Tamilnadu

பர்வதமலை கோவிலில் என்ன நடக்கிறது "பகிர்" தகவலை வெளியிட்ட பெண் செயல் அலுவலர் களத்தில் இறங்குமா இந்து அமைப்புகள் ?

parvathamalai temple parameswari
parvathamalai temple parameswari

பர்வதமலை கோவில் செயல் அலுவலராக இருக்கும் பரமேஸ்வரி மீதே நடவடிக்கையை திசை திருப்பிய சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில் உண்மையாக செயல்பட்டதற்கு இதுதான் பரிசா என முன்னாள் காவல்துறை அதிகாரியும் பல்வேறு கோவில் வழக்குகளில் போராடி வென்றவருமான ஜெபமணி மோகன்ராஜ் அவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு:


ஐயா வணக்கம். என் பெயர் மு.பரமேஸ்வரி. பர்வதமலை திருக்கோயில் செயல் அலுவலராக பணியாற்றி வருகிறேன்.தற்போது என்னை பணிமாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. என்னிடம் பொறுப்பு ஏற்க வந்துள்ள செயல் அலுவலர் , என்னால் தீர்மானம் இயற்றப்பட்டு  பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளரை உடன் அழைத்து வந்து எழுத்தர் பணி வழங்குகிறார். இது தவறு என்று சுட்டிக்காட்டினால் இணை ஆணையர் தான் அவரையே எழுத்தராக நியமனம் செய்யுமாறு அனுப்பி வைத்துள்ளார் என்று கூறுகிறார்.

பர்வத மலை திருக்கோயிலில் உண்டியலில் பணத்தை களவாடியது , போலி ரசீது புத்தகங்களின் மூலம் பக்தர்களிடம் ஏமாற்றி பணம் பறித்த 5 தற்காலிக பணியாளர்களை கூட்டாக பணியில் இருந்து dismised செய்து விட்டேன். இவர்களுக்கு மூளையாக செயல்பட்டு வந்தது திருக்கோயில் எழுத்தர் R. மோகன் என்பதும் தெரிய வந்து இவரையும் கடந்த 06.2.2021ல்  பணியில் இருந்து நீக்கி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.  

அதன் பின் என்னை பழிவாங்கும் விதமாக பல்வேறு ஜோடனையான புகார்கள் மூலம் என்னை அவமான படுத்தி, என் குடும்ப ஒற்றுமையை சீர்குலைத்து என் கணவரும் என்னை விட்டு பிரிந்து செல்லும் படியாக பல்வேறு சதி செய்களை செய்து தற்போது என் பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வருகிறேன். இது தவிர என் மீது பொய்குற்றச்சாட்டுகளினால் 17(b) விசாரணையும் நிலுவையில் உள்ளது.பர்வத மலை திருக்கோயிலின் நலனுக்காக செயல் அலுவலர் என்ற முறையில் நடவடிக்கை மேற்கொண்டதால் என் தனிப்பட்ட வாழ்விலும் , செயல் அலுவலர் பணியிலும் மிகவும் பரிதாப நிலையில் தள்ளப்பட்டுள்ளேன். 

இவை அனைத்திறகும் காரணமான நபர்களை மீண்டும் பணியில் சேர்க்க கூட்டு  சத்திட்டம்  நடைபெற்று வருகிறது ஐயா.  பர்வத மலை திருக்கோயில் Ac/  Eo நியமிக்க கூடிய அளவிற்கு வருமானம் வரக்கூடிய திருக்கோயில் ஆகும். ஆனால் பல்வேறு சமூக விரோதிகள் செயலால் திருக்கோயிலுக்கு வர வேண்டிய வருமானம் அனைத்தும் நாற்புறமுமாக சிதறி தனிநபர்களுக்கு சென்று கொண்டிருக்கிறது. இதற்கு எல்லாம் மூல காரணியாக செயல்படும் நபரையே மீண்டும் பணியில் சேர்க்கின்றார் திருவண்ணாமலை இணை ஆணையர் அவர்கள். இந்த செயலை தடுத்து நிறுத்தாவிடில் பர்வத மலை திருக்கோயில் நலன் மீண்டும் படுகுழியில் விழும் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன். எத்தனையோ படித்து வேலையற்ற இளைஞர்கள் உள்ளார்கள் அவர்களுக்கு பணி வழங்கலாம். ஆனால் குற்றம் புரிந்த நபர்களை மீண்டும் பணியில் சேர்த்திட கூட்டு சதி செய்கிறார்கள்.  

என்னால் இயன்றவரை இம்முயற்சியை தடுக்க போராடி தோற்றுவிட்டேன்.  எனக்கு அவமானமும், 17 (b) யும் தான் மிச்சமானது. இருப்பது எனக்கு இனி உயிர் மட்டுமே அதையும் தந்தால் தான் இனி பர்வத மலை கூட்டு சதிகாரர்களிடம் இருந்து காக்க முடியும் என்றால் என் உயிரையும் தர தயாராக உள்ளேன் என்ற விவரம் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.  பர்வத மலை திருக்கோயிலை காக்க தங்களை தவிர தற்போது வேறு யாரும் இல்லை என்ற நிலை உணர்ந்து தங்களின் உதவியை நாடி வேண்டுகிறேன் ஐயா.  

பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தினால், திருக்கோயிலின் நலன் பாழாகும் என்பது எனது அனுபவ பூர்வான கருத்தாகும். எனவே இணை ஆணையர், செயல் அலுவலர்  ஆகியோரின் பணி நீக்கம் செய்த பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்கும் முயற்சியினை தடுத்து நிறுத்த வேண்டுமென்று , ஆணையர் ஐயா தங்களையே பர்வத மலை சிவனாக எண்ணி தங்களின் பொற்பாதங்களில்  விழுந்து வணங்கி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.இப்படிக்கு மு.பரமேஸ்வரி செயல் அலுவலர்..  வாட்ஸ் அப் வரவு.. என குறிப்பிட்டுள்ளார் .

நேர்மையாக செயல்பட்ட காரணத்தினால் பணிமாறுதல் பெற்றது மட்டுமல்லாமல் குடும்பத்தை பிரியும் சூழலுக்கு தள்ளப்பட்ட செயல் அலுவலர் பரமேஸ்வரிக்கு நீதி கிடைக்க வேண்டுமென tnnews24 குழு இந்த விவகாரத்தை  மக்கள் மத்தியில் கொண்டு வந்துள்ளது , இந்து அமைப்புகள் , தமிழ் அமைப்புகள் ,நேர்மையாளர்கள் ஜெபமணி மோகன்ராஜ் அவர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கிடைக்க உதவ முன்வரவேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது . பின்குறிப்பு காஞ்சிபுரத்தில் ருத்திராட்சம் அணிந்த காரணத்திற்காக மாணவன் தாக்கப்பட்டான்  என்ற செய்தியை முதலில் செய்தியாக வெளியிட்டது tnnews24 குழு என்பது குறிப்பிடத்தக்கது .