
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக படுதோல்வியைச் சந்திக்கும் என உளவுத்துறை கொடுத்த ரகசிய ரிப்போர்ட்டால் முதலமைச்சர் ஸ்டாலின் கடும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார் "தேர்தல் களம் என்றால் திமுகவினரை போல சுற்றிச் சுழன்று பணியாற்ற யாராலும் முடியாது" என்று எதிர்க்கட்சியினரே வியக்கும் அந்தப் பழைய வேகம் இந்தத் தேர்தலில் முற்றிலுமாக முடங்கிக் கிடப்பதோடு, அடிமட்டத் தொண்டர்களிடம் காணப்படும் உற்சாகக் குறைவு கட்சித் தலைமையைப் பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இதறகு காரணம் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளையோ அல்லது உட்கட்சிப் பூசல்களையோ கண்டுகொள்ளாமல் கோட்டை விட்டதுதான். ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சியைப் பிடித்தாலும் அது மிகக் குறைந்த இடங்களைக் கொண்ட பலவீனமான வெற்றியாகவே இருக்கும் என உளவுத்துறை கூறியுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற புதிதில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 75 சதவீத இடங்களைக் கைப்பற்றி விஸ்வரூபம் எடுத்த திமுக, இன்று அதில் பாதியைக் கூடத் தக்கவைக்க முடியாமல் தத்தளிப்பதற்குக் காரணம் தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடிய ஊழலும் லஞ்சமுமே ஆகும். உதாரணமாக மதுரை மாநகராட்சியில் நடந்த 200 கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தில்மண்டல் தலைவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் மற்றும் மேயர் ராஜினாமா போன்றவை திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை ஊர் சிரிக்க வைத்தத, மதுரை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகம் முழுவதும் இது போன்ற தொடர் முறைகேடுகளால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி தற்போது வாக்குப்பதிவிலும் பலமாக எதிரொலித்துள்ளது.
திமுகவின் அசைக்க முடியாத பலமாகப் பார்க்கப்படும் உடன்பிறப்புகள், இன்று தலைமைக்கு எதிராகத் திரும்பியிருப்பதுதான் தோல்விக்கு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். பல ஆண்டுகளாக ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் நிரப்பப்பட்டு வந்த கட்சிப் பதவிகள், இன்று மாவட்டச் செயலாளர்களின் ஆசி பெற்றவர்களுக்குத் தாரைவார்க்கப்பட்டது தொண்டர்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. 'தங்கள் குறைகளைத் தீர்க்காவிட்டாலும் பரவாயில்லை, ஒரு நிமிடம் காது கொடுத்துக் கேட்கக் கூட தலைமையிடம் நேரமில்லையே' என உபிகள் கொந்தளித்து வருகிறார்கள். மேலும் உதயநிதியும் அவரது நண்பர்களும் கட்சி நிர்வாகத்தில் காட்டும் அதீத ஆதிக்கம் சீனியர் நிர்வாகிகளை கோபமடைய செய்துள்ளது,
இந்த நிலையில் தான் திமுகவுக்கு சாதகமான கருத்துக்கணிப்புகளைஸ்டாலின் துளியும் நம்பவில்லை. அதனால்தான், அறிவாலயத்தில் எந்தவித வெற்றிக் கொண்டாட்டங்களுக்கும் இன்னும் ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. உண்மையில், முதலமைச்சர் ஸ்டாலினைத் திருப்திப்படுத்தவும், கட்சியில் தங்களின் செல்வாக்கை நிலைநாட்டவும் மகன் மற்றும் மருமகன் தரப்பு ஆடிய 'மாய' நாடகம்தான் இந்த போலி கருத்துக்கணிப்புகள். ஆனால், உளவுத்துறையோ திமுகவின் தோல்வியையும், மக்கள் மத்தியில் எரியும் அதிருப்தியையும் ஆதாரங்களோடு முதலமைச்சரின் கையில் ஒப்படைத்துவிட்டது, உண்மை நிலையை உணர்ந்து இப்போது பெரும் கலக்கத்தில் உள்ளார் ஸ்டாலின்..
