
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. தாலிபான்களும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு கடும் சண்டை நடந்தது. இதில் பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த 58 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் தான் மீண்டும் எல்லையில் இருதரப்பினர் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. மீண்டும் பாகிஸ்தானை தாலிபான்கள் ஓடவிட்டு அடித்தனர். ராணுவ வீரர்கள், கொத்து கொத்தாக கொல்லப்பட்டுள்ளனர். இதனால் பாகிஸ்தான் தங்களை காப்பாற்றும்படி கத்தார் மற்றும் சவுதி அரேபியாவிடம் உதவி கோரியுள்ளது. இது இருநாடுகள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் அண்டை நாடுகளாக உள்ளன. இருநாடுகளும் எல்லைகளை பகிர்ந்து கொள்கின்றன. இந்த ஆண்டு தொடக்கம் முதலே இருநாடுகள் இடையே எல்லையில் பிரச்சனை வெடித்து வருகிறது. ஆப்கானிஸ்தானில் செயல்படும் டிடிபி எனும் தெஹ்ரிக் இ தாலிபான் அமைப்பினருக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. அவ்வப்போது எல்லையில் மோதி கொள்கின்றனர்
இந்நிலையில் தான் டிடிபி தாலிபான் தலைவர்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்கள் மூலமாக தாக்குதல் நடத்தியது. இதில் 10க்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதனை ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் அரசு கடுமையாக கண்டித்தது. எல்லை தாண்டி பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலால் ஆப்கானிஸ்தான் கடும் கோபமடைந்தது. பதிலடி கொடுக்கப்படும் என்று அறிவித்தது.
இதையடுத்து தாலிபான்கள் பாகிஸ்தான் எல்லையில் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். ராக்கெட் குண்டுகளையும் வீசினர். பாகிஸ்தான் தரப்பில் 58 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதனால் இருநாடுகள் இடையே பதற்றம் ஏற்பட்டது. அதன்பிறகு கத்தார், சவுதி அரேபியா தலையிட்டு மோதலை முடித்து வைத்தது. ஆனால் இது ரொம்ப காலம் நீடிக்கவில்லை. நேற்று அதிகாலையில்
தாலிபான் ராணுவமும், பாகிஸ்தான் ராணுவமும் மாறி மாறி துப்பாக்கிச்சூடு, ஷெல் தாக்குதல் நடத்தியது. ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் இருநாடுகளின் எல்லையில் இந்த மோதல் வலுத்தது.அதுமட்டுமின்றி பாகிஸ்தானி்ன் அவுட் போஸ்ட், டாங்கி, துப்பாக்கி உள்ளிட்டவற்றை தாலிபான்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து கத்தாரரிடம் கெஞ்ச தொடங்கியது பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானிடம் பேசி தாக்குதலை நிறுத்த சொல்லுங்கள் என இதனை தொடர்ந்து இருநாடுகளிடமும் பேசியது கத்தார். உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் தாக்குதலை நிறுத்தினர். முன்னதாக ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். அப்போது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்களின் உடைமைகளை கைவிட்டு ஓடினர். இதனால் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் துப்பாக்கி, ராணுவ உடைகள், டாங்கியை தாலிபான்கள் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவ டாங்கியில் தாலிபான்கள் வலம் வந்தனர். அதேபோல் கைகளில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் உடைகளை ஏந்தி கார்கள் மீது நின்று தாலிபான்கள் ஊர்வலம் சென்றனர். பாகிஸ்தான் உடனான மோதலில் வெற்றியை குறிக்கும் வகையிலும், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முதுகை காட்டி உயிருக்கு பயந்து எஸ்கேப் ஆனதை உலகுக்கு தெரிவிக்கும் வகையிலும் இந்த ஊர்வலத்தை அவர்கள் நடத்தினர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர்கான் முட்டாகி, எட்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நேரத்தில், இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்தியா உடனான உறவை ஆப்கானிஸ்தான் வலுப்படுத்தி வருவதை கண்டு அதிருப்தியில் ஆப்கான் மேல் கைவைத்து வசமாக வாங்கிக்கட்டி ஓடியுள்ளது பாகிஸ்தான்.