Tamilnadu

என்னது உத்திர பிரதேச தேர்தல் வெற்றிக்கும் அதி வெற்றிக்கும் இடையே நடக்கிறதா வெற்றி பெற போவது யார்?

Modi
Modi

உபியில் நடக்கும் தேர்தலானது வெற்றிக்கும் - தோல்விக்கும் இடையேயானது இல்லை.வெற்றிக்கும் அதீத வெற்றிக்குமாக பாஜக தங்களுக்குள்ளே நடத்தும் போட்டி..அவ்வளவே என குறிப்பிட்டுள்ளார் எழுத்தாளர் சுந்தர ராஜ சோழன். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :- மோடி வீழ்த்த முடியாதவர் என்று நாம் சொல்வது அதீதமோ,வெற்று கற்பனையோ அல்ல..முழுக்க முழுக்க தரவுகளின் அடிப்படையிலானது..கீழே உள்ள புள்ளி விவரங்களை பாருங்கள்.ஒரு மாநிலத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும்,அதே மாநிலத்தில் நடக்கிற நாடாளுமன்ற தேர்தலுக்கும் உள்ள விதியாஸம்தான் மோடியின் பலமென்ன என்று காண்பிப்பது. 


மாநிலத்தில் ஒருவரை முன்னிறுத்தியோ அல்லது பாஜக ஆட்சி அமைய வாக்கு கேட்கும் போதோ கட்சிக்கு வருகிற வாக்குகளை  விட,மோடி தன்னை முன்னிறுத்தி கேட்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெறுகிற வாக்குகள் அதிகம்.உதாரணமாக உத்திரபிரதேசத்தையே எடுத்துக் கொள்ளுங்கள். 2012 சட்டமன்ற தேர்தலில் வெறும் 15% எடுத்த பாஜக 2014 ல் மோடி பிரதமராக 42% வாக்குகளை வாங்கி இணையற்ற வெற்றியை பெற்றது.அடுத்து 2017 ல் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலே சட்டமன்ற தேர்தலை சந்தித்து 39% வாக்குகளை பெற்று பின்பு யோகியை முதல்வராக அமர்த்தினார்கள்.2019 நாடாளுமன்ற தேர்தலில் 50% வாக்குகளை மோடி பிரதமராக மக்கள் வழங்கியுள்ளார்கள். ஆக,மோடியின் தேசிய எழுச்சி உபியில் பாஜகவை 50% வாக்குகளுக்கு கொண்டு போய்விட்டது..அதற்கு காரணமென்ன என்று ஆழமாக கவனிக்க வேண்டும்..யாதவ் அல்லாத OBC,ஜாதவ் அல்லாத SC சமூகங்களை தங்களுக்கு சாதகமான வாக்காளர்களாக பாஜக மாற்றியதுதான் காரணம்..

கோரி,குர்மி,குஷ்வாஹா,கும்பார்(பிரஜாபதி),ராஜ்பார்,நிஷாத்,காஷ்யப் போன்ற எண்ணற்ற OBC சமூகங்களுக்கு அரசியல் எழுச்சியும் அடையாளமும் மோடியாலும் பாஜகவினாலும்தான் கிடைக்கிறது.இதுவேதான் ஜாதவ் அல்லாத SC பிரிவினரான ராஜ்பாசி,பஸ்வான்,ரவிதாச,சாமர் போன்ற எண்ணற்ற சமூகங்களுக்கும் பாஜகவினால் நிகழ்ந்தது. இந்த வாக்குகளை அகிலேஷாலோ அல்லது மாயாவதியாலோ வாங்க முடியாது.காங்கிரஸினால் கற்பனையே செய்ய முடியாது அது அங்கே களத்திலே இல்லை.இதற்கும் மேல் பூமிகார் மற்றும் பிராமணர்களுடன் தாக்கூர்களுக்கு பிரச்சனை இருந்தாலும் அதனால் வாக்குகள் உடையும் என்பதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை..


மீடியாக்கள் அகிலேஷ் ஏறி வருகிறார் என்று பேசப்பேச பிராமணர் - Non யாதவ் OBC - பட்டியல் சமூகங்கள் திரண்டு பாஜகவிற்கு கேள்வியே கேட்காமல் வாக்களிக்கும் என்பதே நிதர்சனம்..இதற்கும் மேல் ராமஜென்மபூமி - காசி விஸ்வநாதர் ஆலய புனரமைப்பு என ஹிந்துக்களின் அடையாளத்தை மீட்டெடுத்தது 'மோடி - யோகி' கூட்டணிதான்..உ.பியின் நிகரற்ற வளர்ச்சியை கண் முன்னாலேயே பார்க்கிறார்கள் மக்கள்.. ஆகவே,உபியில் நடக்கும் தேர்தலானது வெற்றிக்கும் - தோல்விக்கும் இடையேயானது இல்லை.வெற்றிக்கும் அதீத வெற்றிக்குமாக பாஜக தங்களுக்குள்ளே நடத்தும் போட்டி..அவ்வளவே. என அடித்து கூறுகிறார் சுந்தரராஜ சோழன்.