
பாகிஸ்தான் இரு நாட்களுக்கு முன், இந்தியாவின் அதம்பூர் விமான தளத்தை தாங்கள் தாக்கி சேதப்படுத்திவிட்டதாக உலக முன்னிலையில் பெருமை பேசிக் கொண்டது. பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் செய்தியாளர் சந்திப்பில், “இந்தியாவின் முக்கிய விமான தளமான அதம்பூர் எங்களால் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுவிட்டது. அதில் எதுவும் மீதமில்லை” என செய்தியாளர் சந்திப்பு நடத்தியதை உலகம் முழுக்க பார்த்தது.
இந்த நிலையில், பாகிஸ்தானின் அந்த பேச்சை தகர்த்து உண்மையை உலகம் முழுவதும் பதிவு செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அதம்பூர் விமான தளத்தை நேரில் சென்று பார்வையிட்டார். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த இந்திய விமானப்படை வீரர்களையும், ராணுவ வீரர்களையும் சந்தித்து உரையாடினார். அவர்களுடன் எடுத்த புகைப்படங்களையும் தன் எக்ஸில் பதிவிட்டு, இந்தியா நம் வீரர்களுக்கு என்றும் நன்றி செலுத்தும் நாடாக இருக்கும் என வலியுறுத்தினார்.
அதன்படி தனது பதிவில் பிரதமர் கூறியுள்ளதாவது,“இன்று காலை அதம்பூர் விமான தளத்தில் நம் வீரர்களை சந்தித்தது ஒரு சிறப்பு அனுபவமாக இருந்தது. அவர்கள் காட்டும் வீரமும், தைரியமும், உறுதியும், பயமற்ற மனப்பாங்கும் இந்தியாவின் பெருமை. நம் நாட்டிற்காக அவர்கள் செய்வதற்கெல்லாம் இந்தியா என்றும் நன்றி செலுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் சென்றதும் அங்கு இருந்த வீரர்களின் முகங்களில் திருப்தியும் உற்சாகமும் தெரிந்தது. பாகிஸ்தான் கூறியதுபோல் விமான தளத்தில் எந்தவொரு சேதமும் இல்லாமல் இயல்பாக செயல்பட்டு வருவது பிரதமரின் இந்த பயணத்தின் மூலம் உலகிற்கு தெளிவாகி விட்டது. பாகிஸ்தான் பரப்பிய பொய் சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த முன்னேற்றமும், தைரியமும், இந்தியாவின் வீர மனப்பான்மையும் பாசிஸ்தானுக்கு பறை சாற்றப்பட்டுள்ள கட்டாய பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.
பிரதமரின் இந்த விஜயம் பாகிஸ்தானின் பேச்சை முற்றிலும் கேலி செய்ததாகவும், உலக நாடுகள் முன் இந்தியாவின் நம்பிக்கையை மேலும் உயர்த்தி இருக்கிறது என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல், பிரதமர் மோடியின் இந்த பயணம் எதிர்காலத்தில் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் இந்தியா தயார் என்பதை மறுமொழியாகவே பதிந்திருக்கிறது.இதன் மூலம் பாகிஸ்தான் கூறிய எல்லா பொய்களும் காகிதம் போல கிழிந்துவிட்டன. தற்போது இந்திய வீரர்களின் நம்பிக்கையும் தைரியமும் உலகமெங்கும் பாராட்டபடுகிறது.இந்தியா எந்த நேரமும் தைரியமாகவும், உறுதியுடனும், தன்னம்பிக்கையுடனும் இருக்குமென்பதை உலகம் காணும் வகையில் பிரதமர் மோடி உறுதி படுத்தியுள்ளார்.
தற்போது இந்திய பிரதமர் மோடி பாகிஸ்தான் தாக்கியதாக கூறப்பட்ட விமானப்படை தளத்திற்கு சென்று புகைப்படம் வெளியிட்டது போன்று பாகிஸ்தான் பிரதமர் இந்தியா தாக்கிய இடங்களுக்கு சென்று இது போல் உண்மையை வெளிக்கொண்டுவர தைரியம் இருக்கிறதா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.