Cinema

ராஜபக்சே கருத்து சொன்ன வைரமுத்து வடை "சாப்பிட்டீங்களா" கிண்டல் செய்த எழுத்தாளர்!

Vairamuthu Cinema Vadai
Vairamuthu Cinema Vadai

பிரபல திரைப்பட பாடல் ஆசிரியரும் கவிஞருமான வைரமுத்து ஒரு காலத்தில் பலராலும் மதிக்கப்பட கூடிய இடத்தில் இருந்தவர் எப்போதும் metoo விவகாரத்தில் வைரமுத்து பெயர் சிக்கியதோ அன்றில் இருந்தே வைரமுத்து தொடர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.


இந்த சூழலில் இலங்கையில் நடைபெறும் அந்நாட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து இருந்தார் வைரமுத்து அதில், நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் 'தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே..ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே.?ஓ சர்வதேச சமூகமே! இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு என கவிதை எழுதி இருந்தார்.

இதற்கு பிரபல எழுத்தாளர் ஸ்டான்லி ராஜன் பதிலடி கொடுத்துள்ளார் அதில், ராஜபக்சே தப்பி ஓட்டம் சர்வதேச சமூகமே தமிழனின் வீரத்திற்கு தலைவணங்கு : வைரமுத்து கவிதைஆக ராஜபக்சே வீட்டை கொளுத்தியதும் அவரை ஓட விரட்டியதும் சிங்கள மக்கள் அல்ல, இலங்கை மக்கள் அல்ல தமிழர்கள் என்பது போல சொல்லவருகின்றார் கவிஞர்.

அப்பட்டமான உளறல் என்றால் இதுதான், தமிழ் ஜிப்மர் மருத்துவமனையில் உள்ளது என முன்னதாக கவிஞர் சொல்லியிருந்தார் "கொலம்பஸ் விட்டாச்சி லீவு..." "சென்னோரிட்டா.. சென்னோரிட்டா" என தமிழ்பாடல் எழுதி தமிழை ஜிப்மருக்கு ஏற்றிவிட்டது யாரென்றால் இவரேதான்

"தீவானா தீவானா" என தமிழில் இந்திபாடல் எழுதியது யாரென்றால் அதுவும் அவரேதான் ஏன் இப்படி ஆகிவிட்டார் கவிஞர்? கருணாநிதி சமாதியின் தயிர்வடையினை தின்று தொலைத்திருப்பார் போலிருக்கின்றது என நக்கலாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் ஸ்டான்லி ராஜன்.