
தம்பி வா தலைமையேற்க வா” என அண்ணா அழைத்தது என்னவோ நெடுஞ்செழியனைத்தான். ஆனால், அண்ணாவுக்குப் பிறகு முதல்வராக வாய்ப்பு கிடைத்தது என்னவோ கருணாநிதிக்குத்தான். 1969 பிப்ரவரி 3-ம் தேதி அண்ணா மறைவுக்குப் பிறகு கருணாநிதியை அரியணை ஏற்ற முனைந்தவர்களில் முக்கியமானவர் எம்.ஜி.ஆர், ஆனால், அதே எம்.ஜி.ஆரே பிற்காலத்தில் கருணாநிதி தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டதுதான் அரசியல் திருப்பங்களில் அதிமுக்கியமான காட்சி. அவையே கருணாநிதி பதவியிழந்திருந்த 13 ஆண்டு கால வனவாசத்துக்கும் அடிப்படைக் காரணம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் மூன்று முறை முதல்வரானார் கருணாநிதி. ஒவ்வொரு முறை அவர் முதல்வரானபோதும் ஒவ்வொரு விதமான ஊழல் புகார்களுக்கு உள்ளானார் அவர். இறுதிக்காலத்தில் அவரை அரியணை ஏறவிடாமல் தடுத்ததில் 2ஜி ஊழல் புகாருக்கு முக்கியப் பங்குண்டு.
திமுக-வின் ஊழல் பட்டியல் மிகவும் நீளமானது. ரூபாய் 39 ஆயிரத்து 775 கோடி ரூபாய் மதுபான ஊழல், ரூபாய் 5 ஆயிரத்து 800 கோடி மணல் ஊழல், ரூபாய் 3 ஆயிரம் கோடியில் எல்காட் ஊழல், ரூபாய் 4 ஆயிரத்து 400 கோடியில் எரிசக்தி ஊழல், ரூபாய் 3 ஆயிரம் கோடியில் போக்குவரத்து துறையில் ஊழல் என ஊழல் அனைத்து எல்லைகளையும் தாண்டிவிட்டது. வேலைக்காக பணம் வசூலிப்பவர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் நடக்கிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் ஒருவருக்கு ரூபாய் 41 ஆயிரத்து 503 ரூபாய் அளவில் மோசடி நடந்துள்ளது. சென்னை மாநகராட்சியில் "தெரு நாய் கருத்தடை திட்டம்" மூலம் வெறும் 139 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதற்கு மட்டும் 20 கோடியை செலவழித்தது என தகவல்கள் கூறுகிறார்கள். அன்று சக்கரையை தின்ற எறும்பிலிருந்து தொடங்கிய திமுகவின் ஊழல் இன்று கருத்தடை செய்யப்பட்ட தெரு நாய்கள் வரை தொன்று தொட்டு தொடர்கிறது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
இதற்கிடையில் அண்ணாமலை வெளியிட்ட பதிவில் நாகை மாவட்டம் ஆழியூரை அடுத்துள்ள கடம்பரவாழ்க்கை கிராமத்தில், சாலை வசதி இல்லாமல், மக்கள் வயல் வரப்பு, ஒற்றையடி பாதையை பயன்படுத்தி வருகின்றனர். பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் துவங்கி, மருத்துவ அவசர சிகிச்சைக்கு செல்லும் மக்கள் வரை, இந்த ஒற்றையடி பாதையையே பயன்படுத்த வேண்டி இருக்கிறது.
மழைக் காலங்களில் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகள் தாக்குதலுக்கும், மக்கள் உள்ளாக நேர்கிறது. மத்திய அரசின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இதுவரை தமிழகம், 5,886 கோடி ரூபாயை பெற்றிருக்கிறது. ஆனால், தமிழகம் முழுதும், பல மாவட்ட கிராமங்களில், சாலைகள்அமைக்கப்படவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசு திட்டத்தின் பெயரை மாற்றி, 'முதல்வரின் கிராம சாலைகள் திட்டம்' என்று, வெறும் அறிவிப்பு மட்டும் வெளியிட்டனர்.
இதுவரை, இந்த திட்டத்தின் கீழ், எந்தெந்த கிராமங்களில், சாலைகள் அமைக்கப்பட்டன என, தமிழக பா.ஜ.க சார்பில், வெள்ளை அறிக்கை கேட்டு, இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. மத்திய அரசிடம் பெற்ற நிதி எங்கே, நீங்கள் ஒதுக்கிய நிதி எங்கே. முதல்வர் ஸ்டாலினின் கையாலாகாத ஆட்சிக்கு, தமிழக கிராமங்களின் அவலநிலையே சாட்சி. மக்களின் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்றாமல், கடந்த நான்கு ஆண்டுகளாக, தினமும் ஒருநாள் கூத்துக்காக வேஷம் தரித்து ஆடும் நாடகத்தை, ஸ்டாலின் எப்போது நிறுத்த போகிறார். கிராமங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி கொடுப்பதை விட முக்கியமா, முதல்வரின் விளம்பர நாடகங்கள். அவரின், வேஷங்களை மக்கள் விரைவில் கலைப்பர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.