Tamilnadu

இதுதான் எங்கள் பாஜக பலம் அடித்து கூறிய பேராசிரியர்..! வரலாறு சொல்லும் செய்தி..!

Professor
Professor

பாஜக எப்படி தேர்தல்களை எதிர்கொண்டு வெற்றி பெறுகிறது என பல்வேறு கட்டுரைகள் அரசியல் அலசல்கள் என பலரும் புத்தகம் முதல் முன்னணி நாளிதழ்களில் கட்டுரைகள்  வரை விரிவாக எழுதிக்கொண்டு இருக்கும் சூழலில் மக்களுக்கு குறிப்பாக இளையதலைமுறைக்கு புரியும் வண்ணம் தெளிவாக எடுத்துக்காட்டுகளுடன் பொட்டில் அடித்தது போன்று விளக்கி இருக்கிறார் பாஜக மாநில பொது செயலாளர் பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன்.


இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசுகையில் காங்கிரஸ் கட்சியை விட்டு பிரிந்து சென்றவர்கள் எல்லாம் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளனர் மம்தா பேனர்ஜி, சரத் பவார், மூப்பனார் என பலரும் காங்கிரஸ் கட்சியை உடைத்து கொண்டு போனார்கள் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்கள் ஆனால் பாஜகவை விட்டு சென்ற தலைவர்கள் எல்லாம் தோல்வியை தழுவினார்கள் தோல்வி அடைந்ததோடு மட்டும் இல்லாமல் மீண்டும் பாஜகவில் இணைந்தார்கள்,இப்போது சொல்லுங்கள் பாஜக மற்ற கட்சிகளில் இருந்து மாறுபட்டதா இல்லையா என கூறினார்.

அதாவது பாஜக தலைவர்களை நம்பி இருக்கும் இயக்கமல்ல, கொள்கையையும், தொண்டர்களையும் நம்பி இருக்கும் இயக்கம் என்பதை தெளிவாக உணர்த்தியுள்ளார் பேராசிரியர், பாஜகவின் வெற்றிக்கான காரணம் என்ன என இதன் மூலம் புரிந்து கொள்ளலாம், இது மட்டுமல்ல சமீபத்தில் தேனி மாவட்டத்தில் ஆர் எஸ் எஸ் பொறுப்பாளர் வெட்டப்பட்ட சம்பவத்தில் குண்டர் சட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது இதில் தலைமை தாங்கிய பேராசிரியர் இராம. ஸ்ரீனிவாசன் தெரிவித்த கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

குற்றவாளி ஒருவன் முதலில் வாட்ச் மேனைதான் குறிவைப்பான் ஏன் என்றால் அவனை தாக்கினால் தான் முதலாளியை குறிவைக்க முடியும் அது போல் பயங்கர வாதிகளின் குறி ஆர் எஸ் எஸ் இயக்கமோ அல்லது பாஜகவோ அல்ல நாங்கள் வாட்ச் மேன், அவர்களின் உண்மையான குறி பாரத அன்னை என குறிப்பிட்டு பேசி இருக்கிறார் இந்த விடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது, சாமானியருக்கும் நாட்டு நடப்புகள் புரியும் வண்ணம் பேராசிரியர் பேசியிருப்பது மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

வைரலாகும் வீடியோ காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன,