனைத்து இடங்களுக்கும் சென்று ஒவ்வொருவரையும் சந்தித்து வருகிறேன். ஆனால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வரும் எனது நண்பர்களை  தன்னால் சந்திக்க முடியவில்லை என்பதால் உங்களுடன் Zoom மீட்டிங் மூலம் தொடர்பு கொள்ள நினைத்தேன் என கூறுகிறார். அப்போது சில விஷமிகள் தவறான  செயலில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தியு அதிர்ச்சியும் அடைந்த தமிழசை உடனடியாக இந்த மீட்டிங்கை பாதியிலேயே முடித்து கொண்டார். 

இதுகுறித்து   தமிழிசை சவுந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில்,  Zoom மீட்டிங்கில் மக்களுடன் உரையாடி கொண்டிருக்கும்போது சில விஷமிகள் ஆபாசமான செயல்களில் ஈடுபட்டனர். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஆபாசமான படங்களை Zoom மீட்டிங்கில் பரவவிட்டு உடனே நான் அவர்களோடு பேசுவதை தடுத்துவிட்டார்கள்’’ என கண்டனத்துடன் தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து பேசிய தமிழசை செந்தரராஜன் தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுகவை இதற்கு நேரடியாகவே  குற்றம் சுமத்துகிறேன் என்றும். இது கேவலமான அரசியல் என்றும்,. இதன் மூலம் எங்களுக்கும், மக்களுக்குமான தொடர்பை துண்டிக்க முடியாது என்றும் கூறினார்.. பெண்கள் இணைய வெளியில் சுதந்திரமாக பேசக்கூட முடியவில்லை. இதை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்? அரசியலை தூய்மைப்படுத்த நாங்கள் அரசியலுக்கு வந்துள்ளோம். நேர்மையான அரசியல் செய்வது இங்கு அவசியம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மர்ம நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழிசை சௌந்தரராஜன்  சார்பில் ஆன்லைன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் இணையத்தில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.