
மதுரை மாநகராட்சியில் உருவாகியுள்ள குழப்பமும், அதன் பின்னணியில் தெரியும் திமுக அரசின் நிர்வாகத் தோல்வியும் மதுரையை நிலைகுலைய செய்துள்ளது. உலக அளவில் தலைகுனிந்த நகரமாக மாறியுள்ளது மதுரை. மதுரை எனும் பெருநகரத்தின் சுகாதாரமும், வாழ்வாதாரமும், அடிப்படை வசதிகளும் மோசமாகி உள்ளது.. ஒருகாலத்தில் தூங்கா நகரம், கோவில் நகரம், திருவிழா நகரம் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட மதுரை, இன்று குப்பை தேங்கிய தெருக்களால், துர்நாற்றம் வீசும் சாலைகளால், குடிநீர் பிரச்சனை, கழிவுநீர் கசிவு என குப்பை நகரமாக மாறியுள்ளது.
இதற்கு காரணம் திமுக அரசு மட்டுமே என மக்கள் குமுறுகிறார்கள். மாநகராட்சி சொத்து வரி வசூலில் 200 கோடி ரூபாய் ஊழலில் திளைத்தது அந்த ஊழலில் மாட்டிய அதிகாரிகள், ஊழியர்கள் எனக் கூட்டமாக கைது செய்யப்பட்டனர். திமுக மேயர் இந்திராணியின் கணவர், மண்டலத் தலைவர் கணவர், உதவி ஆணையர் உள்ளிட்ட 23 பேர் கைது செய்யப்பட்டதும், பின்னர் ஐந்து மண்டலத் தலைவர்கள், இரண்டு குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்ததும், அதேசமயம் மேயரே பதவி விலகியதும், மாநகராட்சி நிர்வாகம் முழுதும் சிதைவுக்கு உள்ளானது. இதுவரை இந்த அளவுக்கு பெரிய ஊழல் வெடித்ததும் அதற்குப் பின்னர் நிர்வாகம் முடக்கப்பட்டது தமிழக அரசியலிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இதனை தொடர்ந்து மேயர் பதவி காலியாகிய தினம் முதல் இன்று வரை புதிய மேயரைத் தேர்வு செய்வதில் திமுக அரசு எந்தத் தீர்மானத்திற்கும் வரவில்லை. காரணம் திமுகவில் உட்கட்சி போட்டிஅமைச்சர் மூர்த்தி, அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்டச் செயலாளர் கோ. தளபதி ஆகியோர் தங்களுக்கு நெருக்கமானவர்களை உள்ளவர்களை மேயர் பதவிக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறார்கள்..
இதன் விளைவாக 100 வார்டுகளிலும் அனைத்து திட்டப் பணிகளும் நின்று கிடக்கின்றன.. இதனால் கழிவுநீர் வீதிகளில்ஓடுகிறது . குப்பை அகற்றும் வாகனங்கள் சரியாக இயக்கப்படாததால் தெருக்களில் குப்பை குவியல்கள் உருவாகுகின்றன. சுகாதார அவசரநிலை உருவாகும் அளவுக்கு ஆபத்தான சூழல். மதுரையில் உருவாகி உள்ளது. சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை “எப்போது என்ன நோய் வந்து பிடிக்கும்?” என்ற கவலையோடு வாழ வேண்டியநிலை. ஏற்பட்டுள்ளது.
இப்படி மதுரை மாநகராட்சி ஊழலில் திளைத்து உட்கட்சி பிரச்சனையால்மக்களின் வாழ்வாதரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது திராவிட மாடல் அரசு. இதில் மெட்ரோ வரவில்லை என ஒரு பொய்யை கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின். திமுக அரசு இந்த பிரச்சனைக்குவிரைவில் தீர்வு காண வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லாமல், கட்சிக்குள் யாருடைய ஆதிக்கம் மேலோங்கும் என்பதற்கான போட்டியிலேயே நேரத்தை வீணடித்து வருவது மக்கள் கண்முன்னே வெளிப்படையாக ஆகிவிட்டது. இது வெறும் தாமதம் இல்லை; ஒரு நகரத்தின் அடிப்படை பணிகளைத் தகர்க்கும் அளவுக்கு பெரிய நிர்வாகத் தோல்வி.திமுகவினுள்யார் யாருடன் போட்டி போடுகிறீர்கள் என்பது எங்கள் பிரச்சனை அல்ல; .” அரசியல் கணக்குகளைச் சரி செய்வதற்குள், நகரம் முழுவதையும் குப்பை மற்றும் நோய்களில் மூழ்கவிடாதீர்கள் இது வெறும் மதுரையின் பிரச்சனை மட்டுமல்ல; திமுக அரசின் கண்கூடும் நிர்வாகத் தோல்வியாக வரலாறு எழுதும்.மதுரையை மீண்டும் தூங்கா நகரமாக மாற்ற வேண்டுமென்றால், முதலில் அரசின் தூக்கம் கலைவது அவசியம் என்பதை இன்று மதுரைவாசிகள் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும்நினைவூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
