24 special

கரூர் விவகாரம் சி.பி.ஐ சென்ற அடுத்த நாளே! இப்படியா நடக்கணும்! பொய் சொல்லி வசமாக சிக்கிய திமுக! மொத்த கதையும் ஓவர்

MKSTALIN,CBI
MKSTALIN,CBI

கரூரில் வேலுச்சாமிபுரத்தில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தவெக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. அந்த மனு மீதான விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாட்டையே உலுக்கிப் போட்ட கரூர் துயரச் சம்பவம் இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 


இதற்கிடையே கரூர் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, அரசியல் ரீதியாக தி.மு.க.,வுக்கு சாதகமாக அமையுமா அல்லது விசாரணையில் வெளி வரும் உண்மையால் பின்னடைவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது, கரூர் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று, உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.சி.பி.ஐ., விசாரணை என்பது, மத்திய அரசின் கண் அசைவில் நடக்கக்கூடும் என்ற அச்சம், தி.மு.க., தரப்புக்கு ஏற்பட்டுள்ளது.  , கரூர் சம்பவத்திற்கு முன், விஜய் பேசிக் கொண்டிருந்தபோது, ஆம்புலன்ஸ் வாகனங்கள் சுற்றி வந்தது ஏன் என்பது சி.பி.ஐ., விசாரணையில் தெரிய வரலாம்.

ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று உடல்களைதான், அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதி இருக்கும்போது, எப்படி 40 பேர் உடல்களுக்கு, அடுத்தடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த உண்மையும் அம்பலமாகும்.இதன் வாயிலாக, உண்மையான குற்றவாளிகளை சி.பி.ஐ., கைது செய்து, அது தொடர்பான விசாரணையை, வரும் சட்டசபை தேர்தல் வரை தள்ளிப் போடவும் வாய்ப்பு உள்ளது.

ஆளும்கட்சிக்கு எதிராக உண்மைகள் வெளிவரும்பட்சத்தில், எதிர்க்கட்சிகளின் பிரசார பலத்தால், அது தேர்தலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.சி.பி.ஐ., விசாரணையை கண்காணிக்க, முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில், 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை, உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது.அஜோய் ரஸ்தோகி கண்டிப்பானவர் என்பதால், தி.மு.க., தரப்புக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த உத்தரவுக்குப் பிறகு உச்ச நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்பியும், வழக்குரைஞருமான வில்சன் கூறுகையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அரசு அமைத்த விசாரணை ஆணையம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பவில்லை.என்று ககூறியது மட்டுமல்லாமல் விசாரணை தொடரலாம் என பேட்டியளித்தார். 

ஆனால் உண்மை என்னவென்றால் : நீதிபதிகள் தமது தீர்ப்பில் கூறியுள்ளதாவது: கரூர் நெரிசல் உயிரிழப்பு வழக்கில் தமிழக அரசு தரப்பி்ல் முன்னாள் நீதிபதி தலைமையிலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையிலும் தனித்தனியாக விசாரணை என்பது தேவையற்றது.

இதுபோன்ற விசாரணைகள் குழப்பத்துக்குத்தான் வழிவகுக்கும். உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு விசாரி்த்து வரும் போது, சென்னையில் வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க கோரி தனது அதிகார எல்லைக்குள் வராத வழக்கை தனி நீதிபதி விசாரித்து, சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்தது தன்னிச்சையானது.

தமிழக அரசு நியமித்த ஒருநபர் ஆணையம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு உடனடியாக கலைக்கப்படுகிறது. அவர்கள் இதுவரை நடத்தி சேகரித்த அனைத்து ஆதாரங்கள், டிஜிட்டல் ஆவணங்களையும் உடனடியாக சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். அதேபோல, கரூர் எஸ்.பி. மற்றும் கரூர் டவுன் காவல் ஆய்வாளர் பதிவு செய்துள்ள வழக்கு தொடர்பான அனைத்து கோப்புகளையும் சிபிஐக்கு வழங்கி, சிபிஐ அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். தீர்ப்பு இப்படி இருக்கையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை செய்தியாளர்கள் சந்திப்பில் பொய் சொல்லி மாட்டிக்கொண்டுள்ளது  திமுக. தீர்ப்பையே மாற்றி சொன்னால் தமிழகத்தில் வழக்கு எப்படி ஒழுங்காக நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.