24 special

பொன்முடி பேசியதற்கு கிடைத்த சரியான பதிலடி...!பெரும் பதட்டத்தில் திமுக...!

Annamalai, ponmudi
Annamalai, ponmudi

அமைச்சர் பொன்முடி அண்ணாமலை யாத்திரை போவது குறித்து கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார், போதாத குறைக்கு இந்த யாத்திரையால் மோதல்கள் உண்டாகும் எனவும் தெரிவித்து இருந்தார், பொன்முடியின் இந்த பேச்சு குறித்து அண்ணாமலையிடம் கேள்வி கேட்கப்பட்ட போது அவருக்கு வயசாயிருச்சு அண்ணே அதான் இப்படி பேசுகிறார் என தெரிவித்து இருந்தார் அண்ணாமலை.


பொன்முடி பேசியதற்கு விரைவில் பதிலடி கிடைக்கும் என எதிர் பார்க்கப்பட்ட நிலையில் அது அண்ணாமலை மூலம் இல்லாமல் நேரடியாக சிறுவர்கள் மூலம் வந்து இருக்கிறது, இன்னும் சொல்ல போனால் சிறுவர்களை வேலை வாங்கிய சம்பவம் நாடு முழுமைக்கும் சென்று சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கோவை மாவட்டம் சூலூர் அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் நேற்று முன்தினம் மாலை கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி நிரல் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் முத்துச்சாமி ஆகியோர்  தாமதமாக இரவு 9 மணிக்கு வந்ததால், அங்கு கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பாதி பேர் கலைந்து சென்றனர்.  அப்போது காலி சேர்கள்  எடுத்து அடுக்கி வைக்கப்பட்டது.

இந்த விழா தொடங்குவதற்கு முன்னதாக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அமர்வதற்காக சிறுவர்களைக் கொண்டு திமுக நிர்வாகிகள் சேர்களை  ஒழுங்கமைத்தனர்.  சிறுவர்கள் சேர்களை தூக்கிச் செல்வதை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட வலைதளங்களில் பதிவேற்றி உள்ளனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது.

உயர்கல்வித்துறை அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் சிறுவர்களை கொண்டு வேலை வாங்குவது எந்த வகையில் நியாயம், பள்ளி செல்லும் பிள்ளைகள் கட்சி நிகழ்ச்சிக்கு வருவதே தவறு அப்படி இருக்கையில் அவர்களை தொழிலாளர்கள் போன்று திமுகவினர் நடத்திய சம்பவம் தற்போது நாடு முழுவதும் வெளிச்சத்திற்கு வந்து இருக்கிறது.

தேசிய குழந்தைகள் நல ஆணையம் இந்த விவகாரத்தை தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொள்ள போகிறது என்ற தகவலால் தற்போது பெரும் பதற்றம் திமுக தரப்பில் உண்டாகி இருக்கிறதாம்.