24 special

நாடே அதிர செய்யும் சம்ப*ம் வெளியானது! மொத்தமாக சிக்கிய உதயநிதி அன்பில் மகேஷ். ...! மதுபோதையில் பள்ளி மாணவர்கள்..

UDHAYANIDHI,ANBILMAHESH
UDHAYANIDHI,ANBILMAHESH

தமிழ்கத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு சட்டம் ஒழுங்கு என்பது முற்றிலும் சிதைந்து விட்டது. எங்கு பார்த்தாலும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அதுமட்டுமில்லாமல் போதை கலாச்சாரம் பள்ளியினுள் புகுந்துவிட்டது. மது அருந்திவிட்டு பள்ளிக்கு மாணவர்கள்,ஆசிரியர்கள் வரதொடங்கியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாடம் சொல்லி தரும் ஆசிரியர் போதை தலைக்கேறி வகுப்பறையில் விழுந்து கிடக்கிறார், மற்றொரு அரசு பள்ளியில் மது போதையில் வந்த ஆசிரியரை தட்டி கேட்ட தலைமை ஆசிரியரை அடிக்க பாய்கிறார்  மதுபோதை ஆசிரியர். பாழடைந்த பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாட்டால் மாணவர்களை வழிநடத்த வேண்டிய ஆசிரியர்களே வழிகெட்டுள்ளதாக குற்றச்சாட்டு


இது ஒரு புறம் என்றால் மாதா, பிதா, குரு, தெய்வம்...’ என தெய்வத்துக்கும் முதலாக ஆசிரியர்களை வைத்து மாணவர்கள் மதித்த காலம் போய், மது போதையில் அவர்களை அடித்து, உதைக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறிவருகின்றன. அதுவும், கல்வித் தந்தை காமராஜர் பிறந்த விருதுநகர் மாவட்டத்திலேயே அப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது, பேரதிர்ச்சி!

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே இருக்கிறது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. அங்கு பன்னிரண்டாம் வகுப்பில், அரசியல் அறிவியல் பிரிவில் படிக்கும் மாணவர்கள் இருவர், கடந்த ஜூலை 16-ம் தேதி மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, மது அருந்திவிட்டு போதையில் பள்ளிக்கு வந்திருக்கின்றனர். அவர்களை, தலைமை ஆசிரியரிடம் அழைத்துச் செல்ல முயன்ற ஆசிரியர் சண்முகசுந்தரத்தை, தாங்கள் வைத்திருந்த மது பாட்டிலால் திடீரெனத் தாக்கியிருக்கின்றனர். அப்போது, அந்த மாணவர்களின் நண்பர்களான வணிகவியல் பிரிவைச் சேர்ந்த இருவர், காம்பஸால் ஆசிரியரின் முகத்தில் குத்தியிருக்கின்றனர். தலையிலும் முகத்திலும் காயத்துடன் நிலைதடுமாறிய ஆசிரியர், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு காரணம்  “முந்தைய ஆண்டு செய்முறைத் தேர்வில்  மதிப்பெண்களைக் குறைத்தார். அதற்குப் பழிவாங்கத் திட்டமிட்ட மாணவர்கள் ஆசிரியரை தாக்குவதற்குத் தைரியம் வருவதற்காக மது அருந்தினோம்” எனத் தெரிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, நான்கு மாணவர்களையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பிறகு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.

இதே மாணவர்கள் கடந்த வருடமும் மது அருந்திவிட்டுப் பள்ளிக்கு வந்ததால், 15 நாள்கள் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள். அேதபோல், 2023, டிசம்பர் 8-ம் தேதி 11-ம் வகுப்பில் `நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும்’ என அறிவுரை கூறிய பொருளியல் ஆசிரியர் கடற்கரையை, ஒருமையில் மரியாதைக் குறைவாகப் பேசி, அரிவாளால் வெட்டிய சம்பவமும் நடந்திருக்கிறது. அதிர்ஷ்டவசமாக அந்த ஆசிரியர் உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள்  ஆசிரியர்கள் பாகுபாடு இல்லாமல் ஏற்பட்டுள்ள இந்த போதைப் கலாச்சாரம் குறித்து பல்லை கல்வித்துறை என்ன செய்துள்ளது. இதுவரை தவறு செய்தவர்களை எத்தனை பேரை டிஸ்மிஸ் செய்துள்ளது இந்த அரசாங்கம் டிஸ்மிஸ் செய்தால் இது போல் தவறுகள் என்றுமே நடக்காது, அதை விடுத்தது அரசு பள்ளியில் ஆன்மிகம் பேசிய மாக விஷ்ணுவை கைது செய்த எடுத்த அரசும் ,உடனடியாக அந்த பள்ளிக்கு வந்த அன்பில் மகேஷ் தற்போது எங்கே உள்ளார். வெறும் உதயநிதி ரசிகர் மன்ற தலைவராக இருந்தால் மட்டும் போதுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் பிரளயத்தை உருவாக்கியுள்ளது.