24 special

சிக்கன் பிரைடு ரைஸ் சாப்பிட்ட இரண்டு பேருக்கு ஏற்பட்ட கதி....

chicken fried rice
chicken fried rice

அனைத்து ஜீவராசிகளும் மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் தற்போது ஓடி கொண்டிருப்பது அரை ஜான் வயித்துக்கு தான் என்று கூறுவதை நாம் கேட்டிருப்போம் அதில் எந்த தவறும் இல்லை வயிற்றுப் பசிக்காகவே சம்பாதிக்கிறோம் ஓடி அழைக்கிறோம், சாப்பிடுகிறோம் பிறகு மீண்டும் அதையே மாறி மாறி செய்து கொண்டிருக்கிறோம் இருப்பினும் உணவு தவிர்த்து மற்ற சில விஷயங்களுக்காகவும் தற்போது பணத்தை தேடி ஓடுகிறோம் அது வேறு விஷயம் என்று பார்த்தால் கூட உணவு என்பது முதன்மை மற்றும் முக்கிய காரணமாகும். அப்படிப்பட்ட உணவு புதிய வகைகளை உண்ண வேண்டும் என்பதும் தன் நாக்கிற்கு சுவையான தனக்கு பிடித்தமான உணவை உண்ண வேண்டும் என்பதிலும் அனைவரும் கவனம் கொண்டிருப்பார், 


அதே சமயத்தில் சுவைக்காகவே பலர் தற்போது பல இடங்களுக்குச் சென்று பலவகையான உணவுகளை முயற்சித்து வருகிறார்கள். மேலும் உணவகங்களை வைத்து பிறருக்கு உணவளிக்கும் தொழிலை செய்து வருபவர்களுக்கும் என்றுமே நஷ்டத்தை அந்த உணவானது கொடுத்ததே கிடையாது அதனாலே பலர் தற்போது சிறிய சிறிய உணவகங்களை திறந்து தொழில் முனைவர்களாக உள்ளனர். அந்த வகையில் சமீப காலமாக தெருவோரங்களில் அதிக தள்ளுவண்டி கடைகள் முளைத்துள்ளது. அந்த தள்ளுவண்டி கடைகளில் முன்பு விற்கப்பட்ட இட்லி தோசை பொங்கல் பூரி என விற்கப்படுவதில்லை சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுஸ் எக் ஃபைடு ரைஸ், சிக்கன் 65 என அனைத்துமே பாஸ் ஃப்ட்டுகள் தான்! இந்த பாஸ்புட்டுகளில் பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் மசாலா பொருட்கள் அனைத்துமே ஏற்கனவே தயாரித்து வைக்கப்படும் உணவு மேலும் பொதுமக்கள் அவற்றை கேட்டு வரும் பொழுது தான் சூடாக செய்து கொடுக்கிறார்கள் அப்படி சூடாக பரிமாறப்படுவது பல உணவு பிரியர்களுக்கு சுவைக்க வேண்டுமென்ற ஆசையையும் தூண்டிவிடுகிறது.

மேலும் பெரிய பெரிய ஹோட்டல்களில் விற்கப்படும் விலையில் இந்த சாதாரண தள்ளுவண்டி கடைகளில் விற்கப்படுவதில்லை குறைந்த செலவில் சூடாக மிகவும் விரைவாக உணவு கிடைக்கிறது என்பதற்காகவும் பலர் பல நேரங்களில் பாஸ்போர்ட்களை விற்கும் தள்ளுவண்டி கடைகளை நாடி செல்கிறார்கள். அந்த வகையில் தினமும் நான் ஒரு வேலையாவது பாஸ்ட் புட் தின்று விடுவேன் என்று கூறுபவர்களின் நிலைமையை எண்ணிப் பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக உள்ளதாக பல மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.ஏனென்றால் இப்படி அதிக அளவிலான பாஸ்புர்ட்டை எடுத்துக் கொள்வதால் அவர்களின் உடல்நலம் பாதிப்பை அடையும் என்றும் எதிர்காலத்தில் பல வியாதிகளும் பின் விளைவுகளும் ஏற்படும் என்று கூறுகிறார்கள். சரி எதிர்காலத்தில் தானே அது அப்போ பார்த்துக் கொள்ளலாம் என்றும் சில உணவுப் பிரியர்கள் சிக்கன் ரைஸ் தினமும் சாப்பிட ஆரம்பிக்கிறார்கள் ஆனால் தற்போதயெல்லாம் ஆரோக்கியமற்ற தரம் குறைந்த உணவை உட்கொண்ட உடனேயே உடல் தனது எதிர்ப்பை காட்டத் தொடங்கி விடுகிறது.

அதாவது நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டி அருகே உள்ள தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி என்னும் இளைஞர் பொறியியல் கல்லூரியில் பயின்று வருகிறார், இவர் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள கருணாநிதி ஹோட்டலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டு விட்டு ஏழு சிக்கன் ரைஸ் பார்சலை வீட்டிற்கு வாங்கி சென்றுள்ளார். அதோடு பகவதியின் குடும்பத்தினர் இந்த சிக்கன் ரைஸ் உண்ட பிறகு உடல்நல பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். அதனால் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிக்கன் ரைஸ் உண்ட பிறகு தான் இது போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறியுள்ளதை அடுத்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் நாமக்கல் மாவட்ட அலுவலகங்கள் உணவகத்தை சோதனையிட்டதோடு அதனை மூடி ஹோட்டலுக்கு சீல் வைத்துள்ளனர். தினமும் அதிகம் பேர் வந்து உணவு சாப்பிட்டு செல்லும் அந்த ஹோட்டலின் உணவை உண்டு இருவர் மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.