24 special

"இந்திய வரலாற்றில் மட்டுமல்ல இலங்கை" வரலாற்றிலும் அதிரடி திருப்பம் என்ன திட்டம்..!

Annamalai
Annamalai

சிறப்பு கட்டுரை :சுந்தர்ராஜ சோழன் : இந்தியா அல்லாமல் தமிழர்களுக்கு மிக முக்கியமான இன்னொரு நாடு இலங்கை.ஆனால் எந்த தமிழ் தலைவர்களும் அல்லது இந்தியத் தலைவர்களும் அங்கே சென்று மக்களோடு உரையாடி,மக்களின் அன்றாட வாழ்வு,அதனுடே படர்ந்த அரசியலை இதுவரை விவாதித்து வந்ததில்லை.


பெரியார் - காந்தி எல்லாம் சுதந்திரத்துக்கு முன்பு சென்றவர்கள்.கண்டியில் பிறந்த எம்ஜிஆர் கூட 1965 ல் ஒரு சினிமா நடிராகத்தான் சென்று வந்தார் சரோஜா தேவியுடன்..அங்கே தீவிரமான போராட்டங்கள் துவங்கிய பின்,விடுதலைப் புலிகள் ஆதரவுடன் ரகசியமாக வைகோ போன்ற தலைவர்கள் தொடங்கி பலர் சென்றனர்.

இலங்கை அலங்கோலமாகிக் கிடந்த போது திமுக காங்கிரஸ் கூட்டணி அனுப்பிய குழு ஒன்று இலங்கை சென்றதை அறிவோம்.அவர்கள் ராஜபக்ஷேவின் உரையை கேட்டுவிட்டு வந்தார்கள்.ஆனால் இதுவரை சென்ற யாரும் வெகுஜனத்தோடு உரையாடியவர்கள் இல்லை..குறிப்பாக இந்திய வம்சாவளி தமிழர்களின் மனநிலை என்ன?

அவர்கள் பிரச்சனை என்ன என்பதைப் பற்றி இதுநாள் வரை இவர்கள் யாருமே கவலைப்பட்டதில்லை. சிங்கள அரசு போரை வென்ற பிறகு பல பிரச்சனைகள் அங்கே தமிழருக்கு உருவாகியுள்ளது அதே போல சாதகங்களும்..பௌத்த - சைவ ஹிந்து இணக்கங்கள் உருவாகியது.அதே சமயம் மதமாற்றம் இலங்கை தேசிய அபாயமாக மாறியது,தமிழர் நிலங்கள் ஆக்ரமிப்புக்கு உள்ளாகிய பிரச்சனைகள் வந்தது.நமது கோவில்கள் தாக்குதலுக்கு உள்ளாகின.

அதன் பின்பு ஈஸ்டர் குண்டுவெடிப்பு போன்ற கொடூரங்கள் அரங்கேறின, இலங்கையில் தமிழர்களுக்கான சமத்துவத்தையும்,அரசியல் அதிகாரத்தையும் இந்தியா குறிப்பாக மோடி தலைமையிலான அரசு வெறும் கோரிக்கையாக பார்க்காது.அதை நிச்சயம் அவர்களின் தார்மீக உரிமையாகவே பார்க்கும்.அதே போல சிங்கள - தமிழர் உறவை பேணிக்காக்கும் வழிகள் என்னவோ அதைத்தான் தேர்வு செய்யும்.

திரு.அண்ணாமலை அவர்களின் இந்த பயணம் மிக முக்கியமான அரசியல் பயணம்.இனி தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் பெயரைச் சொல்லி அரசியல் முடியாது..அதற்கொரு முற்றுப்புள்ளியாகவும்,நமக்கும் இலங்கைக்குமான புதிய அத்தியாயத்தை துவக்கும் பயணமாகவும் அமையும்.