24 special

கனிமொழிக்கு தமிழிசை சொன்ன விஷயம்...!

Kanimozhi, Tamilisai
Kanimozhi, Tamilisai

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் தென் சென்னை பாஜக வேட்பாளரிடம் தொடர்ந்து திமுகவினர் பதிலடி வாங்கி கொண்டு வருகின்றனர்.


தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு ஆதரவாக களத்தில் பிரச்சாரம் செய்த திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி, தமிழிசை சவுந்தரராஜன் 4 வருடங்கள் கவர்னராக இருந்தார் பாஜக கட்சியில் வேட்பாளர்கள் இல்லாததால் வேறு வழி இல்லாமல் வேட்பாளராக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தமிழிசைக்கு யாரும் வாக்களித்து விடாதீரகள். அதிமுகவுக்கு செலுத்தும் ஓட்டும் பாஜகவுக்கு செலுத்தும் ஓட்டும் ஒன்று தான் என விமர்சனம் செய்திருந்தார்.

                                                                                           

இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தென் சென்னை பாஜக வேட்பாளரும் முன்னாள் கவர்னருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று ராஜஸ்தான் இளைஞர் அமைப்பினரிடம் ஆதரவு திரட்டினார். தி.நகரில் நடந்த ஆதரவு கோரும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், தென் சென்னை மக்களுக்கு, கண்ணுக்கு தெரியும் எம்.பி வேண்டுமா அல்லது கண்ணுக்கே தெரியாத எம்.பி. வேண்டுமா? கண்ணுக்கு தெரியும் எம்.பி. யாக பார்த்து, பேசி, மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற நான் காத்திருக்கிறேன். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சியை கண்டு திராவிட கட்சிகள் பதற்றமடைந்து கொண்டிருக்கின்றன.

                                                                                                

அப்போது கனிமொழி குறித்த விமர்சனத்திற்கு, திஹார் சிறையில் இருந்த கனிமொழி மக்களவைத் தேர்தலில் போட்டியிடும்போது, ராஜ்பவனில் ஆளுநராக இருந்த நான் போட்டியிடக்கூடாதா? திமுகவில் ஆள் இல்லாததால் தான், கனிமொழி, தயாநிதி, உதயநிதி உள்ளிட்ட அவர்கள் குடும்பத்தினரையே தேர்தலில் வேட்பாளர்களாக நிற்க வைக்கிறார்களா? ஜனநாயகம் பாஜகவில் தான் இருக்கிறது என சரியான பதிலடி கொடுத்துள்ளார்.

                                                                                    

தென் சென்னை தொகுதியை பொறுத்தவரைக்கும் நான்கு முனை பொடியாக இருந்தாலும் மக்கள் பெருவாரியாக ஆதரவு கொடுப்பது பாஜக கட்சிக்கே களத்தில் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு மக்கள் ஆதரவு கொடுக்கவில்லையென்றும், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது ஏற்பட்ட கால் வலி காரணமாக கட்டு போட்டு கொண்டு மீண்டும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால், தற்போது அந்த கால் வலி சரியாகி கால் மேல் கால் போட்டுகொண்டு, காலை ஆட்டி கொண்டும் மக்களிடத்தில் டிஜிட்டல் பிரச்சாரம் செய்வது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. 

                                                                                       

இது தான் திமுகவின் அதிகாரங்கள் என்றும் வெற்றி பெற்றால் இப்படி தான் மக்களுக்கு பதிலளிப்பார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் இருக்கும்போது தமிழச்சியின் இந்த வீடியோவும் மக்களிடத்தில் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதேபோல் விமர்சனம் செய்து தமிழிசை சௌந்தரராஜன் பதிலடி கொடுத்தார் என்பது குறிபிடத்தக்கது .