24 special

இருந்த ஒன்னும் போச்சா... தென்காசியில் மாறிய களம்..!

MKSTALIN, JOHN PANDIYAN
MKSTALIN, JOHN PANDIYAN

தென்காசி மக்களவை தொகுதி திமுகவுக்கு வெற்றி சாதகமாக இருக்கும் என நினைத்த நிலையில், தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் அதனை தகர்த்துள்ளார். அங்கு திமுக லிஸ்ட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. தென்காசியில் அதிமுக சார்பாக கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலும், பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். இருவரும் அவர்களது சமூக ஒட்டு மட்டுமே பெறுவார்கள் இதனால் அசால்ட்டாக திமுக வெற்றி பெற்றுவிடலாம் என நினைத்த திமுகவுக்கு சவுக்கடி விழுந்துள்ளது என்றே சொல்லலாம். தென்காசி தொகுதியில் ஜான் பாண்டியனும், கிருஷ்ணசாமியும் மற்றும் பாஜக ஸ்டார்ட்-அப் பிரிவு தலைவர் ஆனந்தன் அய்யாசாமி ஆகியோர் இருப்பதால் யார் போட்டியிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், அங்கு ஜான் பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுப்பதாக தகவல் வந்ததால் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்.


இப்படி இரு சமூகத்தினரும் இரு கட்சியில் இருப்பதால் மக்கள் திமுகவையே வெற்றி பெற செய்வார்கள் என்று  நினைத்து. ஆனால், தென்காசியில் பாஜகவில் உள்ள ஆனந்தன் பல்வேறு நலத்திட்டங்களை செய்திருக்கிறார். அதனால் மக்கள் அவர் கை காட்டும் நபருக்கே வாய்ப்பு கொடுப்பார்கள் என கூறப்படுகிறது. அந்த வகையில் அனந்தன் ஜான்பாண்டியனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் தென்காசியில் பாஜக வேட்பாளர் ஈசியாக வெற்றி பெரும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனந்தன் அய்யாசாமி ஆதரவாளர்கள் ஜான்பாண்டியனுக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு தீயாக வேலை செய்து வருகின்றனர்.தென்காசி தொகுதியில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று நேரடியாக சென்று மக்களிடம் கருத்து கணிப்பு நடாத்தியுள்ளதாம். அதில், மக்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக எங்களது ஒட்டு பாஜகவுக்கு என்றும் வேறு கட்சிகளுக்கு இல்லை என பதிலை கூறியுள்ளார்களாம். மேலும், அதிமுக கூட்டணியில் உள்ள கிருஷ்ணசாமி 7வது முறையாக களம் இறங்குகிறார் ஆனால் ஒரு முறை கூட வெற்றி பெற்றதில்லை.

கிருஷ்ணசாமிக்கு அவரது சமூகத்தை தவிர வேறு ஓட்டுகள் விழாது என கூறப்படுகிறது. பாஜக ஊடலை சார்பாக போட்டியிடும் ஜான் பாண்டியனுக்கு இந்த முறை அவரது சமூக ஓட்டுகளும் மற்றும் நாடார் சமூக ஓட்டுகளும், இது தவிர தேவர் சமூக சமுதாய வாக்குகளை வைத்துள்ள டிடிவி தினகரன் சார்பாக அது ஜான் பாண்டியனுக்கு மாறும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.இந்த லிஸ்ட்டில் திமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ராணி களத்தில் இல்லையென்று வெளியான கருத்து கணிப்புகள் மூலம் தெரியவருகிறது. தென் மாவட்டத்தில் கவனம் செலுத்தாமல் இருக்கும் திமுக தற்போது இந்த மக்களவை தேர்தலில் திமுக ரேஸில் இல்லையாம். இது திமுகவுக்கே அதிர்ச்சியை கொடுக்கிறது. தற்போது தென்காசி களம் பாஜகவுக்கே சாதகமாக உள்ளது. ஜான் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். ஒரு சமூகத்தை சேர்ந்த இருவர் போட்டி போடுவதால் வாய்ப்பானது ஜான் பாண்டியனுக்கு இருப்பதாக வெளியான கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.