
உலக அரசியலையே அசைத்த விவகாரம் என்றால் அது மோடி டிரம்ப் மோதல் தான். தன்னை விட வலிமையான தலைவர் யாரும் உலகத்தில் இருக்க கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டு வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். ஆனால் அது மோடியிடம் பலிக்கவில்லை. அந்த கோபம் தங்கி கொள்ளமுடியாமல் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்து இந்தியாவிற்கு நெருக்கடி கொடுக்கலாம் என நினைத்த டிரம்ப் தோல்வியை அடைந்துள்ளார். இந்த நிலையில் இந்த விவகாரம் தற்போது பெரிய திருப்பத்தைகண்டுள்ளது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடிக்கு நேரடியாக தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது, இருநாடுகளின் நட்பு மீண்டும் சூடுபிடிக்கிறதுஎன உலக அரசியல் தலைவர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சில மாதங்களுக்கு முன்பு, இந்தியாவுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. அமெரிக்காவுடனான வர்த்தக பற்றாக்குறை மற்றும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் இந்தியா – அமெரிக்கா உறவில் பெரும்தடையினை உருவாக்கியது. டிரம்ப், இந்தியாவின் பொருளாதாரம் குறித்து கடுமையாக விமர்சித்து “இந்தியா நம்மை பயன்படுத்திக்கொள்கிறது” என்றுபுலம்பிகொண்டே வந்தார்.
இதற்கிடையில் , டெல்லியில் நேற்று முன்தினம் அமெரிக்க பிரதிநிதிகள் குழு மற்றும் இந்திய வர்த்தக அமைச்சக அதிகாரிகள் சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வர்த்தக உதவி பிரதிநிதி பிரண்டன் லிஞ்ச் தலைமையிலான இந்த குழு, இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டது .
இந்த நிலையில் மத்திய அரசு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் “இந்தியா – அமெரிக்கா இருதரப்பு வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை இருநாடுகளும் ஒப்புக்கொண்டன. எதிர்கால நோக்கத்துடன் பரஸ்பர நன்மை பயக்கும் ஒப்பந்தத்தை விரைவில் முடிப்பதற்கான முயற்சி தீவிரப்படுத்தப்படும்,” என கூறப்பட்டது.
இந்த முன்னேற்றத்தை தொடர்ந்து மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் கூறியதாவது:
“கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருநாடுகளும் நட்பு நாடுகள். தலைவர்களும் நண்பர்கள். ஒவ்வொரு சூழலும் திருப்திகரமாக தீர்க்கப்படும்,” என அவர் உறுதியளித்தார். மேலும் பிரதமர் மோடி, “உள்நாட்டு பொருட்களை வாங்குங்கள்” என்ற சிந்தனையை மீண்டும் மக்களிடம் கொண்டு வந்ததை பாராட்டினார்.
டிரம்ப் தனது கடுமையான நிலைப்பாட்டை மாற்றி, மோடிக்கு நேரடியாக வாழ்த்து தெரிவித்து, அவரை நண்பர் “நரேந்திர மோடி என குறிப்பிட்டுவாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்., இந்த வாழ்த்து செய்தி இந்திய அமெரிக்கா உறவுக்கு புதிய உயிரோட்டம் உலக என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. இதனால் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 50 சதவீத வரி ரத்து செய்யப்படுமா அல்லது தற்காலிகமாக நிறுத்தப்படுமா என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்தியா – அமெரிக்கா வர்த்தக உறவு உலகளாவிய முக்கியத்துவம் பெறுகிறது. இந்த 50% வரி குறைக்கப்பட்டாலோ ரத்து செய்யப்பட்டாலோ, இந்திய உலகநாடுகளுக்கு தலைமை தாங்கும் அளவிற்கு உயர்த்தப்படும் . டிரம்ப் தனது பேச்சு பாணியை மொத்தமாக மாற்றியுள்ளார்., மேலும் அமெரிக்க இந்தியா வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையொப்பமிடப்படும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது..
மோடி யுகம் என்பது வெறும் அரசியல் காலகட்டமல்ல – அது இந்தியாவின் புதிய தன்னம்பிக்கை, புதிய அடையாளம். உலகம் இன்று இந்தியாவை நோக்கி பார்க்கிறது; இந்தியா தனது சக்தியை உணர்ந்து, எதிர்காலத்தைத் தானே எழுதிக் கொண்டிருக்கிறது.