24 special

கெத்து காட்டும் மோடியின் இந்தியா' பழைய கதையெல்லாம் இனி நடக்காது! ஒபாமா சொன்ன அந்த ஒற்றை வார்த்தை

PMMODI,BARACKOBAMA
PMMODI,BARACKOBAMA

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, தற்போதைய அரசியல் சூழலையும், உலக அரங்கில் அமெரிக்கா சந்தித்து வரும் சவால்களையும் முன்வைத்து ஆற்றிய அந்த உரை, வெறும் அரசியல் விமர்சனமாக மட்டுமல்லாமல் ஒரு தீர்க்கதரிசனமான எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது. அவர் உரையில் . ஒரு நாட்டின் அதிபருக்கு ராஜதந்திரம் என்பது சுவாசத்தைப் போன்றது; அதுபோலவே வெளியுறவுக் கொள்கையும் அந்த நாட்டின் கௌரவத்தைத் தீர்மானிக்கும் காரணியாக அமைகிறது. ஆனால், இன்றைய சூழலில் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை களையிழந்து காணப்படுவது கவலைக்குரியது என்று அவர் ஆதங்கப்பட்டார். இதற்கு உதாரணமாக அவர் இந்தியாவின் வளர்ச்சியை கூறியுள்ளார் 


முன்னாள் அதிபர் ஒபாமா தனது உரையில், "இந்தியா குறித்த தவறான புரிதல் அமெரிக்காவின் பலவீனத்தையே காட்டுகிறது" என்பதை உரக்கச் கூறியுள்ளார் இன்றைய இந்தியா என்பது பல தசாப்தங்களுக்கு முன்பு இருந்த பழைய இந்தியா அல்ல; எதற்கும் வளைந்து கொடுத்து அடங்கிப்போகும் நிலையில் அது இன்று இல்லை. இதற்கு மிக முக்கிய காரணமாக அவர் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை. மோடி ஒரு சாதாரண தலைவர் அல்ல, அவர் ஒரு மிகச்சிறந்த ராஜதந்திரி என்பதை உலகம் இன்று அங்கீகரிக்கிறது. எந்த நிலையிலும் தனது நாட்டின் நலனை விட்டுக்கொடுக்காத மன உறுதி அவரிடம் இருக்கிறது. அவர் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நாட்டின் நீண்ட கால வளர்ச்சியை நோக்கியே அமைந்திருக்கின்றன. ஒரு நாட்டின் பொருளாதாரம் பதினோராவது இடத்தில் இருந்து வெறும் பதினோரு ஆண்டுகளுக்குள் நான்காவது இடத்திற்கு முன்னேறுவது என்பது சாதாரணமான சாதனையல்ல. இதற்குப் பின்னால் ஒரு மாபெரும் உழைப்பும், தொலைநோக்குப் பார்வையும் இருக்கிறது. மோடியின் அமைச்சரவை சகாக்கள் ஒவ்வொருவரும் தத்தமது துறைகளில் நிபுணத்துவம் பெற்று, ஒரு சிறந்த அணியாகச் செயல்படுவது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பலம் என்று அவர் சிலாகித்திருக்கிறார்.

பாதுகாப்பு, பொருளாதாரம், ராணுவம், விண்வெளி என அனைத்துத் துறைகளிலும் இந்தியா இன்று உலகத் தலைமைகளுக்கு இணையாகச் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், 'வரி விதிக்கிறோம்' என்ற ஒற்றை ஆயுதத்தை ஏந்தி இந்தியாவின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொள்வது அமெரிக்காவிற்கு நல்லதல்ல. இது இந்தியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலக நாடுகளையுமே அமெரிக்காவை மதிக்காத ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்கா என்றால் உலக நாடுகள் காட்டிய அந்த மரியாதை இன்று சிதைந்து வருகிறது. ஐரோப்பிய நாடுகள் கூட இன்று அமெரிக்காவைக் கலந்தாலோசிக்காமல் இந்தியாவுடன் பல்வேறு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு முக்கியக் காரணம், வரிக் கொள்கை என்ற பெயரில் நாம் பல நாடுகளின் நம்பிக்கையைச் சிதைத்ததுதான்.

அமெரிக்கா ஒரு பணக்கார நாடாக இருக்கலாம், ஆனால் நமது கடன் சுமை 35 டிரில்லியனைத் தாண்டி வளர்ந்து கொண்டே இருக்கிறது. நமது ஜிடிபி (GDP) விகிதம் சரிவைச் சந்திக்கும் வேளையில், இந்தியாவின் கடன் குறைந்து அதன் ஜிடிபி வளர்ச்சி அபரிமிதமாக உயர்ந்து வருகிறது. ஒரு நாட்டை ஆள்பவர்கள், வளரும் நாடுகளின் வேகத்தைப் புரிந்துகொண்டு ராஜதந்திரத்தோடு செயல்பட வேண்டும். ஆனால், நாம் செய்த தவறுகளின் பயனாக, இன்று இந்தியா தலைமையிலான ஒரு மறைமுகக் கூட்டணி உருவாகியுள்ளது. இதைத் தகர்க்க இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம். இனியாவது உலக நாடுகளின் பலத்தையும், இந்தியாவின் புதிய பரிமாணத்தையும் உணர்ந்து அதிபர்கள் செயல்பட வேண்டும்  என பேசியுள்ளார்!