தின கூலி தொழில் செய்யும் சாமானிய பெண்மணி தெரிவித்த தகவல் தற்போது தமிழக பாஜகவினரை மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருக்கும் பாஜகவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
மோடி அரசாங்கம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த பாட்டி... மோடி நல்லவர்தான்பா நானே சொல்றனே, ஆனா இங்க அவர் சொல்றது பலருக்கு தெரிய மாட்டுது, நான் மோடி நல்லவருன்னு சொல்லவே பயமா இருக்குபா என அவருக்கே உரிய சாமானிய குணத்தில் சிரித்த முகத்துடன் சொல்கிறார்.
சாமானிய பெண்மணி கொடுத்த பேட்டி பாஜகவினரை ஆனந்த கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறது, பிரதமர் மோடி சாமானிய மக்களைதான் பெரிதும் நேசிக்கிறார் பிரதமர் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு கொடுத்தாலும் தமிழகத்தில் அது விழிப்புணர்வு பெறவில்லை ஆனால் தின கூலி தொழில் செய்யும் ஒருவர் மோடி நல்லவர்தான் என சொல்லும் ஒரு வார்த்தை போதும், அது மோடியின் 9 ஆண்டு ஆட்சிக்கு கிடைத்த பெருமை என பூரிப்பு அடைகின்றனர் பாஜகவினர்.
எது எப்படியோ மோடி யாருக்காக உழைத்தாரோ அவர்களுக்கு மெல்ல மெல்ல மோடியை பற்றி புரிய ஆரம்பித்து இருப்பது தமிழகத்தில் பலருக்கு ஆச்சர்யத்தை உண்டாக்கி இருக்கிறது.