24 special

என்ன சார் திருமா நிலை இப்படி ஆகிப்போச்சு!

Thirumavalan
Thirumavalan

ஆப்பு அடிக்க காத்திருந்த பாராளுமன்றம் பல்டி அடித்த திருமாவளவன்!   தமிழகத்தில் பட்டியல் சமுதாய மக்களின் பிரதிநிதி என தன்னை அடையாள படுத்தி கொள்பவர் திருமாவளவன், அவரது கட்சியின் முன்னணி தலைவர்களும் அதை தான் செய்து வருகின்றனர், இந்த சூழலில் திருமாவளவனுக்கு சட்ட சிக்கல் உண்டாகமல் இருக்க நாடாக அரசியலை காதும் காதும் வைத்தது போன்று திருமாவளவன் முடித்து இருக்கிறார் என்கின்றனர் அரசியல் தெரிந்தவர்கள்.


தொடர்ச்சியாக இந்து மதத்தை விமர்சனம் செய்து வருபவர்களில் திருமாவளவனும் ஒருவர், இந்து கடவுள்கள் குறித்தும், கோவில்கள் குறித்தும் சர்ச்சையாக பேசி வந்து இருக்கிறார், இது பெரும் சர்ச்சையை உண்டாக்கி இருந்தது, அத்துடன் தான் ஒரு போதும் இந்து இல்லை எனவும் திருமாவளவன் பேசி இருந்தார்.

இந்த சூழலில் திருமாவளவன் மீது பல்வேறு புகார்கள் பாராளுமன்றத்தில் குவிந்தது, இந்துக்கள் மட்டுமே பட்டியல் சமுதாயதிற்கு ஒதுக்கப்பட்ட தனி தொகுதியில் போட்டியிட முடியும் ஆனால்  தொடர்ச்சியாக இந்து கடவுள்களை விமர்சனம் செய்து வரும் திருமாவளவன் மதம் மாறி இருக்கிறார் எனவும் அவரை மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் புகார் தெரிவிக்கப்பட்டதாம்.

திருமாவளவன் பேசிய , "முருகனுக்கும், விநாயகருக்கும் தாய் தந்தை ஒன்றுதான். ஆனால் முருகன் தமிழ்க் கடவுள் என்றால், விநாயகரும் தமிழ்க் கடவுள்தானே.. அவரை ஏன் யாரும் தமிழ்க் கடவுள் என்று சொல்லவில்லை. ஒருவர் தமிழ்க் கடவுள், மற்றொருவர் இந்தி கடவுளா? என்று திருமாவளவன் கேட்ட கேள்வி கோவில்களில் ஆபாச சிலைகள் இருக்கும் என சர்ச்சையாக பேசியது, கடவுள் ஐயப்பன் குறித்து பேசிய சர்ச்சை, இறுதியாக திருமாவளவனின் உடன் பிறந்த அக்கா மறைவை கிறிஸ்தவ மத படி அடக்கம் செய்தது என ஒரு பட்டியலே தயார் செய்து கொடுத்துள்ளனர்.

அந்த பட்டியல் அடிப்படையில் விரைவில் திருமாவளவனுக்கு விளக்கம் கேட்கப்படலாம் என்று எதிர்ப்பார்க்க பட்டது, இந்த சூழலில் தான் திடீர் என தனது சனாதான எதிர்ப்பு கொள்கையில் இருந்து பல்டி அடித்துள்ளார் திருமா? எங்கே தனது மக்களவை உறுப்பினர் பதவிக்கு ஆபத்து வருமோ அடுத்த தேர்தலில் தனி தொகுதியில் போட்டியிட முடியாமல் போகுமோ?

என்ற அச்சம் காரணமாகா இந்து கடவுள் மாரியம்மன் கும்பாபிசேக விழாவில் கலந்து கொண்டு தானே கும்பத்தை தலையில் சுமந்து இந்து முறைப்படி விழாவை நடத்தி இருக்கிறார், அதாவது நான் ஒரு இந்துதான் என்பதற்கு இப்படி ஒரு அடையாள நாடகத்தை திருமாவளவன் நடத்தி இருக்கிறார் என்று இப்போது விமர்சனங்கள் எழ தொடங்கி உள்ளன.

அசிங்கமான சிலைகள் இருந்தால் அது கோவில் என வாய் கிழிய பேசிய திருமாவளவன் இப்போது ஏன் அதே கோவில் விழாவில் கலந்து கொள்ளவேண்டும், அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட வேண்டும் என பலரும் திருமாவளவனை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

திருமாவளவன் மட்டுமின்றி பல்வேறு தனி தொகுதியில் போட்டியிடும் நபர்கள் ஆவணங்களின் படி தங்களை இந்துவாக காட்டி கொள்கிறார்களே தவிர முறைப்படி இந்து வாழ்வியல் முறையை அவர்கள் பின்பற்றுவது கிடையாது, இந்த நிலை மாறவேண்டும் என்றால் மத்திய அரசும், நீதிமன்றமும் சாட்டையை சுழற்றினால் மட்டுமே இந்த விவகாரத்தில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சட்டம் மட்டும் வலுவாக அமைந்தால் இன்று கும்பத்தை தலையில் வைத்து கும்பாவி சேக விழாவில் கலந்து கொண்ட திருமாவளவன் போன்றோர் நாளைக்கு பால் கவாடி, தீ மிதித்தல் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் ஆச்சர்யம் இல்லை என்கின்றனர் திராவிட அரசியலை நன்கு அறிந்தவர்கள்.