24 special

கர்நாடகாவில் திருமாவளவனின் பேச்சு.. வைரலாகும் வீடியோ..!

Thirumavalavan
Thirumavalavan

தமிழகத்தில் மக்களவை தேர்தல் முடிவடைந்த நிலையில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்து வரும் விசிக கட்சி தலைவர் திருமாவளவன் இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக கர்நாடகாவில் பரப்புரை மேற்கொண்டார். நேற்று கர்நாடகாவில் திருமாவளவன் பேசிய பேச்சு அரசியல் விமர்சகர்கள் இடையேயும் மக்களை இடத்திலும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது.


நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு நாளை (ஏப்ரல் 26ஆம் தேதி) இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், நேற்றுடன் அங்கு பிரச்சாரம் ஓய்ந்தது. கர்நாடகாவில் விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

முன்னதாக கர்நாடகாவில் விசிக வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் இதனால் விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தார். ஆனால், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டதன் பேரில் விசிகா ஆதரவு மட்டுமே தெரிவித்து வருகிறது. கர்நாடகா மாநிலம், பெங்களூர் ரூரல் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் டி.கே.சுரேஷை ஆதரித்து ஆர். ஆர். நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பரப்புரை மேற்கொண்டார் திருமாவளவன்.

தமிழகத்தில் மிக நீண்ட நாட்களாக நீடித்து வரும் பிரச்சனை காவேரியில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பதில் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. பல அரசியல் தலைவர்கள் மாறினாலும் காவேரி நீர் பிரச்சனை முடிவுக்கு வராமல் இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், கர்நாடகாவில் பிரசாரம் மேற்கொண்ட திருமாவளவன் தமிழ்நாட்டின் தேவையை கண்டறிந்து விடுதலை சிறுத்தை கட்சி கர்நாடகாவிற்கு எப்படி கோரிக்கை வைத்தோமோ அப்படி தான் கர்நாடக நலனை கருத்தில் கொண்டு கர்நாடக விசிக முடிவு செய்ய முடியும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அந்த அந்த மாநில உரிமைகளை கருத்தில் கொள்ளும் என தெரிவித்தார்.

திருமாவளவனின் இந்த பேச்சு இணையத்தில் வைரலாகும் நிலையில் திருமாவளவன் அரசியல் ஆதாயத்திற்காக இப்படி பேசுகிறார் இவரின் உண்மையான நிலை இது தான் ஜூன் நான்காம் தேதி சிதம்பரம் மக்கள் இதற்கு எல்லாம் பாடம் புகட்டுவார்கள் என கூறி வருகின்றனர். தமிழகத்தில் ஒரு பேச்சும் கர்நாடகாவில் ஒரு பேச்சும் பேசி வருகிறார் என குற்றம் சுமத்தி வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி என்பது குறிப்பிடத்தக்கது.