24 special

பிரம்மாண்டமாக இந்தோனேசியாவில் அமைக்கப்பட்டுள்ள கருட பெருமானுக்கான கோவில்!!!

KARUDA PERUMAL
KARUDA PERUMAL

உலகில் பல அதிசயம் நிறைந்த கோவில்கள் எங்கு பார்த்தாலும் நிறைந்துள்ளது. அதில் சில கோள்களின் அமைப்பை பார்த்தாலே மிகவும் பிரம்மாண்டமாகவும், வித்தியாசமானதாகவும் அமைந்திருப்பது மிகவும் அரிதான ஒன்றாகவே இருந்து வருகிறது. அந்த வகையில் தற்போது கருடன் போல உருவம் அமைக்கப்பட்டு  பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டு இருக்கும் கோவில்!! திடீரென அமைக்கப்பட்ட மர்மம்...உலகில் பல இடங்களில் பல்வேறுபட்ட தெய்வங்களுக்கு ஒவ்வொரு விதமான கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அது கருட பெருமானுக்காகவே சிறப்பாக அமைக்கப்பட்டு  தனித்தன்மை வாய்ந்த கட்டமைப்புடன் அமைந்திருப்பது தான் இந்தோனேசியாவில் அமைக்கப்பட்டுள்ள கருட கோவில் ஆகும். பறவைகளில் மயில் எந்த அளவிற்கு தெய்வமாக வணங்கப்படுகிறதோ!! அதே அளவிற்கு கருடனும் பறவை விதத்தில் ஒரு தெய்வமாகவே வழிபட்டு வருகின்றனர்.


ஆனால் மயில் என்பது முருகனுக்கு உகந்ததாகவும், கருடன் என்பது எம்பெருமானுக்கு முகர்ந்த ஒரு வாகனமாகவும் தற்போது வரையிலும்  போற்றப்பட்டு வருகிறது. மேலும் வைணவ மதத்தை சேர்ந்தவர்கள் கருட பெருமானை பெரிய திருவடியாக நினைத்துப் போற்றி வருகின்றனர். திருமாலை வழிபடுபவர்கள் பெரும்பாலும் கருடனையும் வழிபட்டு தான் செல்வார்கள் என்று அனைவரும் கூறுகின்றனர். எம்பெருமான் எத்தனையோ வாகனங்களில் உலா வந்தாலும் கூட இந்த கருட வாகனத்தில் பவனி வருவது என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகவே அமைந்து வருகிறது. இதற்காகவே திருவிழாக்களில் கூட இன்றளவும் கருட வாகனத்தில் ஒரு அவதாரம் எடுத்து வருகிறார் எம்பெருமான். மேலும் எம்பெருமானே தரிசிக்கும் பொழுது அவரின் வாகனமானது கருட வாகனமாக இருக்கும் பொழுது தரிசித்தால் அது மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றாகவே இன்று உள்ள மக்கள் அனைவரும் கருதி வருகின்றனர்.

மேலும் அவ்வாறு கருட வாகனத்தில் எம்பெருமானை தரிசித்தால் மிகவும் புண்ணியமான ஒரு வாழ்க்கையை அடைய முடியும் என்றும் அனைவரும் நினைக்கின்றனர். இப்படி அதிக அளவில் சிறப்புகளை வாய்ந்த கருட பெருமானுக்கு இந்தோனேசியாவில் அமைக்கப்பட்டுள்ள கோவிலானது  பாலியல் உள்ள கலாச்சார பூங்காவில் தான் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கென்கானா கருட விஷ்ணுவின் சிலையானது செம்பு பித்தளை மற்றும் துருப்பிடிக்காத இரும்பு போன்ற பொருட்களால் செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கு அமைந்திருக்கும் கருட சிலையை 21,000 இரும்பு இரும்பு பாளங்கள் கொண்டும்  மற்றும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நட்புகளை பயன்படுத்தியும் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சிலையானது 122 மீட்டர் உயரமும், 66 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த சிலையை அமைக்க சுமார் 28 ஆண்டுகள் முழுமையாக எடுத்துக் கொண்டனர் என்று கூறப்படுகிறது.

இந்த சிலையை கட்டி முடிப்பதற்கு சுமார் ரூபாய் 740 கோடி செலவாகியது என்று கூறப்படுகிறது. இந்த சிலையினை பார்த்து வல்லுநர்கள் கிட்டத்தட்ட 4000 டன் எடை இருக்கும் என்று கூறுகின்றனர். இங்கு அமைந்திருக்கும் கருட பெருமானை தரிசிக்க வேண்டும் என்று உலகின் பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் அதிக அளவில் கூட்டம் கூட்டமாக இந்தோனேசியாவிற்கு வந்து இந்த கோவிலில் வழிபட்டு செல்கின்றனர். இந்த பாலியல் பூங்காவானது தினமும் காலை எட்டு மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இது போன்ற கோவில் எங்கும் இல்லாததால் அதை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்திலும், ஏற்கனவே இந்த கோவிலுக்கு வந்து அவர்களின் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்களினால் தொடர்ந்து அடுத்த முறையில் வந்து தரிசித்து செல்லும் மக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றனர். நீங்களும் இந்தோனேசியாவிற்கு செல்வதற்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் ஒருமுறையாவது இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!!