24 special

"ஆந்திராவிற்கு" துக்க வீட்டிற்கு சென்ற சட்டமன்ற உறுப்பினரின் கதி..! கதம் கதம்..!


ஆந்திரா : உள்ளூர் ஒய்.எஸ்.சி.ஆர்.பி பிரமுகர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது வீட்டிற்கு துக்கம் விசாரிக்க சென்ற சட்டமன்ற உறுப்பினரை மக்கள் கட்டி வைத்து தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பதி மண்டலம்  ஜி கோத்தபள்ளி  கிராமத்தை  சேர்ந்தவர் கஞ்சி பிரசாத். இவர் ஆளும் ஒய்.எஸ்.சி.ஆர்.பியின் உள்ளூர் பிரமுகர் ஆவார். இவர் மர்மநபர்களால் படுகொலை செய்யப்பட்டார். அதுதொடர்பாக எட்டுபேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே கோபாலபுரம் எம்.எல்.ஏவான தலரி வெங்கடராவ் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கோத்தபள்ளி சென்றார்.



அங்கு அவர் இறங்கியதும் அவரை நெருங்கிய கிராம மக்கள் அவரை அடித்து அருகில் உள்ள அறையில் பூட்டிவைத்தனர். அரசியலில் கஞ்சி பிரசாத்தின் வளர்ச்சி பொறுக்காத தலரி கூலியாட்களை ஏவிவிட்டு கொன்றதாக கிராம மக்கள் கூறுகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் தலரியை பாதுகாக்க வந்த மூன்று காவல்துறையினரையும் பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

இதனால் மூன்று  காவல் அதிகாரிகள் படுகாயமடைந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் பொதுமக்கள் எம்.எல்.ஏவை சிறைபிடித்து வைத்துள்ளதாக தெரிகிறது. நிலைமை தொடர்ந்து பதட்டமாவதால் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர். எம்.எல்.ஏவை மீட்க சென்ற சிலரையும் பொதுமக்கள் பிடித்து வைத்துள்ளனர். மேலும் காவல்துறை உயரதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் அவசர சந்திப்பை நிகழ்த்திய ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தனெட்டி வனிதா " ஒய்.எஸ்.ஆர்.சி.பி தலைவர் கஞ்சி பிரசாத் கொல்லப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது. அதே நேரத்தில் கோபாலபுரம் எம்.எல்.ஏ தலரி வெங்கட்ராவை கிராம மக்கள் தாக்கியதை ஒருபோதும் ஏற்க முடியாது. கஞ்சி பிரசாத்தின் உடல் பள்ளிக்கூடத்தில் இருக்கிறது. சடலத்தை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு செல்ல கிராம மக்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

மத்தியஸ்தம் பேச சென்ற தளர்த்தி வெங்கடராவை மக்கள் அடித்தது மட்டுமில்லாமல் சிறைபிடித்து வைத்துள்ளனர். அவரை காப்பாற்ற சென்றவர்களையும் தாக்கியுள்ளனர். குற்றவாளிகள் சிலரை போலீசார் கைதுசெய்துள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர். பதட்டமான சூழல் எதுவும்  இல்லை" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தற்போது நிலவரப்படி தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மூன்றுபேர் மட்டும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.