Tamilnadu

செய்யறது செஞ்ச தானா வந்து சேரும்....வழிக்கு வந்த விளம்பர அமைச்சர் ....

tamilnadu bus
tamilnadu bus

தமிழகம் முழுவதும் விளம்பர திமுக அரசால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து பொதுமக்கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பல்வேறு பகுதிகளில் நடைபெறும் திமுகவினரின் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருவதால் திமுக அரசுக்கு மட்டுமின்றி தவறு செய்யும் அனைத்து கட்சியினருக்கும் தற்போது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது. 


அப்படிப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக தான் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மலை கிராமத்தில் பேருந்து வசதியை போக்குவரத்து துறை அமைச்சர் துவக்கி வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன் போக்குவரத்து வசதி செய்து தராததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக பொதுமக்கள் விளம்பர திமுக அரசுக்கு விளம்பர பேனர் வைத்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணி விழுந்தான் ஊராட்சிக்குட்பட்ட கல்வராயன் மலை அடிவார பகுதியான முட்டல் பூமரத்துப்பட்டி கிராமத்தில் பல ஆண்டுகளாக பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர் மேலும் பேருந்து வசதி இல்லாததால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் பல்வேறு பணிகளுக்கு ஆத்தூர் தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.

இதுகுறித்து பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் முறையிட்டும், புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரியும், சாலை வசதியை சீரமைத்து தர வேண்டும் என்றும் இல்லாவிடில் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக விளம்பர பதாகையை ஊர் பகுதியில் உள்ள  எல்லையில் கிராம மக்கள் வைத்தனர்.

இது குறித்த செய்தி வெளியான நிலையில் பேருந்து வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில்  ஆத்தூர் நகர பேருந்து நிலையத்திலிருந்து மணி விழுந்தான் வழியாக முட்டல் பூமரத்துப்பட்டி கிராமத்திற்கு நகர பேருந்து வழித்தட எண் 15c என்ற பேருந்தை துவக்கி வைப்பதற்காக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர்  வருகை தந்தார். தொடர்ந்து கொடியசைத்து பேருந்து துவக்கி வைத்த பின் முட்டல் பகுதியில் இருந்து பூ மரத்து பட்டி கிராமத்திற்கு பேருந்தில் பயணம் செய்தார். அவருடன் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா,போக்குவரத்து துறை அதிகாரிகள்,  அரசு அதிகாரிகள்,  திமுக நிர்வாகிகள் என பலர் பேருந்தில் பயணம் செய்தனர். நாடாளுமன்ற தேர்தலை வருவதையொட்டி இந்த பணிகள் தற்போது நடைபெற்றுள்ளதாகவும், இல்லாவிடில் இந்த விளம்பர திமுக அரசு இதனை கண்டு கொள்ளாமல் இருந்திருக்கும் என்றும் எது எப்படியோ தங்கள் பகுதிக்கு பேருந்து வசதி வந்தது தங்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.