24 special

விஸ்வரூபம் எடுக்கும் பாரதம் வீழும் சீனாவின் கனிம சாம்ராஜ்யம்! உலகைத் ஆளப்போகும் இந்தியாவின் அதிரடி

PMMODI,XIJINPING
PMMODI,XIJINPING

உலகில் இன்று விலை உயர்ந்த பொருள் தங்கம் அல்ல, பிளாட்டினம் அல்ல, ஏன் வைரங்கள் கூட அல்ல!தொழில்நுட்ப உலகில் இன்று எதற்கும் ஈடு இணையற்ற மதிப்பைக் கொண்டிருப்பது "அரிய வகை கனிமங்கள்" மட்டுமே. எதிர்காலத்தை ஆளப்போகும் இந்த 'மறைந்திருக்கும் பொக்கிஷங்கள்  தான். தங்கம் ஒரு முதலீடாகப் பார்க்கப்படுகிறது, ஆனால் இந்த அரிய கனிமங்கள் மனித நாகரிகத்தின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கான "மூலதனமாக" பார்க்கப்படுகின்றன


அரிய வகை கனிமங்கள் எனப்படும் இந்த "தொழில்நுட்பத் தங்கம்" குறித்து  இந்தியா எடுக்கப்போகும் அடுத்தகட்ட அதிரடிகள் உலக வரைபடத்தில் இந்தியாவின் நிலையை முற்றிலும் மாற்றியமைக்கப்போகின்றது. சீனாவிடம் சிக்கியுள்ள இந்த விநியோக சங்கிலியை உடைக்க அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் இந்தியாவை ஒரு பலமான மாற்றாகப் பார்க்கின்றன. இந்தியாவின் நீண்ட கடற்கரை பகுதிகளின்  மணற்பரப்பில் கொட்டிக்கிடக்கும் மோனோசைட் போன்ற தாதுக்களில் இருந்து இந்த அரிய வகை கனிமங்களை பிரித்தெடுக்கும் பணிகளை இந்தியா போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட்டுள்ளது.

இதற்காக இந்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சுரங்கக் கொள்கை, மூலம்  ஒரு மாபெரும் தொழில் புரட்சிக்கு வித்திட்டுள்ளது. வெறும் கனிமங்களை தோண்டி எடுப்பதோடு நிற்காமல், அவற்றை சர்வதேச தரத்திற்கு சுத்திகரிக்கும் 'வேல்யூ செயின்' (Value Chain) அமைப்பதில் இந்தியா இப்போது முனைப்பு காட்டுகிறது. இதற்காக ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிடமிருந்து நவீன சுத்திகரிப்பு தொழில்நுட்பங்களை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கனவே கையெழுத்தாகியுள்ளன.

ஜெய்சங்கர் போன்ற ராஜதந்திரிகள் முன்னெடுக்கும் இந்த கனிம அரசியல், இந்தியாவை வெறும் சந்தையாகப் பார்க்காமல் ஒரு தயாரிப்பு மையமாக உலகை அங்கீகரிக்கச் செய்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் தங்களின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைக்குத் தேவையான மூலப்பொருட்களை இனி சீனாவின் தயவின்றி இந்தியாவிலிருந்து பெற முடியும் என்ற நம்பிக்கையை இந்தியா உருவாக்கி வருகின்றது. இதன் ஒரு பகுதியாகவே, செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் இந்தியா இறங்கியுள்ள முதலீடுகள் அமைகின்றன.

குஜராத் முதல் தமிழ்நாடு வரை அமையவிருக்கும் சிப் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நியோடைமியம், டிஸ்ப்ரோசியம் போன்ற கனிமங்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம், மின்னணு சாதனங்களின் விலையை இந்தியா உலகளவில் குறைக்க முடியும். இது சீனாவிற்கு பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். மேலும், மின்சார வாகனங்களுக்கான (EV) பேட்டரி உற்பத்தியில் இந்தியா கொண்டு வரப்போகும் மாற்றங்கள், பெட்ரோலிய நாடுகளுக்கு இணையாக இந்தியாவை ஒரு ஆற்றல் மையமாக மாற்றும்.

சர்வதேச அளவில் உருவாக்கப்பட்டுள்ள 'மினரல் செக்யூரிட்டி பார்ட்னர்ஷிப்' அமைப்பில் இந்தியா இணைந்திருப்பது, உலக நாடுகளுக்கு ஒரு தெளிவான செய்தியைச் சொல்கிறது. இனிமேல் சீனாவால் எதையும் தடுத்து நிறுத்த முடியாது என்பதும், இந்தியாதான் அடுத்த 'மேனுஃபேக்ச்சரிங் ஹப்' என்பதும் உறுதி செய்யப்படுகிறது. இந்த வியூகமானது வெறும் கனிம ஏற்றுமதியோடு நின்றுவிடாமல், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள், போர் விமானங்கள் மற்றும் அதிநவீன கணினிகள் என தொழில்நுட்பத் துறையில் ஒரு புதிய பாய்ச்சலை நிகழ்த்தும். பிரதமர் மோடியின் இந்த தொலைநோக்குப் பார்வையும், ஜெய்சங்கரின் ராஜதந்திர நகர்வுகளும் இணைந்து இந்தியாவை 2030-க்குள் தொழில்நுட்ப உலகின் தவிர்க்க முடியாத தலைமை நாடாக உயர்த்தப்போகிறது என்பதுதான் தற்போதைய நிதர்சனம்.