
இந்த சட்டம் தான் வேணும் ஒட்டு மொத்த தொழிலாளர்களும் மோடிக்கு ஆதரவாக திரண்ட சம்பவம் தொழிலாளர்களின் இந்திய தொழிலாளர் வரலாற்றில் புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார் பிரதமர் மோடி. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன. தொழிலாளர்கள் நலனை முதன்மையாக வைத்து செயல்படும் பிரதமர் நரேந்திர மோடி அரசின் மிகப் பெரிய வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் இது என்று நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு அடிப்படை மாற்றங்கள் கொண்டு வருவது இதுவே முதன்முறையாகும். தொழிலாளர் உரிமை, வேலைப் பாதுகாப்பு, நியாயமான ஊதியம், சமூகப் பாதுகாப்பு. எந்த துறையில் வேலை செய்தாலும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் நேரடி பலன் கிடைக்கும்படி இந்தச் சட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதனால் பரவலான நம்பிக்கை, பெரும் எதிர்பார்ப்பு—இவை இரண்டும் நாட்டின் முழு தொழிலாளர் சமூகத்திலும் எழுந்துள்ளன.
முதல் முக்கிய மாற்றம்—இனி எந்த தொழிலாளரையும் வேலைக்கு எடுக்கும் போது கட்டாயமாக எழுத்துப்பூர்வமான நியமனக் கடிதம் வழங்கப்பட வேண்டும். இதுவரை வாய்மொழி நியமனம் காரணமாக அநீதி, திடீர் பணி நீக்கம், ஊதிய சிக்கல்கள்… பல பிரச்சினைகளை சந்தித்திருந்தவர்கள், இனிமேல் சட்ட ரீதியான பாதுகாப்பைப் பெறுகிறார்கள். வேலைவாய்ப்பு துறையில் இது ஒரு புரட்சிகரமான முன்னேற்றம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். “ஒவ்வொரு உழைப்பும் மதிப்பு பெற வேண்டும் என்ற மோடியின் கருத்து நேரடியாகச் சட்டமாக மாறியிருக்கிறது.
அடுத்து—PF, ESIC, மருத்துவ மற்றும் விபத்து காப்பீடு போன்ற அனைத்து சமூகப் பாதுகாப்பு சலுகைகளும், தொழிலாளர் எந்த வகை வேலை செய்தாலும், அனைவருக்கும் கிடைக்க உறுதி செய்யப்பட்டுள்ளது. கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்துக்கும் இது நிம்மதியும் பாதுகாப்பும் தரும் மிகப் பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. “உழைக்கும் மக்களுக்கு துணைவனாய் நிற்கும் அரசு மோடி அரசு தான்” என்ற கருத்து வலுவாகப் நிரூபிக்கப்ட்டுள்ளது.
மூன்றாவது—அனைத்து தொழிலாளர்களுக்கும் சட்டப்படி குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும். மேலும், ஊதியம் குறித்த நேரத்தில் வழங்கப்பட வேண்டும் என்பதையும் சட்டம் கட்டாயப்படுத்துகிறது.. மேலும் கூடுதல் நேர வேலைக்கு இரட்டை ஊதியம் வழங்க உத்தரவாதம்ஆபத்தான துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு" இது தொழிலாளர்களின் நிதி நிலைத்தன்மையை உயர்த்துவதோடு, குடும்ப நலனும் மேம்பட வழி செய்யும். உழைக்கும் மக்கள் நிம்மதியாக வேலை செய்யக்கூடிய சூழல் உருவாகும்
இந்த நான்கு புதிய தொழிலாளர் சட்டங்கள், இந்திய தொழிலாளர் துறைக்கு புதிய யுகத்தைத் தொடங்கும் வகையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. உழைக்கும் மக்களின் வாழ்க்கையை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் அரசு எடுத்துள்ள இந்த ஒரு முடிவு, “இதயம் தொழிலாளர்களுக்காக இடித்தடிக்கும் அரசு” என்ற உணர்வை நாட்டின் மனதில் நிலையாக பதிய வைத்திருக்கிறது.
இந்தச் சட்டங்கள் அமலுக்கு வந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கை, தொழிலாளர் சமுதாயத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. “இன்று என் உழைக்கும் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்” என அவர் கூறினார். சுதந்திரத்திற்குப் பிறகு தொழிலாளர் நலனுக்காக எடுக்கப்பட்ட மிகப் பெரிய சீர்திருத்தம் இதுவே என்றும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி புதிய உயரத்துக்குச் செல்லும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும் பெண்களுக்கு, இளைஞர்களுக்கு, மற்றும் ஒவ்வொரு உழைக்கும் இந்தியருக்கும் பாதுகாப்பு, வாய்ப்பு, முன்னேற்றம் ஆகியவற்றை இந்தச் சட்டங்கள் வழங்கும் என்று பிரதமர் கூறியுள்ளார் .
மத்திய அமைச்சர் மன்சுக் மண்டவியா, கூறுகையில் இந்தச் சீர்திருத்தங்களை சாதாரண மாற்றங்கள் அல்ல; பிரதமர் மோடி எடுத்த மிகத் துணிச்சலான, மிகப் பெரிய தொழிலாளர் நல நடவடிக்கை என பாராட்டினார். தொழிலாளர்களின் நலனே நாட்டின் வளர்ச்சியின் அடிப்படை என்பதை உணர்ந்து செயல்பட்டதற்காக தொழிலாளர் வட்டாரங்களும் அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளன.
