24 special

அடுத்த மர்ம முடிச்சு அவிழ்ந்தது… கண்டுபிடித்தது சிபிஐ… அஜித்குமார் விஷயம் வெளிவந்தது கார்!

AJITHKUMAR,MKSTALIN
AJITHKUMAR,MKSTALIN

ஒட்டு மொத்த தமிழகத்தையும்  அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் என்றால் திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் தான். 


திருப்புவனத்தில் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் நகை நகை திருடியதாக கூறி  கடந்த மாதம் 28 ஆம் தேதி விசாரனைக்கு தமிழக காவல்துறை  அழைத்து சென்றபோது மிகவும் கொடூரமாக கடுமையாக தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சி அடைய செய்தது. இந்த விஷயம் ஊர் முழுவதும் தெரிந்தவுடன் போராட்டங்கள் நடத்தப்பட்டது, பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அஜித் குமார் வழக்கில் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டது. 

விஷயம் பூதாகரமாக வெடிக்க அஜித் குமாரை விசாரனைக்கு அழைத்து சென்ற போலீசார் கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் திமுகவினர் அஜித்குமார் குடும்பத்துடன் பேசி சமரசம் செய்ய முற்பட்டனர்.இது திமுகவுக்கு எதிராக பெரிய சர்ச்சையை தமிழக காவல்துறை விசாரிக்க எதிர்ப்புகள் கிளம்பியது  இதனை தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதற்கிடையே அஜித்குமார் இறந்து 18 நாட்கள் ஆகியும் ஏன் இறப்புச்சான்றிதழ், இறப்பு அறிக்கை வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது . இதையடுத்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய அஜித் குமாரின் இறப்பு சான்றிதழ், திருப்புவனம் காவல் நிலையத்தில் தயார் செய்யப்பட்ட இறப்பு அறிக்கையை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது..இது மிகுந்த சந்தேகத்தை  ஏற்படுத்தி உள்ளது .

இந்த இறப்புச் சான்றிதழுக்கும், போலீசாரின் எஃப்ஐருக்கும் இடையே ஏகப்பட்ட முரண்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது, திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அஜித்குமார் இறந்தார் என்று இறப்பு சான்றிதழில் உள்ளது.. ஆனால், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் பதிவு செய்திருந்த எஃப்ஐஆரில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரவு 11.15 மணிக்கு அஜித்குமார் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து. கடந்த 14 ஆம் தேதி முதல் CBI அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  டி.எஸ்.பி மோஹித்குமார் தலைமையிலான 5 பேர் கொண்ட குழுவினர் அறநிலையத்துறை அலுவலகம் பின்புறமுள்ள கோசாலை, அரசினர் மாணவர் விடுதி, புளியந்தோப்பு ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு விசாரனையை துவங்கினர். 

இதனையடுத்து சிபிஐ விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அஜித்குமாரை போலீசார் அழைத்து சென்ற இடங்களிலும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அஜித்குமார் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவ தினத்திற்கு முந்தைய நாள் அஜித்குமார் மற்றும் அவரது சகோதரர் எங்கே அழைத்து செல்லப்பட்டனர்  என விசாரணை நடத்தினர். 

இந்த நிலையில் தான், உயிரிழந்த அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தில் போலி நம்பர் பிளேட் இருந்ததை சிபிஐ அதிகாரிகள் இன்று கண்டுபிடித்தனர்.கோவில் செயல் அலுவலர் அலுவலகத்திற்கு இன்று மாலை கொண்டு வரப்பட்ட போலீசார் பயன்படுத்திய டெம்போ வேனை சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்து ஓட்டுநர் ராமச்சந்திரனிடம் விசாரணை செய்தனர்.

அப்போது ஒரே வாகனத்திற்கு இரண்டு பதிவெண்கள் பயன்படுத்தி இருப்பது தெரிய வந்தது. அதாவது சென்னை பதிவெண் TN 01 G 0491 மற்றும் சிவகங்கை பதிவெண் TN 63 G 0491 என இரண்டு நம்பர் பிளேட் ஸ்டிக்கரை பயன்படுத்தியுள்ளது தெரியவந்தது.இதன்மூலம் கொலையை செய்து விட்டு குற்றத்தை மறைக்க அனைத்து சட்டவிரோத செயல்களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளதை கண்டறிந்த சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் திமுக கவுன்சிலரின் தோட்டத்தில் வைத்து தான் அஜித் குமார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ரத்தத்தோடு அவர் சிறுநீர் கழித்த காட்சிகள் கோவில் சிசிடிவியில் பதிவாகி இருப்பதாக அதிமுக வழக்கறிஞர் அதிரவைக்கும் தகவலை கூறியுள்ளார்.எனவே  CBI அதிகாரிகள் அடுத்ததாக திமுக கவுன்சிலரை சுற்றி வளைக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.