
தற்போது தமிழக அரசியலை புரட்டி போட்டுள்ளது கரூர் சம்பவம். சி.பிஐ க்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது திமுகவுக்கு பெரும் இடியை இறக்கியுள்ளது. கடந்த மாதம் 27-ம் தேதி மதியம் 12 மணிக்கு தவெக தலைவர் கரூர் வருவார் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அறிவித்திருந்த நிலையில், 7 மணி நேரம் தாமதமாக அவர் வந்ததே கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆதரங்களோடு திமுகவை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.
கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொய்களை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.இது குறித்து அண்ணாமலை பேசுகையில், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசின் மீது தவறில்லை என்றும், காவல்துறை மீது தவறில்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி இருக்கிறார். அதே நேரத்தில் அந்தக் கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் 606 பேர் இருந்ததாக கூறியுள்ளார்.
சம்பவத்துக்கு அடுத்த நாளான செப்டம்பர் 28 ஆம் தேதி நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஏடிஜிபி டேவிட்சன், பாதுகாப்பு பணியில் 500 காவலர்கள் இருந்ததாக குறிப்பிட்டார். ஆனால் இன்று வெளியிட்ட காவல்துறை செய்தி அறிக்கையில், கரூர் சம்பவ இடத்தில் 350 பேர் இருந்ததாக சொல்லி இருக்கிறார். அப்படியானால் மீதி 150 பேர் வேறு இடத்தில் இருந்ததாக கருதப்படுகிறது என்று அண்ணாமலை பேசினார்
தொடர்ந்து பேசிய அவர், இந்த கரூர் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்ட பிறகு, முதலமைச்சர் 606 பேர் என்று கூறுகிறார். அப்படி பார்த்துக் கொண்டால், முதல்வர் 606 பேர், ஏடிஜிபி 500 பேர் மற்றும் காவல்துறையின் அறிக்கையில் 350 என சிபிஐக்கு வழக்கு போன பிறகு முன்னுக்கு முரணாக பதில் அளித்து வருகின்றனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தங்கள் மீது தவறு இல்லை என்பதை காட்டுவதற்காக இந்த பொய்களை கட்டவிழ்த்து விடுவதாக பார்க்கிறோம்.
அரசின் மீதோ, அரசு அதிகாரிகள் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த தவறும் இல்லை என்பது போல முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசிக் கொண்டு இருக்கிறார். இதை மக்கள் மத்தியில் சுட்டிக் காட்டுகிறோம். அதனால் சிபிஐக்கு ஆதரவு கொடுத்து, உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.
கரூர் மருத்துவமனையில் 24 மருத்துவர்கள் தலைமையில் உடற்கூறாய்வு நடந்து இருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதிய தகவல் ஒன்றை கூறுகிறார். சம்பவம் நடந்ததை அடுத்து நள்ளிரவு 1 மணி முதல் அடுத்த நாள் நண்பகல் 1 மணி வரை 41 பேரின் உடற்கூறாய்வு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டடு உள்ளது. உச்ச நீதிமன்றமும் மக்களும் கேட்கும் கேள்வி ஒன்றே ஒன்றுதான்... முதல் 5 மணி நேரத்தில் எத்தனை உடற்கூறு ஆய்வுகள் செய்தீர்கள்? 2 டேபிள்களை வைத்துக் கொண்டு 41 பேருக்கு உடற்கூறாய்வு நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.
முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் கரூர் வருகிறார்கள் என்பதற்காகவும், உடலுக்கு மாலை போட வேண்டும், போட்டோ எடுக்க வேண்டும் என்பதற்காகவுமே, அவசரகதியில் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதாக கருதுகிறோம். இது நிச்சயமாக சிபிஐ விசாரணையில் தெரியவரும். அரசின் பொய்களும் முதலமைச்சர் ஸ்டாலினின் பொய்களும் சிபிஐ விசாரணையில் வெளியே வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பாஜக தேசியக் குழு உறுப்பினர் அண்ணாமலை கூறினார்.
இவைகுறித்து அணைத்து ஆதாரங்களையும் ஏற்கனவே டெல்லியிடம் ஒப்படைத்துள்ளார் அண்ணாமலை.