ஆளுநரை சந்தித்து அண்ணாமலை கொடுத்த மர்ம பெட்டியில் உள்ள ரகசிய தகவல்கள் அனைத்தும் தற்போது ஆளுநருக்கு குறிப்பாக ஆளுநர் மாளிகையில் விடிய விடிய நடைபெற்ற ஆலோசனை மூலம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் களமே மாற இருக்கிறது.
சிட்டிசன் திரைப்படத்தில் அத்திபட்டி என்ற கிராமமே எப்படி அழிந்தது என்ற காட்சிகள் மிக பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது போன்று அண்ணாமலை ஆளுநரிடம் கொடுத்துள்ள மர்ம பெட்டியில் உள்ள பெயர்கள் பற்றிய முழு விவரங்கள் பொது வெளிக்கு வந்தால் தமிழக அரசியல் களம் மட்டுமின்றி சாமானிய மக்களின் வாழ்விலும் பல்வேறு மாற்றங்கள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, துணை தலைவர் கரு.நாகராஜன், வழக்கறிஞர்கள் பிரிவு தலைவர் ஆர்.சி.பால் கனகராஜ் உள்பட முக்கிய நிர்வாகிகள் நேற்று மாலை சந்தித்தனர்.
அப்போது தி.மு.க அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க முதல் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கக்கூடிய பினாமிகள் தகவல் அடங்கிய DMK FILES-2 என்ற கோப்பு மற்றும் ஆவணங்கள் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கப்பட்டதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதோடு நில்லாமல் மர்ம பெட்டியும் பூட்டி சாவியுடன் ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழக பாஜக மூத்த தலைவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்தோம்.அப்போது ஆளுநரிடம் தி.மு.க அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தி.மு.க முதல் குடும்பத்துடன் தொடர்புள்ள பினாமி தகவல்கள் அடங்கிய தி.மு.க ஃபைல்ஸ் 2 ஆவணங்கள் மற்றும் ரூ.5600 கோடி மதிப்பிலான 3 ஊழல் குறித்த ஆதாரங்களை வழங்கியுள்ளோம்.
மேலும் இதுதொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடனே இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்" என அண்ணாமலை கூறியுள்ளார்.அண்ணாமலை கொடுத்த பட்டியல் உண்மையில் ஆளுநருக்கு மிக பெரிய ஷாக்காக அமைந்து இருக்கிறது என்ன சமூகத்தில் மிக பெரிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் பினாமியாக இருக்கிறார்களா? எப்படி இதெல்லாம் நடந்தது? தமிழக விஜிலன்ஸ் பிரிவு இருக்கிறதா என அழுத்தம் திருத்தமாக ஆளுநரே அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.
புகாரை பெற்று கொண்ட ஆளுநர் உடனடியாக தனது செயலாளர்கள் மூலம் முழுமையாக மர்ம பெட்டியை திறந்து அதில் உள்ள ஆவணங்களையும் ஆளுநரே அதிக நேரம் செலவு செய்து புகாரை ஆய்வு செய்து இருக்கிறார்.இந்த சூழலில் இன்று முழுமையாக ஆளுநரை புகாரை பரிசீலனை செய்து உடனடியாக தலைமை செயலாளருக்கு புகாரை அனுப்பி விளக்கம் கேட்க இருப்பதாகவும். மேலும் பெரும் குற்றங்களை விசாரணை செய்யும் மத்திய குற்ற அமைப்பிற்கு தமிழக ஆளுநர் என்ற முறையில் விசாரணை செய்ய கடிதம் எழுத இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் சத்தமில்லாமல் 300 மேற்பட்ட சினிமாதுறையை சார்ந்த பிரபலங்கள் உள்ளிட்ட பலர் பினாமி சொத்துக்களை பதுக்கிய அடிப்படையில் உள்ளே போக இருப்பதாக கூறப்படுகிறது.
திமுக பைல்ஸ் ஒன்றை ஊடகங்கள் முன்னிலையில் வெளியிட்ட அண்ணாமலை இந்த முறை ஆளுநரை சந்தித்து நேரில் புகாரை கொடுக்கவும் அதிலும் அது பற்றிய செய்தியாளர் சந்திப்பை தவிர்க்கவும் இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கிறதாம் அது குறித்து அடுத்த வீடியோவில் பார்க்கலாம் மறக்காமல் TNNEWS24 DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.