Tamilnadu

வெயிட் அண்ட் சி இனிதான் ஆட்டமே இருக்கு! அதிலும் பிளான் பக்காவா இருக்கு!

Modi and ajit doval
Modi and ajit doval

பிரதமர் மோடி மூன்று வேளான் சட்டத்திருத்தங்களும் திரும்ப பெறப்படும் என அறிவித்து இருப்பது உண்மையில் அனைத்து தரப்பையும் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஒரு சேர கொடுத்துள்ளது.


பாஜகவினருக்கு நிறைவேற்றப்பட்ட நல்ல சட்டத்தை ஏன் திரும்ப பெறவேண்டும் என்ற அதிர்ச்சியும், பாஜகவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளுக்கு எப்படி மோடி அரசு சட்டத்தை திரும்ப பெற்றது என ஆச்சர்யமும் கலந்து காணப்படுகிறது, உண்மையில் மோடிதான் பேசினாரா என்று தற்போதுவரை எதிர்கட்சிகள் ஒன்றிற்கு இரண்டு முறை பிரதமர் பேசிய வீடியோவை திரும்ப திரும்ப பார்த்து பின்பே தங்களுக்கு வெற்றி  என்று அறிக்கை கொடுத்து இருக்கின்றன.

இது வெளிப்படையாக தெரிந்த ரகசியம்.. ஆனால் தெரியாத விஷயம் ஒன்று உள்ளது அதை கேட்டால் காலையில் பிரதமர் அறிவிப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்தவர்கள் மகிழ்ச்சியும், மகிழ்ச்சி அடைந்தவர்கள் கலக்கத்தையும் ஒரு சேர அடைவார்கள். சரி விஷயத்திற்குள் போகலாம்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கிய விவசாய போராட்டம் இன்று இந்த நிமிடம் வரை நீடிக்கிறது விரைவில் ஜனவரி மாதம் 26 ம் தேதி குடியரசு  தினவிழா நடைபெற இருக்கிறது, இந்த சூழலில்தான் வெளிநாட்டு அமைப்புகள் குறிப்பாக காலிஸ்தானி இயக்கம் ஆதரவு பெற்றவர்கள், தலைநகர் டெல்லியில் மிக பெரிய அளவில் போராட்டம் நடத்தலாம் எனவும்., குறிப்பாக சீக்கியர்கள் போர்வையில் இந்த போராட்டம் நடைபெறலாம் எனவும் உளவு அமைப்புகள் கண்டறிந்துள்ளன.

இது ஒருபுறம் என்றால் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை வீழ்த்திய வெளிநாட்டு இடதுசாரிய பத்திரிகை ஊடகங்கள் பிரதமர் மோடி ஒரு சர்வாதிகாரி என்றும்,  இந்துக்களை தவிர எந்த மதத்தினருக்கும் இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என இனிமே நடைபெற இருந்த கலவரத்தை சுட்டி காட்டி செய்திகளை கட்டமைக்க உலகம் முழுவதும் உள்ள இடதுசாரிய ஆதரவு ஊடகங்கள் தயாராக இருக்கின்றன என்ற தகவலும் உளவு துறை கண்டறிந்துள்ளது.

அடுத்தது இந்தியா மீது பாகிஸ்தான், சீனா என இரு நாட்டு எல்லைகளும் பதற்றத்தில் உள்ள நிலையை மிகவும் பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் இன ரீதியான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் உண்டாவது தற்போதைய நிலையில் நாட்டின் பாதுகாப்பிற்கு நல்லது இல்லை என்றும்  உளவு அமைப்புகள் கண்டறிந்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவளிடம் அறிக்கை கொடுத்துள்ளன.

இந்த சூழலில் சதி திட்டத்தை முறியடிக்க ராணுவத்தை களம் இறங்கினால் அது விவசாயிகள் மீதான தாக்குதல் என்றும் அதே நேரத்தில் சீக்கிய அமைப்பு மீதான தாக்குதல் என உலக அளவில் எப்படியாவது மோடியை வீழ்த்த வேண்டும் என காத்து இருக்கும் ஊடக முதலாளிகளுக்கும், பெரும் மருத்துவ கார்ப்பரேட் அமைப்புகளுக்கும் வாய்ப்பாக அமையும்..இந்த சூழலில்தான் இந்திய பிரதமர் மோடி முக்கியதுவமான முடிவை எடுத்துள்ளார்.

முன் வைத்த கால் பின்வைப்பது ஒன்றும் தவறு இல்லை ஆனால் தற்போது சீனாவில் இருந்து உலக நாடுகளின் முதலீடுகள் இந்தியாவில் மாற்றம்பெற்று வருகின்றன, உலகிலேயே பொருளாதார வல்லரசு நாடுகள் செய்யாத சாதனையாக இந்தியாவே கொரோனா தடுப்பூசியை கண்டறிந்து அதனை 100 கோடி முறை போட்டும் சாதனை படைத்துள்ளது.

உலகமே இப்போது மருத்துவ துறையில் இந்தியாவை நோக்கி நகரும் சூழலில் மிக பெரிய போராட்டம் வெடித்தால் அதனை கட்டுப்படுத்துவது எளிது ஆனால் அதன் இழப்பு பெரிதாக இருக்கலாம் என கணக்கிட்டு பிரதமரே நேரடியாக மக்களை சந்தித்து விவசாய சட்டத்தை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதனால் விவசாயிகள் போர்வையில் இந்தியாவில் பல்வேறு சதி செயல்களில் ஈடுபட நினைத்த கூட்டத்திற்கு பேரிடியாக அமைந்துள்ளது, உண்மையில் அரசியல் ரீதியாக இதை அணுகுவதை காட்டிலும், நாட்டின் பாதுகாப்பு கருதி இந்த முறை முன் வைத்த கால்களை பின்வத்துள்ளார் மோடி.. இன்னும் ஒன்று மோடி ஒரு விஷயத்தில் முன்வைத்த கால்களை பின் வைக்கிறார் என்றால் நிச்சயம் மிக பெரிய எதிர்வினை இருக்கிறது என குஜராத் மோடியை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

இனியும் டெல்லியில் விவசாயிகள் என்ற பெயரில் போராட்டம் தொடர்ந்தால்  அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அனைத்து திட்டங்களும் முறையாக தயார் படுத்தப்பட்டு, உள்துறை அமைச்சகம் மூலமும் மாநில ஆளுநர்கள் மூலமும் அனைத்து முன்னேற்பாடுகள் குறித்த தகவல்கள் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க கூடிய அதிகாரிகளுக்கு உத்தரவாக கொடுக்கப்பட்டு உள்ளதாம்.

கடந்த 60 நாட்களில் மட்டும் பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய IAS அதிகாரிகள் பலர் நாட்டின் எல்லைப்புற மாநிலங்களில் மாநில அரசு பணிக்கு அனுப்ப பட்டுள்ளனர் எனவும், இனி தான் ஆட்டமே இருக்கிறது என்றும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விவசாயிகள் போராட்டம் இனி எந்த வடிவம் எடுக்க போகிறது, இனி பிரதமர் உடனடியாக செய்ய போவது என்ன என்ற அடுத்தடுத்த தகவல்களை தொடர்ச்சியாக தெரிந்து கொள்ள TNNEWS24 DIGITAL YOUTUBE பக்கத்தை உடனே SUBSCRIBE செய்து கொள்ளவும்.