
பிரதமர் மோடியின் சமீபத்திய கோவைப் பயணம், சத்தமில்லாமல் பல அதிர்வுகளைத் தமிழக அரசியல் களத்துக்குள் ஏற்படுத்தியிருக்கிறது. இயற்கை விவசாயிகளின் மாநாட்டைத் தொடங்கிவைப்பதற்காக கோவைக்கு வந்திருந்த பிரதமரிடம், தி.மு.க-வின் ஆறு அமைச்சர்கள் மீதிருக்கும் புகார் விவரங்களைக் கொடுத்துள்ளார்கள்.பிரதமருடன் ஒன்றாக காரில் பயணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி,ஊழல் குற்றசாட்டுகளை அடங்கிய அமைச்சர்கள் பெயரையும் அதன் விவரங்களையும் கொளுத்திப்போட்டிருக்கிறார்.. கோவையில் பிரதமர் இருந்தது என்னவோ சில மணி நேரம்தான் என்றாலும், அதற்குள்ளாகவே பல காய்நகர்த்தல்களும் சந்திப்புகளும் நடந்திருக்கின்றன!
கடந்த இரண்டு வருடங்களாக, தமிழகமெங்கும் இயற்கை விவசாயிகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாகப் பங்கெடுத்துவருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. முசிறியிலுள்ள தனியார் வேளாண் கல்லூரியில் இயற்கை விவசாயிகளுடன் ஆளுநர் பொங்கல் விழாவைக் கொண்டாடியதும், தமிழக விவசாயிகள் பிரச்னை தொடர்பாக மத்திய விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் செளகானுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் பலரது புருவங்களையும் உயர்த்தின.
இந்த நிலையில் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் மாஜி அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர்மீது பல்வேறு புகார்களும் வழக்குகளும் நிலுவையில் இருக்கின்றன. இவர்களில் பலர்மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை விசாரணையெல்லாம் நடந்திருக்கின்றன. ஆனால், தநீதிமன்றத்தில் இருப்பதால் சற்று தாமதமாகி உள்ளது. டாஸ்மாக், மணல் வியாபாரம் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணையும்கூட இனி தொடங்க உள்ளது. ‘ராம்சர் நிலம்’ என்று வகைப்படுத்தப்பட்ட பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தையே கூறுபோட்டு கட்டடம் கட்டுவதற்கு அனுமதியளித்துவிட்டது தி.மு.க அரசு. அதை சி.பி.ஐ விசாரித்தால், தி.மு.க மேலிடத்துக்கே பெரிய அளவில் நெருக்கடி வரும். என்ற தகவல்கள் பிரதமர் காதில் போட்டுள்ளார்கள்.
‘எந்தெந்த அமைச்சர்கள் மீதெல்லாம் சொத்துக்குவிப்பு வழக்குகளும், லஞ்ச ஒழிப்புத்துறையில் அவர்களின் துறை சார்ந்த புகார்களும் நிலுவையில் இருக்கின்றன’ என்பதை ஃபைல்களாக பென் டிரைவில் கொடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் கோவை விமான நிலையத்திலிருந்து கொடிசியா அரங்கம் வரையில், பிரதமருடன் ஒன்றாக காரில் சுமார் 15 நிமிடங்கள் பயணித்த ஆளுநர் ஆர்.என்.ரவியும் திமுக அரசில் நிர்வாக சீர்கேடுகளை புள்ளி விவரங்களுடன் கொடுத்துள்ளாராம்.
குறிப்பாக “அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்கு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் பணியாற்றுவது போன்று போலியாகக் கணக்கு காட்டியதாகச் சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. ‘ஒரே பேராசிரியர் 11 கல்லூரிகளில் பணிபுரிவதாகக் கணக்கு காட்டப்பட்டிருக்கிறது. முறைகேடு செய்து 224 கல்லூரிகள் அங்கீகாரம் பெற்றிருக்கின்றன...’ என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையும் வழக்கு பதிந்தது. அதைப் பிரதமரிடம் விளக்கியுள்ளார் ஆளுநர் ரவி,
இந்த விவகாரத்தில் சில அதிகாரிகள்மீது மட்டுமே வழக்கு பதியப்பட்டிருக்கிறது. அரசியல்வாதிகள் தப்பிவிட்டனர்.கல்வித்துறையில் மட்டுமல்ல, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை, உணவுப்பொருள் வழங்கல்துறை என்று எந்தத் துறையை எடுத்தாலும், அதில் தி.மு.க-வினர் முறைகேடு செய்திருக்கிறார்கள். அந்த முறைகேடுகளை இப்போது விசாரித்து நடவடிக்கை எடுத்தால், அரசியல்ரீதியாகவும் நமக்குக் கைகொடுக்கும். தேர்தல் நெருக்கத்தில் விசாரித்தால், அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லிவிடுவார்கள்’ என்று ஆளுநர் எச்சரிக்கவும், கவனமாகக் கேட்டுக்கொண்டாராம் பிரதமர் மோடி. ஆளுநர் சொல்லியிருக்கும் புகார்களில் விரைவிலேயே நடவடிக்கைகள் பாயலாம்”
காரில் பா.ஜ.க கூட்டணி பெற்ற அதே பிரமாண்ட வெற்றியை, தமிழகத்திலும் பெற வேண்டும் என்கிற துடிப்பில் இருக்கிறது பா.ஜ.க. டப்பாடி இந்த நிலையில் ஆளுநர் ரவி மற்றும் எதிர்க்கட்சிகள் அளித்திருக்கும் புகார்களின் அடிப்படையில், தி.மு.க-மீது இனி அதிரடி ஆக்ஷன்கள் பாயலாம். புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகலாம். அதையெல்லாம், தி.மு.க எப்படிக் கையாளப்போகிறது என்பது தெரியவில்லை. `விவசாயிகள் மாநாடு மட்டுமல்ல இது , தமிழகத் தேர்தல் முன்னேற்பாடுகளைத் தமிழகத்தில் தொடங்கிவிட்டார் பிரதமர். இனி பரபரப்புகளுக்கும் ட்விஸ்ட்டுகளுக்கும் பஞ்சமிருக்காது!
