
அக்டோபர் 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகே திருமாவளன் செய்த காரியம் தற்போது வேறு சர்ச்சையில் சிக்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அருகே விசிக தலைவர் திருமாவளவனின் கார் மீது இடித்ததாகக் கூறி வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தனது ஸ்கூட்டரை சாலையில் நிறுத்தி திரும்பி பார்த்தபோது அங்கு வந்த விசிகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ காட்சி வெளியானது. வழக்கறிஞர் ராஜீவ் காந்தியை கும்பலாக தாக்கி, அவரது ஸ்கூட்டரையும் சாலையில் தள்ளி விசிகவினர் அடங்க மறுத்து அட்டூழியம் செய்தனர்.
இதில் அரசியல் சதி இருப்பதாகக் கூறும் விசிகவினர் தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணாகவும், பதட்டத்துடனும் பேசி வருகின்றனர். திருமாவளவனின் கார் மீது ஸ்கூட்டரில் வந்த ராஜீவ் காந்தி மோதி தகராறு செய்ததாக விசிக வழக்கறிஞர் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்திருந்தார். ஆனால், காவல் நிலையத்தில் விசிகவினர் புகார் அளித்த அதே நாள் திருமாவளவன் வெளியிட்ட காணொளியில் தனது கார், ஸ்கூட்டர் மீது மோதவே இல்லை என்று தெரிவித்திருந்தார். திருமாவளவனின் இந்த வீடியோவின் மூலம் காலையில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் விசிகவினர் கொடுத்த புகார் பொய் என்பது உறுதியானது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருமாவளவன் கூறும் போது "எங்களைப் பார்த்து முறைத்ததற்காக எங்கள் கட்சியினர் நாலு தட்டு தட்டினார்கள். அதையும் ஒழுங்காக கூட செய்யவில்லை. அவர் எந்த ஜாதி என்று பார்த்து அடிக்கவில்லை" என்று ஆணவமாக கருத்து தெரிவித்து உள்ளார்
இந்நிலையில், திருமாவின் கார் டூவீலரில் மோதிய சம்பவத்தில் ராஜீவ் காந்திக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என போராட்டத்தில் குதித்துள்ளனர் வழக்கறிஞர்கள்.ராஜீவ் காந்திக்கு நீதி கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும். இதில் அடிபட்டவருக்கு எந்தவித நிவாரணமும் இல்லை. இந்த பார் கவுன்சில் வழக்கறிகளுக்கான மன்றமாக இருக்கிறதா? என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது. வருகிற பார் கவுன்சில் தேர்தலை வழக்கறிஞர்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிகள் எல்லாம் புறக்கணிக்க வேண்டும். இது எங்களுடைய வேண்டுகோள். வழக்கறிஞர்களுக்கான மன்றமாக இல்லாவிட்டால் பார் கவுன்சில் எங்களுக்கு தேவையில்லை. முறைத்தார்... அதனால் 4 தட்டு தட்டினார்கள் என்று ஒரு தலைவர் இப்படி பேசலாமா? பார் கவுன்சிலிலேயே வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு இல்லையா?’’ எனக் கொந்தளிக்கிறார்கள் வழக்கறிஞர்கள் மேலும் இது தொடர்பாக தமிழக அரசோ அல்லது பார் கவுன்சிலோ வழக்கு தொடரவில்லை எனில் டெல்லி உச்ச நீதிமன்றம் செல்ல வழக்கறிஞர்கள் தயாராகி விட்டார்களாம். மேலும் திருமா தேசத்திற்கு எதிராக பேசிய வீடியோக்களையும் டெல்லியிடம் சமர்ப்பித்து விடுதலைசிறுத்தை கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற வழக்கு தொடர உள்ளார்களாம்
இது திமுக வட்டாரத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் இது தேவைதானா என திருமாவை கடிந்துள்ளது அறிவாலய தரப்பு. ஏற்கனவே உச்சநீதிமன்றம் தமிழக அரசின் மேல் பல கடுமையான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் இந்த சம்பவம் மேலும் தமிழக அரசின் மேல் கடுப்படைய செய்துள்ளது.
இதுதொடர்பாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தலைமை நீதிபதி மீதான தாக்குதலை கண்டிக்கும் விசிக, வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்துகிறது. மேலும் திருமாவளவனின் சமூக வலைதள பக்கத்தில் ஒரு கமென்ட் போட முடியவில்லை. குறிப்பாக எக்ஸ் வலைதள பக்கத்தில் அந்த வசதியை அவர் ஆஃப் செய்து வைத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது, கருத்து சுதந்திரம் குறித்து திருமாவளவன் பேசுவது நியாயமா? என்று கேள்வி எழுப்பினார்.