24 special

தெர்மாகோல் ராஜு செய்த மற்றுமொரு செயல்... எடப்பாடி என்ன செய்தார் தெரியுமா?

SELLURRAJU, EDAPADI
SELLURRAJU, EDAPADI

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த நிர்வாகியாக விளங்குகின்ற செல்லூர் ராஜு மதுரையைச் சேர்ந்தவர் மேலும் இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் இருந்து தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் அதோடு தமிழக அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இதனைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் கூட்டுறவுத் துறை அமைச்சராகவே பொறுப்பு வகித்து வந்தார். ஆனால் இவர் ஒரு கூட்டுறவுத்துறை அமைச்சராக பிரபலமானதை விட வைகை அணையில் இருந்து நீர் ஆவியாவதை தடுத்து நீரை சேர்த்து வைக்கும் முயற்சியில் இவர் மேற்கொண்ட ஒரு புதிய திட்டத்தால் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். அதாவது அணைகளில் உள்ள நீர் நிலைகளின் மேலே தெர்மாகோல் அட்டைகளை கொண்டு மூடினால்  நீர் ஆவியாவது தடுக்க முடியும் என்று நம்பி இந்த புது முயற்சியில் இறங்கினார் ஆனால் நீர்நிலைகள் மேல் மூடப்பட்ட தெர்மாகோல் அட்டைகள் அனைத்தும் நீரின் போக்கிற்கு சென்று கரை ஒதுங்கியதால் இந்த திட்டம் பெரும் தோல்வி அடைந்தது.
இந்த திட்டம் தோல்வி அடைந்தால் என்ன வெற்றியடைந்தால் என்ன அந்த அளவிற்கு ஒரு முட்டாள்தனமான திட்டம் என்று பல வகையிலான விமர்சனங்களும் கமெண்ட்களும் செல்லூர் ராஜுவிற்கு முன்வைக்கப்பட்டது மேலும் பலர் பல மீம்ஸ்களை அள்ளி வீசி செல்லூர் ராஜுவை பலவாறு கலாய்த்தனர். இருப்பினும் அவை எல்லாத்தையும் கண்டு கொள்ளாமல் அலைகளில் இருந்த நீர் ஆவியாவதை தடுக்க மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இது குறித்து நினைவுகளை பத்திரிகையாளர்கள் ஒவ்வொரு முறை அவரிடம் கேட்கும்போது அரசியல் விஞ்ஞானி என்று பலரும் இன்றளவும் என்னை கலாய்த்து வருகிறார்கள் என்பதை அவரே கூறியிருப்பார். அப்படி இவர் அன்று செய்த ஒரு செயல் இன்றளவும் பெருமளவில் பேசுபொருளாகவும் இருந்து வருகிறது. 

இந்த நிலையில் மீண்டும் ஒரு செயலை செய்து மீண்டும்  பேசு பொருளாக மாறி உள்ளார் செல்லூர் ராஜு! அதாவது நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம், அப்பொழுது காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியை பாராட்டி அதிமுகவின் மூத்த அமைச்சரும் தெர்மாகோல் ராஜு என்று அழைக்கப்படுகின்ற செல்லூர் ராஜு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ராஜீவ் காந்தி ஒரு ஹோட்டலுக்கு சென்று உணவருந்தும் வீடியோவை பகிர்ந்து நான் பார்த்த நெஞ்சில் ரசித்த இளம் தலைவர் என்று பாராட்டி பதிவிட்டிருந்தார். இது அதிமுக நிர்வாகிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது ஏனென்றால் தொடர்ச்சியாக காங்கிரஸ் மற்றும் அதிமுகவிற்கு இடையேயான கூட்டணி எதுவும் சரிவர அமையவில்லை,

அதே சமயத்தில் காங்கிரஸ் திமுகவுடன் நெருங்கிய கூட்டணிகள் இருந்து வருகிறது இந்த நிலையில் சம்பந்தமே இல்லாமல் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தன்று ராகுல் காந்தியை பாராட்டி ஏன் இப்படி ஒரு பதிவை அவரிடம் வேண்டும் என்ற ஒரு கேள்வியும் ஒரு வேளை கட்சியில் தனக்கு முக்கிய பதவிகள் கொடுக்கப்படாததால் அவர் காங்கிரஸ் கட்சிக்கு தாவ போகிறாரா என்ற வகையிலான பேச்சுக்களும் எழுந்தது அதே சமயத்தில் அதிமுக மற்றும் காங்கிரஸ் இடையே கூட்டணி ஏதும் நடக்கப் போகிறதா என்ற வகையிலான பல சந்தேகங்களும் விமர்சனங்களும் கேள்விகளும் எழுந்தது. இதனை அடுத்து இந்த பதிவை இட்ட 24 மணி நேரத்திற்குள்ளே செல்லூர் ராஜு தனது பதிவை நீக்கிவிட்டார் மேலும் நீக்கியது குறித்து எந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்காத செல்வராஜ் சாதாரணமாக எனது தனிப்பட்ட விருப்பத்தின் பெயர்தான் நான் பதிவிட்டேன் மற்றபடி எந்த ஒரு காரணமும் இல்லை என்பதை மட்டும் இவர் கூறியுள்ளது வேறு அதிமுக வட்டாரங்களிடையே கடுப்பை ஏற்றி உள்ளது.மேலும் இதுகுறித்து அரசியல் விமர்சகர்களிடம் விசாரித்த பொழுது, எடப்பாடி செல்லூர் ராஜுவின் இந்த செயலை கண்டு கோபமடைந்த்ததாகவும் அதனால் செல்லூர் ராஜை அழைத்து திட்டியதாகவும் அதன் காரணமாகவே ராகுல் வீடியோ பதிவை செல்லூர் ராஜு நீக்கியாகவும் கூறப்படுகிறது....