திருமாவளவனை தெறிக்கவிட்ட வேலூர் இப்ராஹிம் !Thirumavalavan
Thirumavalavan

பெற்றோரை இழந்த இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்க்கும்  நிகழ்வு கோவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட வேலூர் இப்ராஹிம் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து இருக்கின்றார்.

அதில் குறிப்பாக பாஜக இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்சி என திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தொடர்ந்து பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் பாஜக என்பது அனைவருக்குமான கட்சி. முதலில் விசிக தலைவர் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அந்தக் கட்சியில் உள்ளவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். பாஜக அனைவருக்குமான கட்சி இஸ்லாமிய கிறிஸ்தவ இந்து ஏழை மாணவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்வதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

 யாராவது தேசத்திற்கு எதிராக பிரிவினைவாதம் தூண்டும் விதத்தில் தீவிரவாத சக்திகளை ஊக்குவித்தால் கட்டாயம் அதனை பாஜக எதிர்க்கும். தமிழகத்தில் மதுபான கடைகள், தியேட்டர்கள் உள்ளிட்ட கூட்டம் அதிகம் சேரும் பல இடங்கள் திறக்கப்பட்டு இருக்கு. ஆனால் அங்கெல்லாம் கொரோனா பரவாதாம். சுத்தமாக குளித்து, தூய்மையாக கடவுளை வணங்கச் செல்லும் கோவில்களில் மட்டும் கரோனா பரவுமாம். ஆனால் கோவிலை திறக்க கூடாது என கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது திமுக. திமுக எப்போதும் இந்து விரோத கட்சி என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 10 நாட்கள் கால அவகாசம் கொடுத்து இருக்கிறார். அதற்குள் கட்டுப்பாடுகளை நீக்கிவிட்டு கோவில் திறக்க அனுமதி அளித்தால் நல்லது. இல்லையென்றால் மிகப்பெரிய போராட்டம் நடக்கும். நான் எங்கு சென்றாலும் விசிக தொண்டர்கள் எனக்கு எதிராக வன்முறையை தூண்டி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். முதலில் தலைவர் திருமாவளவன் எந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவங்க செய்வதைப் பார்த்தால் இஸ்லாமியர்களையும்  கிறிஸ்தவர்களையும் காக்க வந்தவர் போல் பில்டப் கொடுப்பார். ஆனால் அவர்களை ரவுடிகளாக மாற்ற முயற்சி செய்கிறார்.

தமிழகத்தில் பிரிவினைவாதம் தூண்டும் விதமாக made in tamilnadu என உருவாக்க முயற்சி நடைபெறுகிறது. ஆனால் வெளி மாநிலத்தில் இருந்து பருப்பு உட்பட பல பொருட்கள் தமிழகத்திற்கு வருகிறது. அப்படி இருக்கும்போது எப்படி மேட் இன் தமிழ்நாடு வரும் ?  திமுக ஆட்சியில் காவல்துறை தன் கட்டுப்பாட்டில் வைத்து தான் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து, அதற்கான ரிசல்ட்டும் இப்போது கிடைத்திருக்கிறது என வெளிப்படையாக குறிப்பிட்டிருக்கிறார் வேலூர் இப்ராஹிம்.

Share at :

Recent posts

View all posts

Reach out