
திருப்பரங்குன்றம் விஷயம் பெரிதாகி கொண்டே போகிறது. இந்துக்கள் என்றால் திமுக அரசு என்ன நினைக்கிறது என்று தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலினோ இந்து பண்டிகைக்கு வாழ்த்து சொல்லமாட்டார் ஆனால் சமூக நீதி என பேசுவார்,இந்து மந்திரங்களை விமர்சனம் செய்வார்,உதயநிதியோ இந்துக்களின் வாழ்வியல் முறையான சனாதானத்தை வேறொருப்போம் என பேசிவருகிறார். உதயநிதி கடவுள் நம்பிக்கை கிடையாது என தெளிவாக பேசிவிட்டு,நான் கிருஸ்த்துவன்,கிருஸ்த்துவ கொள்கையும் திமுக கொள்கையும் ஒன்று என சிலாகித்து வருகிறார் துணை முதல்வர். இவர்கள் எப்படி இந்துக்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என கேள்விகள் ஆண்டு ஆண்டு காலமாக எழுந்து வருகிறது, இந்த சூழலில் திருப்பரங்குன்றம் விஷயம் திமுகவிற்கு பெரும் இடியை இறக்க உள்ளது. இந்து மக்கள் எதோ அமைதியாக இருக்கிறார்கள் என நினைத்து ஆடாத ஆட்டமெல்லாம் போட்டு வருகிறது திமுக. என பலரும் குற்றம் சாட்டிவருகிறார்கள்
இதற்கிடையில் மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் திமுக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தமான ‘ஸ்தல விருக்ஷம்' தர்ஹா நிர்வாகத்தால் கொடி மரமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் நிரஞ்சன் குற்றச்சாட்டு வைத்துள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்காத அரசு, கோவிலுக்கு சொந்தமான இடத்தில் தர்ஹா நிர்வாகம் கொடி ஏற்ற அனுமதித்தது எப்படி..? என்றும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதிக்கப்படாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பக்தர்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள போலீஸ் பூத்திற்குள் சென்று நரிமேடு மருது பாண்டியர் பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் உடலில் டீசல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்
முதற்கட்டமாக தல்லாகுளம் போலீசார் நடத்திய விசாரணையில், பூர்ண சந்திரன் தற்கொலைக்கு முன்பு அவரது செல்போனில் ஆடியோ பதிவிட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதில், '' திருப்பரங்குன்றம் மலை தீபத் தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டும் அது ஏற்றவில்லை. இதனால் நான் உயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன். திருப்பரங்குன்றம் மலையில் தற்கொலை செய்துகொள்ளத்தான் நினைத்தேன், ஆனால் கோயிலுக்கு களங்கம் வந்துவிடக்கூடாது. ஆகையால், கடவுளே இல்லை என்று சொன்ன பெரியார் சிலை முன்பு கடவுளுக்காக எனதுயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன்'' என்று உருக்கமாக கூறியுள்ளார்.
மேலும் இந்த தேர்தலில் கண்டிப்பாக திருப்பரங்குன்றம் விஷயம் திமுகவுக்கு இடியை இறக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. மேலும் அதே மதுரையில்பெந்தேகோஸ்தே தேவாலயங்களின் ஆயர் பேரவை சார்பில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. அதில் திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். கிறிஸ்துவ கொள்கைகளுக்கும் திராவிட இயக்க கொள்கைகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் எதுவும் கிடையாது என பேசினார்.ஆனால் திருப்பரங்குன்றம் விஷயத்தில் ஒரு உயிரே போயுள்ளது எந்தவித இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. இதே வேறு சமுதாயத்தில் நடந்திருந்தால் ஓடோடி போய் அனுதாபம் நிவாரணம் என வழங்கி இருப்பார்கள் ,எல்லாம் ஓட்டு செய்யும் வித்தை தானே,..
