Cinema

விஜய் கட்சி பெயரை விமர்சனம் செய்த பிரபலம்..!

Anthanan, Vijay
Anthanan, Vijay

நடிகர் விஜய் நேற்று முதல் தளபதி என்ற பெயரை மறந்துவிட்டு தலைவர் என கூறி வருகிறன்றனர். தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை அறிவித்ததும் இந்திய அளவில் சமூக தலமான எக்ஸ் தலத்தில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். விஜய் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தலை நோக்கி தான் விஜய்யின் பயணம் இருக்கும் என அவர் வெளியிட்ட அறிகையில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பத்திரிகையாளர் அந்தணன் விஜய் அரசியல் கட்சி தொடங்கியது குறித்து பேசியிருக்கிறார்.


விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். வெகு நாட்களாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாரபூர்வமாக கட்சியின் பெயரை அறிவித்தார். டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தவுடன் அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள், நிர்வாகிகள் உற்சாகதுடன் வரவேற்பு கொடுத்து மக்களுக்கு இனிப்பு கொடுத்தும் தங்களது கோரிக்கையை நிறைவேற்றி விட்டார் என மகிழ்ச்சியோடு ரசிகர்கள் தெரிவித்து வந்தனர்.

விஜய் அரசியல் தொடர்பான முதல் அறிக்கையில் ஊழலை எதிர்ப்பதாகவும் மத சாதி அரசியலை தடுப்பது குறித்தும் அதில் குறிப்பிட்டிருந்தது. இது திமுகவுக்கு எதிராக தான் விஜய் உள்ளார் என அதிமுகவை சேர்ந்த சிலர் தெரிவித்தனர். நாடாளுமன்ற தேர்தலில் எந் கட்சிக்கும் ஆதரவு கொடுக்க கூடாது, சட்ட மன்ற தேர்தலில் தான் பயணிக்க போகிறோம் என தெரிவித்தார். ஏற்கனவே விஜய் அரசியல் குறித்து பிரபல பத்திரிகையாளர் அந்தணன் விஜய் என்ன ஊடகங்களை கண்டு தலை குனிந்து செல்வதாகவும் ரஜினிகாந்த் எப்படி கம்பிரமாக செல்கிறார், விஜய் மாஸ்க் போட்டுகொண்டு தலையை கீழ வைத்து செல்கிறார் இவர் எப்படி நாளைக்கு மக்களை நேருக்கு நேர் சந்தித்து பேசப்போகிறார் என விமர்சனம் செய்து வந்தார். 

இந்நிலையில், நேற்று கட்சி பெயர் வெளியானதும் ஒரு வீடியோவில் அந்தணன் பேசியது, "ஒரு அரசியல் கட்சிக்கு அதன் பெயர் ரொம்பவே முக்கியத்துவம் வாய்ந்தது. விஜய்யும் தனது அரசியல் கட்சிக்கு பெயர் வைப்பதற்காக புஸ்ஸி ஆனந்த் தலைமையிலான ஒரு குழுவை அமைத்திருந்தார். அவர்கள் மொத்தம் கட்சிக்காக 50 பெயர்களை எழுதிக்கொண்டுபோய் விஜய்யிடம் கொடுத்தார்கள். அந்த 50 பெயர்களில் விஜய் ஓகே சொன்ன பெயர்தான் இந்த தமிழக வெற்றி கழகம். அவர் ஓகே சொன்ன இந்தப் பெயரே இப்படி இருக்கிறது என்றால் அவர் ரிஜெக்ட் செய்த மீதம் 49 பெயர்கள் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப்பாருங்கள். பெயர் இன்னும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாம் என்பதுதான் ஆழமான கருத்து. அதேபோல் மாற்றத்திற்கான ஒருவராக தன்னை முன்னிறுத்துகிறார் விஜய்.

அவர் வெளியிட்ட அறிக்கையில் வழக்கமான அரசியல்வாதிகள் சொல்லும் டெம்ப்ளேட் விஷயங்கள்தான் இருந்தன. பிராக்டிக்கலான அரசியலை அவர் பேசுவார் என்று எதிர்பார்த்தால் அது இல்லை. அவர் கூறியிருந்த விஷயங்களை மதம் பற்றி பேசியிருந்ததை வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சாதி குறித்து சொன்னது எல்லாம் வாய்ப்பே இல்லை. ஏனெனில் அரசியலில் சாதிதான் முக்கியமான ரோல் செய்துகொண்டிருக்கிறது" என்றார். இவரின் பேச்சு இணையத்தில் வைரலாக ரசிகர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அரசியலில் விஜய் சர்வே ஆவது மிக கஷ்டம் என்றும் தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி அரசியலுக்கு வந்த போது மக்கள் ஆதரவு கொடுக்காததால் மீண்டும் சினிமாவில் காலடி எடுத்தது போல் விஜய்யும் மிக விரைவில் சினிமாவிற்கு சென்றுவிடுவார் என்று கூறுகின்றனர்.