
இந்தியாவில் இந்தியர்கள் அல்லாத 9 கோடி பேர் சட்ட விரோதமாக இருக்கலாம் எனவும் பலரும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் என போலி அடையாள அட்டை வைத்து இருப்பதாகவும் இவர்கள் எல்லைப்புற மாநிலங்களில் ஊடுருவி இந்தியா முழுவதும் பரவி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சீர்திருத்தத்தை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சட்டவிரோமாக குடியேறியவர்கள் போடும் ஓட்டுக்களால் மேற்கு வங்க தேர்தல்களில் எதிரொலித்துள்ளது.
ஏற்கெனவே வங்கதேசத்தில் இருந்து பெரும் எண்ணிக்கையில் சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்களால் நாட்டின் எல்லையோர மாநிலங்களான அசாம், மேற்கு வங்க மக்கள் தொகை எண்ணிக்கையில் கடும் ஏற்றத்தை சந்தித்துள்ளது. இந்நிலையில், சட்டவிரோதமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்தியாவில் குடியேறுவதால் நாட்டின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. . மேலும் ரோஹிங்கியாக்கள் போலி ஆவணங்கள் தயாரித்தல், ஆள் கடத்தல், நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச் செயல்களைச் செய்து வருவதாகத் தொடர்ந்து புகார்கள் பதிவாகியுள்ளன.
இதற்கிடையே பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது.அதன்படி, பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள் தாங்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமையிலான இண்டி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டு வருகிறது.
கடைசியாக, 2003ல் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடந்த நிலையில், 22 ஆண்டுகளுக்கு பின் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், 2 கோடிக்கும் அதிகமானோர் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ் சாட்டி வருகின்றன.
போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சியினர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் கமிஷனுக்கு என்று அதிகாரப்பூர்வமான வாக்காளர் பட்டியல் இருக்கிறது. இந்த பட்டியலில் இடம்பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதிகள் இல்லையோ, அவர்களை எல்லாம், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. இந்தியாவுக்குள் ஊடுருவிய நபர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள், ரோஹிங்யாக்களாக இருக்கலாம் அல்லது வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்கள் எல்லாம், தவறான வழிகளில், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விஷயத்தில், தலைமைத் தேர்தல் கமிஷன் நியாயமான நடவடிக்கை எடுத்தால், எதிர்க்கட்சிகளாகிய உங்களுக்கு என்ன பிரச்னை?முறைகேடான வழிகளில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் தோள் மீது ஏறி அரசியல் செய்ய எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனவா? ஊடுருவல்காரர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விரும்புகின்றனவா?அங்கீகரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலில், ரோஹிங்யாக்களும் இருக்கின்றனர் என்பது, உண்மையா இல்லையா? இது போன்ற, சட்ட விரோத வாக்காளர்களை வைத்து அரசியல் செய்வோம் என எதிர்க்கட்சிகள் முடிவெடுத்தால், அதை எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இது இண்டி கூட்டணிக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.