Tamilnadu

பல்லேலக்கா பாட்டு பாடிய வீரமணி ஓ அதுதான் ஸ்டாலின் வீரமணியை வீட்டு பக்கமே சேர்ப்பது இல்லையா?

Veeramani
Veeramani

திராவிட. கழக தலைவர் வீரமணி என்னதான் திமுக ஆட்சியை புகழ்ந்து பேசினாலும், முதல்வர் ஸ்டாலினை உயர்த்தி பேசினாலும் வீரமணியை ஸ்டாலின் வைக்க வேண்டிய இடத்தில் வைத்துள்ளார், சுபவீக்கு கொடுக்க கூடிய முக்கியத்துவம் கூட வீரமணிக்கு கொடுக்கப்படவில்லை என்பது அறிவாலய வட்டாரங்கள் அறிந்த ரகசியம்.


இதற்கு ஜெயலலிதா ஆட்சிகாலத்தில் கருணாநிதி நடு ராத்திரியில் கைது செய்யப்பட்டு இழுத்து சென்றபோது, திமுக தொண்டர்களும், கருணாநிதி குடும்பத்தினரும் கதறி அழுது கொண்டு இருந்த நிலையில் அதனை வரவேற்று ஷாஜகன் - மும்தாஜ் கதை சொல்லி வரவேற்று திமுக தொண்டர்களின் மனதில் வேல் பாய்ச்சியுள்ளார்.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவு வைரலாகி வருகிறது அதில் மறைந்த முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி அவர்களை அதிமுக அரசில் கைது செய்த போது அதை பகிரங்கமாக ஆதரித்து மேடைகள்தோறும் முழங்கியவர் கி.வீரமணி..

போலீஸ் அதிகாரி சொல்லுகின்றார்.அய்யா உங்கள் மீது மேம்பாலம் கட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சொல்லுகின்றார்.உடனே,முன்னாள் முதல்வர் தி.மு.க. தலைவர் கேள்வி கேட்கின்றார் பாலம் நானா கட்டினேன்? என்று.  பொது மக்களே இனிமேல் உங்களுடைய பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள் தாஜ்மகாலை யார் கட்டியது என்றால், ஆக்ராவிலே இருந்த கொத்தனார் என்று சொல்லிக் கொடுங்கள்.தயவு செய்து மும்தாஜ், ஷாஜகான் பெயரைச் சொல்லாதீர்கள் என கிண்டல் அடித்து பல்லேலக்கா பாடியுள்ளார் வீரமணி.

இப்படியெல்லாம் அவருடைய கைதையும்,அவர் கைதுக்கு ஒத்துழைக்காததையும் இணைத்து கேலி பேசினார்.என்றுமே இவர் நமக்கு ஒத்து வரமாட்டார் என்று தெரிந்துதான் 1987 லேயே திமுவுகக்கும்,தி.கவுக்கும் சம்பந்தமில்லை,வீரமணியோடு கழகத் தோழர்கள் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என்றார் திமுக தலைவர் கருணாநிதி இது வேறு.

திமுக தலைவர் கருணாநிதியை கைது செய்த போது NDA கூட்டணி சார்பாக ஜார்ஜ் பெர்னான்டஸ் மத்திய சிறையில் கருணாநிதியை சந்தித்து பேசினார், அப்போது திமுக தலைவருக்கு ஏசி வசதி செய்து தரச்சொல்லி ஜார்ஜ் பெர்னான்டஸ் கோரிக்கை வைத்தார்.

அப்போது கொதித்தெழுந்த கி.வீரமணி,அடிப்படை அறிவிருப்பவன் கேட்பானா? இப்படி யாருக்கு இதற்கும் முன்னால் அப்படி செய்து தரப்பட்டதுள்ளது? இது பலமுறை சிறைசென்ற பெர்னான்டஸ் அவர்களுக்கு தெரியாதா? சிறை என்றால் 'மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை' என்று சொன்ன கருணாநிதியார் இப்போது ஏசி கேட்டால் என்ன அர்த்தம்? என  அறிக்கை விடுத்து ஒட்டுமொத்த திமுகவினர் துக்கத்தில் கொண்டாட்டம் செய்துள்ளார்.

அதுமட்டுமல்ல,பாஜகவும் - திமுகவும் சேர்ந்து சதி செய்து சமூகநீதி காத்த வீராங்கணையின் அதிமுக ஆட்சியை கலைக்க பார்க்கிறது என,பிரச்சனையை திசைதிருப்பி மத்திய அரசுக்கு செக் வைக்க நினைத்தவர் கி.வீரமணி என்பதை வரலாறு தெரிந்தவர்கள் மறக்க மாட்டார்கள் என அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையான திமுக தொண்டர்களும், கருணாநிதி குடும்பத்தினரும் எப்போதும் மறக்கமாட்டார்கள் அப்படி இருக்கையில் கருணாநிதியின் வாரிசு ஸ்டாலின் மறப்பாரா? அதுதான் வீரமணியை வைக்கவேண்டிய இடத்தில் ஸ்டாலின் வைத்து இருக்கிறார் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.