
தமிழக அரசியல் களம் மொத்தமாக மாறியுள்ளது. திமுக கூட்டணிக்குள் விரிசல் வந்துவிட்டது அதை மறைப்பதற்காக அதிமுக பாஜக என
மடை மாற்றி வருகிறது.குறிப்பாக காமராஜர் குறித்து திமுகவின் எம்.பி திருச்சி சிவா பேசியது காங்கிரஸ் சீனியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திமுகவுக்கு எதிராக போராட்டம் செய்ய மாநில தலைமையிடம் கேட்டபோது செல்வப்பெருந்தகை மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது ஒரு புறம் இருந்தால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோரை சந்தித்து பேசினர். பேசிய பின்னர் காமராஜர் சர்ச்சை விவகாரம் முடிந்துபோனது; காமராஜர் விஷயத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. என பேட்டி கொடுத்து திமுகவிடம் ஒட்டு மொத்தமாக சரணடைந்தார்.
இந்தநிலையில் இந்த பிரச்சனையை காங்கிரஸ் தலைமையிடம் கொண்டுசென்றுள்ளார்கள். செல்வப்பெருந்தகை மாநில தலைவராக தொடர்ந்தால் ஒட்டுமொத்த நாடார் சமூக ஓட்டுகளும் நமக்கு எதிராக திரும்பிவிடும் அதே போல் நாம் செல்வாக்காக இருக்கும் கன்னியாகுமாரி பகுதியை இழக்க நேரிடும் என தகவல் கொடுத்துவிட்டார்களாம். இதே போல் தான் ஆம்ஸ்ட்ராங் கொலை விஷயத்திலும் செல்வப்பெருந்தகை பெரிய அளவில் ஈடுபாடு காட்டவில்லை.
இதற்கிடையே தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் சந்திப்புகளை மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் வருகின்றன. அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியுடனான சந்திப்பு, அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சந்திப்பின் முக்கிய நோக்கம், தேர்தல் வியூகங்கள் குறித்து விவாதிப்பதாகும். முக்கியமாக திமுக - காங்கிரஸ் கூட்டணியை உடைப்பதற்கான திட்டம் இது என்றும் கூறுகிறார்கள்.இந்த மீட்டிங் நடந்தால் அது திமுகவை கடுமையாக அப்செட்டாகும் என்பதால், செல்வப்பெருந்தகை தடைபோட்டு வருகிறாராம்
மேலும் காங்கிரஸ் கட்சியில் சில சீனியர்கள் மட்டும், 'கட்சி அழிஞ்சிக்கிட்டு இருக்கு. காங்கிரஸ் வளரணும்னா திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியே வரவேண்டும். அது மட்டுமல்ல, கூட்டணி ஆட்சிக்கு தமிழக வெற்றிக்கழகம், தயாராக இருக்கிறது. அந்த கட்சியுடன் நாம் கூட்டணி வைத்தால் ஆட்சியில் காங்கிரஸுக்கு பங்கு கிடைக்கும். 50, 60 ஆண்டுகாலமாக அரசியல் அதிகாரம் காங்கிரஸுக்கு கிடைக்கவே இல்லை. அரசியல் அதிகாரம் கிடைக்க வேண்டுமானால் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது அவசியம்.. நமக்கு அமைச்சர் பதவிகள் கிடைத்தால்தான் கட்சி வளரும் என்று, சில சீனியர்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தியைச் சந்திக்க விஜய் நேரம் கேட்டுள்ளார் என்றும் தகவல்கள் வருகின்றன. விரைவில் இந்தச் சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கியதிலிருந்து, அவரது ஒவ்வொரு நகர்வும் கூர்மையாக கவனிக்கப்பட்டு வருகிறது. அவர், மக்களுக்கு என்ன செய்திகளைச் சொல்ல வருகிறார், அவரின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து அனைவரும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்த சந்திப்பு, அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக இருக்கும்.
ஆனால் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, எனக்கு இந்த மீட்டிங் பற்றி எதுவும் தெரியாது. எந்த தகவலும் வரவில்லை. உங்களுக்கு தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு உள்ளார். இதனால் உண்மையில் இருவருக்கும் இடையில் சந்திப்பு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.