24 special

நேற்று பேசிய வைகோவிற்கு இன்று விழுந்த ஆப்பு இது தான் சரி ஆட்டம் முடிந்தது மதிமுக கலைப்பா திமுகவுடன் இணைப்பா

MKSTALIN,VAIKO
MKSTALIN,VAIKO

சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகளை உடைக்கும் வேளைகளில் இறங்கியுள்ளது. அதிக சீட் கேட்போம் என திமுக கூட்டணி கட்சிகள் கேட்க தொடங்கியுள்ளது. மதிமுக கம்யூனிஸட் கட்சிகள் தற்போதே கேட்க பேரம் பேச ஆரம்பித்துவிட்டது. காங்கிரசும் தன் பங்கிற்கு விஜயை தூக்கி வைத்து பேச ஆரம்பித்துளார்கள். இதனால் திமுக தலைமை என்ன செய்வதென்று தெரியாமல் முழித்து வந்த நிலையில் ஆப்ரேசன் கூட்டணி கட்சிகள் என்ற வியூகத்தை தொடங்கி உள்ளது. கூட்டணி கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் இரண்டாம் கட்ட தலைவர்களிடம் பேரம் பேச ஆரம்பித்து விட்டார்கள் திமுகவின் தேர்தல் வியூக கம்பெனியினர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 


இதற்கிடையே மதிமுக  2017 ஆம் ஆண்டு இந்தக் கூட்டணி அமைந்ததிலிருந்து மதிமுகவை சேர்ந்த எவரையும் திமுகவில் சேர்க்க ஸ்டாலின் மறுத்து வந்த நிலையில், கடந்த எட்டு வருடங்களில் முதல் முறையாக முத்துரத்தினத்தை முறைப்படி திமுகவில் சேர்த்துக்கொண்டார் ஸ்டாலின்.அதற்கு காரணம் ஜூன் 22 ஆம் தேதி மதிமுக பொதுக்குழுவில் வைகோ முன்னிலையில் கட்சியின் அவை தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ் திமுகவை கடுமையாக விமர்சித்தது தான்.இப்படி திமுகவுக்கும் மதிமுகவுக்கும் உறவு சரி இல்லை என்ற நிலையில்தான் முதலமைச்சர் ஸ்டாலினை வைகோ சந்தித்து பேசி சமாதானபடுத்தினார்.

திமுகவை ஆதரிப்போம் என வைகோ அறிவாலயத்தில் பேசி இருந்தாலும் கடந்த ஜூன் 29-ஆம் தேதி தாயகத்தில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில் மீண்டும் திமுக எதிர்ப்பு வலுவாக இருந்திருக்கிறது.“2021 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் நாம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம். அப்போது அறிவாலயத்தில் நின்று பேட்டி கொடுத்த மல்லை சத்யா திமுகவின் சின்னத்தில் எங்களை போட்டியிடச் சொன்னது ஸ்டாலினுடைய பெருந்தன்மை என்று கூறினார். இப்போது வரை அவர் திமுகவுடன் ரகசிய உறவில் தான் இருக்கிறார். 2021ல் அவ்வாறு ஏன் பேட்டி அளித்தார் என மல்லை சத்யாவால் விளக்க முடியுமா? என மதிமுக தரப்பில் கேட்கப்பட்டது அது மட்டுமில்லாமல் மல்லை சத்தியா பெரிய டீமோடு திமுக அல்லது அதிமுக பக்கம் தாவ ரெடியாகி விட்டார். 

இதற்கிடையே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய பொதுச்செயலாளராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் திமுக புகுந்து விளையாடுகிறதாம். குறிப்பாக பொதுச்செயலாளர் பதவியை தலித் அல்லாத சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொடுக்க வேண்டும் என்கிறாராம் திருமா. அப்படி கிடைத்தால் பொது தொகுதிகள் கேட்க வசதியாக இருக்கும் என யோசிக்கிறாராம் இதை தவிடு பொடியாகும் வேளைகளில் திமுக இறங்கியுளது. நேரடியாக இல்லாமல் ஆதவ் அர்ஜுனனிடம் பேசி விசிகவை உடைக்க திட்டம் போட்டுள்ளதாம். அறிவாலய தரப்பு. மேலும் கம்யூனிஸட்களிடமும் பேரத்தை ஆரம்பித்துவிட்டதாம். அதில் இருக்கும் முக்கிய தலைகளுக்கு ரேட் பேசி வருகிறார்களாம். தங்கள் கட்சி வந்தால் கூட்டணி உடையும் என்பதால் விஜயை கை காட்டி அங்கே இணைந்துகொள்ளுங்கள் என ரூட்டையும் காட்டிவிட்டது திமுக. 

மல்லை சத்யா விவகாரத்தில் பின்னணியில் திமுக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்களது கூட்டணி நிலைக்குமா என்ற நிலை  உருவாகி உள்ளது. மதிமுகவில் . செஞ்சி ராமச்சந்திரன், எல். கணேசன் வெளியேறியபோதும் கட்சிக்குள் நெருக்கடி இல்லை. ”மனதை தேற்றி வருகிறார்கள் மதிமுகவினர். இந்தவகையில், பா.ம.க-வை தொடர்ந்து ம.தி.முவிலும் உள்கட்சி பூசல் கொதிக்கத் தொடங்கியுள்ளது.