மற்ற எந்த சிவன் கோயில்களிலும் இல்லாத வகையில் விநாயகர் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் வீற்றிருப்பது பெரும் அதிசயமாகவும் கோவில் சென்று விநாயகரை வழிபடுபவர்களுக்கு அனைத்து இன்பங்களும் வந்து சேரும் என்பது ஐதீகமாகும். அதாவது நாகப்பட்டினம் மாவட்டம் அன்னப்பன்பேட்டையில் அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவில் மற்ற சிவபெருமான் வீற்றிருக்கும் கோவிலை போன்று மாசி பௌர்ணமி, சிவராத்திரி, நவராத்திரி மற்றும் ஐப்பசியில் சிறப்பான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது. ஆனால் மற்ற சிவன் கோவில்களில் இருப்பதை போன்று இந்த சிவன் கோவிலில் விநாயகர் எழுந்தருளிப்பது இக்கோவிலிற்கு ஒரு முக்கிய சிறப்பாகும். ஏனென்றால் இந்த திருத்தலத்தில் அமர்ந்திருக்கும் விநாயகர் அரிதான சில சிவன் கோவில்களில் ஒரே சன்னதியில் இரண்டு அல்லது மூன்று விநாயகர் அருகருகில் சேர்ந்திருப்பதைப் போன்று காட்சி கொடுக்கிறார்.
அதிலும் குறிப்பாக இந்த கோவிலில் விநாயகர் சன்னதிக்கு முன்பு துவார பாலகர் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள் இத்தகைய அமைப்பை காண்பது மிகவும் அரிது என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் சிவபெருமானுக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து அதனை மருந்தாக சாப்பிட்டால் தீராத நோய்களும் தீரும் என்றும் கூறப்படுகிறது, இதனை ஈசன் வழிபட்டால் வினை நோய் நீங்கி, செல்வம் பெருகும் என்று திருஞானசம்பந்தரும் தனது பதிகத்தில் குறிப்பிட்டு பாடியுள்ளார். மேலும் ஒவ்வொரு கோவிலும் ஓரிடத்தில் எழுந்தருளியிருப்பதற்கு நிச்சயமாக ஒரு புராண கதையும் வரலாறும் அங்கு புதைந்திருக்கும் அதன்படியே இந்த கோவில் உருவானதர்க்கும் அங்கு சிவபெருமான் எழுந்தருளியதற்கும் ஒரு பிரமிக்க வைக்கின்ற புராண வரலாறு ஒன்று உள்ளது.
அதாவது தீவிர சிவபக்தராக இருந்த சக்தி என்னும் முனிவர் திரசந்தி என்பவரை மணந்து கொண்டார் திரசந்தி கர்ப்பமாகியிருந்த காலத்தில் உதிரன் என்னும் அரசன் சக்தி முனிவரை கொன்று விட்டான் அதற்குப் பிறகு திரசந்தி ஒரு மகனைப் பெற்றெடுக்கும் பொழுது தன் தாய் கணவனை இழந்த பெண்ணாக காட்சியளிப்பதை கண்ட அந்த தவழும் குழந்தை கடுமையாக வருந்தியதோடு மாபெரும் மகரிஷியாக வளர்ந்தது.அந்த மகரிஷியின் பெயர் தான் பராசரர்! இப்படி மாபெரும் மகரிஷியாக மாறிய பராசரர் தன் தந்தையை அழித்த அசுரனை அளிக்க ஒரு பெரிய யாகத்தை நடத்தினார் அந்த யாகத்தின் பலனாக அவரது தந்தையை அழித்த உதிரன் என்ற அசுரனும் அழிந்தான். என்னதான் யாகத்தின் பலனாக ஒரு அசுரன் இறந்தாலும் ஒரு உயிரை கொலை செய்ததால் பராசரர் மகரிஷிக்கு தோஷம் உண்டானது. அந்த தோஷம் நீங்க பல தளங்களுக்கு மகரிஷி யாத்திரை மேற்கொண்ட பொழுது இந்த தளத்தில் சிவன் காட்சி தந்து அவருக்கு விமோசனம் கொடுத்தருளி உள்ளார். அதுவும் வில்வ வனத்திற்கு மத்தியில் அழகு பொருந்தியவராக சிவபெருமான் காட்சியளித்ததால் அவருக்கு சுந்தரேஸ்வரர் என்றும் வில்வநாதன் என்றும் பெயர் வந்தது.
அதுமட்டுமின்றி தீராத நோய்கள் தீர வேண்டும் என்றாலும் முன்வினை பயனால் அனுபவித்து வரும் பாவத்தின் பலனை குறைக்க வேண்டிய நினைப்பவர்களும் இந்த திருத்தலத்திற்கு வந்து சிவபெருமானை தரிசித்து விட்டு சென்றான் நிச்சியம் அவர்கள் விரும்பியது அவர்களுக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக கூறப்படுகிறது. எப்படி இந்த தளத்தின் சிவபெருமானுக்கு ஒரு சக்தி இருக்கிறதோ அதேபோன்று இந்த திருத்தலத்தில் உள்ள அம்பிகைக்கும் மாபெரும் சக்தி உள்ளது. ஏனென்றால் பொதுவாக கடற்கரை மற்றும் நதிக்கரைகளில் உள்ள சிவன் கோவில்களில் சிவபெருமான் தான் வந்து தீர்த்த கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுவார் ஆனால் இந்த தளத்தில் மட்டும் மாசி மகத்தன்று நடக்கும் தீர்த்தவாரியின் போது அம்பாள் மட்டுமே கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்த நீராடுகிறாள். ஆகவே அம்பாளும் சிவனும் மாபெரும் சக்தியாக விளங்கி வருகின்ற இந்த திருத்தலத்திற்கு சென்று இருவரின் அருளை பெற்று மகிழ்வோம்