24 special

சொந்த வீடு கட்ட வேண்டுமா?? அப்போ உடனே இந்த கோவிலுக்கு போங்க!!

HOUSE, TEMPLE
HOUSE, TEMPLE

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு கனவாகவே இருந்து வருகிறது. மேலும் சிலர் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை எப்படியாவது ஒரு சொந்த வீடு கட்டி விட வேண்டும் என்று ஓடி ஓடி உழைத்து வீடு கட்டுவதற்கான பணத்தினை சேர்த்து வைத்துக்கொண்டு உள்ளனர். சிலர் வாகனம் மற்றும் நகை போன்றவற்றை அதிகமாக வைத்திருப்பார்கள் ஆனால் அவர்களிடம் சொந்த வீடு என்பதே இல்லாத ஒன்றாகவே இருக்கும். மேலும் அவர்களுக்கும் சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற ஏக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கும். இந்த நிலையில் சொந்த வீடு கட்டுவதற்காகவே மக்கள் ஒரு கோவிலினை வழிபட்டு வருகின்றனர். இந்த குறிப்பிட்ட கோவிலுக்கு சென்று அங்கு சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதற்காக பலரும் ஒரு சில வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வழிபாடுகளை செய்து வந்தால் விரைவில் அவர்களுக்கு சொந்த வீடு கட்டும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அதன் பிறகு உண்மையாகவே சொந்த வீடினை கட்டி வேண்டுதல் நிறைவேறியதற்காக நேற்று கடன் செலுத்தும் விதமாக இந்த கோவிலுக்கு அதிக அளவில் மக்கள் வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் எங்கு உள்ளது மேலும் அங்கு மேற்கொள்ளும் வழிபாடுகள் என்ன என்பதை பற்றி விரிவாக காணலாம்.


தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்திரகோசமங்கை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிறப்பு வாய்ந்த திருத்தலம் தான் இந்த திருஉத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில்!!! இந்த கோவிலினை உத்திரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் என்றும் கூறுவார்கள். மங்களேசுவரி சமேத மங்களேசுவரர் என்னும் சிறப்பு வாய்ந்த சிவன் கோவிலும் இந்த இடத்தில் அமைந்துள்ளது. மேலும் இங்கு அமைந்திருக்கும் நடராஜரின் சிலை மீது ஆண்டு முழுவதும் சந்தன காப்பு அணிந்தே தான் இருக்கும். தற்போது இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் புதுவிதமான வேண்டுதல்களை நடத்தி வருகின்றனர். அது என்னவென்றால்!!சொந்த வீடு கட்ட வேண்டும் என்று கனவுகளை வைத்து கொண்டுள்ளவர்கள் பலவிதமான வேண்டுதல்களையும் முயற்சிகளையும் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த உத்தரகோசமங்கை திருக்கோவிலுக்கு வந்து அங்கு அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு மங்கள நாதர் சன்னதியில் உள்ள வடக்கு பிரகார பகுதியில் பலரும் சிறு சிறு கற்களை அடுக்கி வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு சிறுசிறு பொருட்களை அடுக்கி வைப்பதினால் அவர்களின் வீடு கட்டும் ஆசை நிறைவேறும் என்றும் அதற்காக இறைவன் வழி கொடுப்பார் என்று அனைவரும் நம்பி வருகின்றனர். 

மேலும் இது போன்று வழிபாடுகளை பின்பற்றி வருவதனால் இறைவன் தங்களின் கனவு இல்லத்தை நிஜமாக்கி கொடுப்பார் என்று பக்தர்கள் நம்பி வருகின்றனர். எனவே தினமும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அங்கங்க கிடக்கும் சிறு சிறு கற்களை சேகரித்து ஒன்றின் மீது ஒன்றாக அழகான வீடு போன்று அடுக்கி வைத்து தங்களின் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அவர்களிடம் இது குறித்து கேட்கும் பொழுது கூட மிகவும் உறுதியாக இதுபோன்று செய்தால் சொந்த வீடு கட்டி விடலாம் என்றும், இது போன்ற வழிபாடுகள் மேற்கொண்டு இதுவரை பலரும் வீடு கட்டி உள்ளதாகவும் கூறி வருகின்றனர். மேலும் சொந்த வீடு கட்டியவுடன் அவர்கள் அனைவரும் இந்த கோவிலுக்கு வந்து தங்களின் நேற்று கடன்களை செலுத்தி இறைவனுக்கு நன்றி செலுத்தி விட்டு செல்கின்றனர். சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இந்தக் கோவிலுக்கு அதிக அளவில் வந்து தற்போது இந்த வழிபாடுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.