24 special

மதுரை ஆதினம் குறித்து கருத்து "கடும் சிக்கலை" சந்தித்த ஜோதிமணி !

Madurai aadhinam and jothimani
Madurai aadhinam and jothimani

மதுரை ஆதினத்திற்கு எதிராக கருத்து தெரிவித்த ஜோதிமணி இப்போது கடும் எதிர்ப்பை சந்தித்து இருக்கிறார் மதுரை ஆதினத்திற்கு எதிராக ஜோதிமணி வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :


தமிழ் மண்ணின் ஆன்மீக மரபில் ஒரு  தனிச்சிறப்பான இடம் ஆதீனங்களுக்கு உண்டு. குன்றக்குடி,பேரூர் உள்ளிட்ட ஆதினங்கள் தமிழ் மண்ணோடும்,மரபோடும்,சமூக வாழ்வோடும் இணைந்து பயணிப்பவை.சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்தவை.

ஆதினங்களின் ஆன்மீகம் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானது.ஆர்எஸ்எஸ் இன் ஊதுகுழலாக ஒலிக்கும் தற்போதைய மதுரை ஆதினம் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். தமிழகத்தின் தொன்மையான ஆதீன மரபிற்கு களங்கம் விளைவிப்பவர்கள். இவர்களிடம் தமிழகம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

ஆதினப்போர்வையில் ஒளிந்துகொண்டு,ஆர்எஸ்எஸ்/பாஜகவின்  குரலாக ,  அமைதி,நல்லிணக்கத்தின் அடையாளமான தமிழக மண்ணில், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது  தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.

அதாவது இதற்கு முன்னர் இந்து மதம் குறித்து அவதூறாக பேசிய பாதிரியார் ஜார்ச் பொன்னய்யா குறித்தோ? இந்து மத கடவுள்களை கேலி பண்ணும் வகையில் வீடியோ வெளியிட்ட கறுப்பர் கூட்டம் மீதோ எந்த வித எதிர்ப்பையும் பதிவு செய்யாத ஜோதிமணி, தனது சமுதாயம் பாதிக்க படுவதாக குரல் எழுப்பிய மதுரை ஆத்தினத்திற்கு எதிராக மட்டும் கருத்து தெரிவிப்பதில் இருந்தே ஜோதிமணியின் நேர்மையை அறியலாம் என பலரும் பல விதமாக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

ஜோதி மணியின் அறிக்கை பல்வேறு விமர்சனங்களை பெற்று வருவதுடன் இந்துக்கள் மனதிலும் வேதனையை கொடுப்பதாக பலரும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.