24 special

திருமாவளவனுக்கு "அதிர்ச்சி வைத்தியம்" கொடுத்த பாஜக ஸ்கெட்ச் வேலை செய்தது..!

Annamalai and thirumavalan
Annamalai and thirumavalan

தமிழகத்தில் தற்சமயம் நடைபெற்ற இரண்டு முக்கிய சம்பவங்கள் ஒரு தரப்பிற்கு வெற்றியையும், மற்றொரு தரப்பிற்கு அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது, இதில் மகிழ்ச்சியை பாஜக தரப்பும் அதிர்ச்சியை  விசிகவும் பெற்றுள்ளன அது குறித்து செய்திதான் தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தன்னை தமிழக அரசியல்வாதி என்ற பிம்பத்தை தாண்டி இந்திய அளவில் பட்டியல் சமுதாய தலைவர் என்ற கருத்தை உருவாக்க மிக பெரிய முயற்சியை கடந்த 6 மாதமாக செய்து வருகிறார், தமிழகத்தை தாண்டி அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல இடங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

மேலும் மகாராஷ்டிரா, பீகார், டெல்லி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் அதனை தனது சமூக வலைத்தள குழு மூலம் பிரபல படுத்தவும் மிக பெரிய அளவில் முயற்சி செய்து அதில் 50% தாண்டியும் இருக்கிறார், ஆனால் அங்குதான் அவருக்கு மிக பெரிய சறுக்கல் உண்டாகி இருக்கிறது.சமீபத்தில் கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சியை மிக பெரிய அளவில் பிரபல படுத்த திருமாவளவன் திட்டமிட்டு இருந்து இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் அம்பேத்கர் வம்சாவழி பேரனும் கலந்துகொண்டு இருக்கிறார், இங்கு நடந்த சம்பவம் திருமாவளவனை மிக பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது, பிரதமரை விமர்சனம் செய்ததால் விருதை திருப்பி வாங்கிவிட்டார்கள், ஓசூர் வரை திருமாவளவனை பாதுகாப்பாக அனுப்பினார்கள் என பரவிய செய்தியால் கடுமையான அதிர்ச்சி அடைந்து இருக்கிறார் திருமாவளவன்.

ஒரு கட்டத்தில் அங்கு என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் கொடுத்த திருமாவளவன் மேலும் சிக்கலை சந்தித்து இருக்கிறார், அதாவது நிகழ்ச்சியில் நான் முழுவதும் பேசினேன் ஆனால் பாஜக அமைச்சரைதான் அங்கு பேசவிடவில்லை என்று குறிப்பிட்டார், அதோடு பாடப்பட் ஸ்ரீனிவாசன் என்ற ஒருவன் மோடி நல்லவர் என பேசினான் என ஒருமையில் பேச இப்போது மேலும் சிக்கல் உண்டாகி இருக்கிறதாம்.

மீண்டும் திருமாவளவன் ஆம் பிரதமர் மோடியை அவதூறாகதான் பேசுவேன் என சொல்லிவிட்டு கர்நாடக வரட்டும் என்ன நடக்கும் பாருங்கள் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் படப்பட் ஸ்ரீநிவாஸ் தரப்பு, பல மாதங்கள் கஷ்டப்பட்டு திருமாவளவன் உருவாக்கிய பிம்பத்தை ஒரே நாளில் அதுவும் அம்பேத்கர் நிகழ்ச்சியில் வைத்தே உடைத்து எடுத்து விட்டனர் பாஜகவினர்.

இதனால் மிகுந்த ஆவேசத்தில் தான் தமிழகத்தில் நடந்த மற்றொரு கூட்டத்தில் ஒருமையில் பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் திருமாவளவன் என்கின்றன விவரம் அறிந்தவர்கள். இது பாஜகவின் வெற்றி என்றும் சென்னையில் அம்பேத்கர் பிறந்தநாளில் மாலை அணிவிக்க சென்ற இடத்தில் நடைபெற்ற மோதலுக்கு அரசியல் ரீதியாக நடைபெற்ற பதிலடியாக பார்க்க படுகிறது.

இது ஒருபுறம் என்றால் திருமாவளவனின் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் அவரை எதிர்த்து 2024-ல் பாஜக போட்டியிட இருக்கிறதாம் அதற்காக பாஜக வேலையை தொடங்கி இருப்பதாகவும் பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை அங்கு நிறுத்தி நிச்சயம் வெற்றி பெறலாம் என கணக்கு போட்டு இருக்கிறதாம் பாஜக.

சிதம்பரம் தொகுதியில் பிரபலம் இல்லாத அதிமுக வேட்பாளரிடம் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் கடைசி நேர இழுபறிக்கு பின்னரே திருமாவளவன் வெற்றி பெற்றார், வருகின்ற தேர்தலில் அவரை எதிர்த்து அதிமுக பாமக கூட்டணியுடன் களம் கண்டால் நிச்சயம் திருமாவளவனை வீழ்த்தலாம் என பாஜக தனது தேர்தல் பணியை தொடங்கியுள்ளதாம்.

சனாதானத்தை வீழ்த்துவோம் என மேடைக்கு மேடை பேசிவந்த திருமாவளவனை சிதம்பரம் தொகுதியில் வீழ்த்த பாஜக களம் இறங்கியுள்ளதாக நமது TNNEWS24-க்கு பிரத்தியேக தகவல் கிடைத்து இருக்கிறது. மொத்தத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே தமிழகத்தில் தொடங்கிவிட்டது.