Tamilnadu

பைக்கில் வந்து அண்ணாமலையை நிறுத்திய நபர் கிண்டல் செய்த ஊடகங்களை வெளுத்து எடுத்த எழுத்தாளர் !

Annamalai's speech to the reporter
Annamalai's speech to the reporter

அண்ணாமலை படகில் சென்றது குறித்து விமர்சனமும் கிண்டலும் எழுந்த நிலையில் அண்ணாமலை வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற போது    இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் அண்ணே எங்க பகுதியில் தண்ணீர் நிறைஞ்சு கிடைக்கு, கரண்ட் இல்லை யாருமே எங்கள் பகுதிக்குள் வருவது இல்லை.


நீங்களாவது வந்து பாருங்கள் என வேதனையுடன் தெரிவிக்கிறார் இதை தொடர்ந்து அண்ணாமலை படகில் சென்று அந்த பணிகளை ஆய்வு செய்கிறார் இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் அண்ணாமலை குறித்து விமர்சனம் செய்த நபர்களை நோக்கி எழுத்தாளர் சுந்தர் ராஜ சோழன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் இது குறித்து பதிவிட்டதாவது ஒருவர் அண்ணாமலையிடம் வந்து முறையிடுகிறார் கரண்ட் இல்லை,தண்ணி இல்லை ஆனால் இதைத் தாண்டி யாருமே உள்ளே வரமாட்டேன் என்கிறார்கள் என்று காரணம் அங்கே முழுக்க தண்ணீர் தேங்கி நிற்பதால்.

அண்ணாமலை சொல்கிறார் நான் அங்குதான் போகிறேன்,படகில் எல்லா பகுதிக்கும் உள்ளே வருகிறேன் என்கிறார் அதற்கு அந்த பொதுஜனமே சொல்கிறார்,படகு அங்கேயே உள்ளது வாருங்கள் என்று.நடந்து போகலாம் என்றால் அங்கே ஏற்கனவே படகினை நிறுத்தி வைத்த மடையன் யார்?

இதுவரை அங்கே போய் சந்திக்காத அரசு எது? இதைப்பற்றி நேர்மையிருந்தால் பேச வக்கிருக்கிறதா ஊடகங்களே என சரமாரியாக தனது கேள்விகளை வெளிப்படுத்தியுள்ளார் சுந்தர் ராஜ சோழன். பொய்களை பரப்பி கொண்டு இருக்கும் ஊடகங்களுக்கு இது போல் சொன்னால்தான் புரியும். ஆளும்கட்சியினர் அரசியலுக்காக கிண்டல் செய்கின்றனர்.

அதையே ஊடகங்களும் செய்ய வேண்டிய அவசியம் என்ன ஏன் சென்னையில் மழை நீர் வீட்டுக்களுக்குள் செல்லவில்லையா? மக்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்களா? ஊடகங்களே உண்மையை சொல்லுங்கள் என பலரும் அண்ணாமலை குறித்து தவறான செய்தி வெளியிட்ட ஊடகங்களை வெளு த்து எடுத்து வருகின்றனர்.