24 special

அறிவாலயம் விரித்த வலை விசிக வில் அடுத்தடுத்து நடக்கப்போகும் அதிரடி மாற்றங்கள் மே 4 பிறகு காத்திருக்கும் அரசியல் பூகம்பம்

MKSTALIN,THIRUMAVALAVAN
MKSTALIN,THIRUMAVALAVAN

2026 சட்டமன்றத் தேர்தல் தொடங்கும்  முன்பே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் தமிழக அரசியலில் பெரும் பேசுபொருளாக இருந்தது. குறிப்பாக கட்சியின் ஆணிவேர்களாகக் கருதப்படும் முக்கியத் தலைவர்கள் பலரும், வேட்பாளர் தேர்வில் திருமாவளவன் காட்டிய பாரபட்சத்தால் கடும் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுவிட்டனர். குறிப்பாக, விசிகவை விட திமுகவுக்கு விசுவாசம் காட்டிய  ஆளூர் ஷாநவாஸ், திமுகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குறிப்பிடும் பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதோடு,  சிந்தனை செல்வன் தொகுதி மாற்றிய  விதம் விசிகவினர் இடையே பெரும் குழப்பத்தை விளைவித்தது.. பல ஆண்டுகளாகக் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் வேலை பார்த்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துடன் இணக்கமான சூழலை உருவாக்கி, வெற்றியை உறுதி செய்து வைத்திருந்த சிந்தனை செல்வனை, தேர்தலுக்கு வெறும் 20 நாட்களுக்கு முன்பு செய்யூர் தொகுதிக்குத் தூக்கியடித்தது பெரும் சூழ்ச்சியாகவே பார்க்கப்படுகிறது. "என்னைத் தோற்கடிக்க வேண்டும் என்றே தலைவர் இப்படிச் செய்துவிட்டார்" என அவர் தனது நெருங்கிய வட்டாரத்தில் கண்ணீர் மல்கப் புலம்பியது கட்சியின் உள்வட்டத்தில் புலம்பியுளார் 

மறுபுறம், செய்யூர் தொகுதியைத் தனக்காகச் வைத்திருந்த பனையூர் பாபு, தனது வாய்ப்பு பறிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், அடுத்தடுத்து நடந்த கட்சிப் பதவி உயர்வுகளிலும் புறக்கணிக்கப்பட்டதை மானப் பிரச்சினையாக எடுத்துக்கொண்டுள்ளார். "இனி இந்தச் சந்தேகப் பார்வை கொண்ட தலைமையின் கீழ் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாது" என ஆவேசமாகப் பேசி வருகிறார். மேலும்  தேர்தல் முடிவுகள் வெளியான கையோடு ஒரு பெரும் படையைத் திரட்டிக்கொண்டு விசிக-விலிருந்து வெளியேறத் தயாராகிவிட்டார். அதிருப்தியாளர்களைச் சமாதானப்படுத்த எஸ்.எஸ்.பாலாஜிக்கும், ஷாநவாஸுக்கும் பதவிகளை வாரி வழங்கிய திருமா, பாபுவை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டது எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாகிவிட்டது. 

இதற்கிடையில், விசிக-வின் நட்சத்திரப் பேச்சாளரான ஆளூர் ஷாநவாஸை எப்படியாவது தங்கள் பக்கம் இழுக்க திமுக மிகத் தீவிரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது. 2020 முதலே இதற்கான முயற்சிகள் நடந்தாலும், தற்போது நிலவும் அதிருப்தியைப் பயன்படுத்தி முரசொலி செல்வம் வாயிலாக திமுக விரித்த வலைக்கு ஷாநவாஸ் இணங்கிவிடுவார் என்ற அச்சம் திருமாவுக்குத் தொற்றிக்கொண்டது. அதனாலேயே, ஏப்ரல் 24 நள்ளிரவில் அவசர அவசரமாக அவருக்குப் பதவி வழங்கித் தற்காத்துக் கொண்டார். ஆனால், மற்ற கூட்டணிக் கட்சி நிர்வாகிகளைத் தள்ளி வைக்கும் திமுக தலைமை, விசிக-விலிருந்து வருபவர்களுக்கு மட்டும் 'சிவப்பு கம்பளம்' விரித்து வரவேற்பது திருமாவளவனைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது தம்பிகள் வரிசையாக அறிவாலயம் நோக்கிப் படையெடுப்பார்களோ என்ற பயம், விசிக-வின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அதிகாரப் போட்டி மற்றும் தொகுதி மாற்றங்கள் ஏற்படுத்திய விரிசல், தேர்தல் முடிவுகளுக்குப் பின் விசிக-வில் ஒரு மிகப்பெரிய அரசியல் பூகம்பத்தை நிகழ்த்தப் போவது மட்டும் உறுதி.