
தமிழக மக்களின் வரிப்பணத்தை வைத்து பார்ட்டி கொண்டாடி வரும் தமிழ் திரையுலகத்திற்கு தற்போது அமலாக்கத்துறை மூலம் இடி இறங்கியுள்ளது.தமிழ் சினிமாவில் பெரும்பாலோனர் திமுக அருவருடிகளாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு தொடர்நது ஆதரவு குரல் கொடுப்பார்கள். திமுக யாரை எதிர்க்கிறதோ அவர்களை எதிர்த்து குரல் கொடுப்பார்கள் பேட்டி அளிப்பார்கள். குறிப்பாக கடநதிமுக அதிமுகவுக்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழ் சினிமாக்காரர்கள் திமுக ஆட்சியில் அனைத்தையும் நவத்துவரங்களையும் மூடி கொண்டு எதோ அமெரிக்காவில் இருப்பது போல் எந்த விஷயத்தையும் கண்டுகொள்ளமாட்டார்கள். மத்திய அரசுக்கு எதிராக தான் குரல் எடுப்பார்கள். இதற்கெல்லாம் காரணம் தற்போது தான் வெளிவரத்துவங்கி உள்ளது.
ஆம் டாஸ்மாக் ஊழல் பணம் திரை உலகில் கரைபுரண்டு ஓடியுள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது. 300 கோடி பிரமாண்ட பங்களா, நடிகைகளுடன் உல்லாசம் வாரம்தோறும் பார்ட்டிகளில் தத்தளித்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் உலகத்தில் கிடைக்கும் அனைத்து போதை வஸ்துக்களையும் உபயோகப்படுத்தி உள்ளார்கள். என சாமானிய மக்களிடம் அடித்து பிடுங்கிய பணத்தை வைத்து ஏகபோக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்துவருகிறார்களாம் இந்த திரை உலகினர் அரசியல் வாரிசுடன் தொடர்பில் உள்ளவர்கள். லும் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் குத்தகைக்கு எடுத்து வைத்துள்ளது ஆளும் கட்சி என குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் முதல்வர் உறவினர் வீட்டில் நடந்த ரெய்டு அதை பட்டவர்த்தனமாக்கி உள்ளது.
மக்களுக்கு 1000 ரூபாயை கொடுப்பது போல் கொடுத்து அதை டாஸ்மாக் மூலம் வசூல் செய்து அதில் சொகுசாகவும் உல்லாசமாகவும் வாழ்ந்து வருகிறார்கள் ஆளும் தரப்பு மற்றும் அவர்களின் அருவருடிகளான தமிழ் சினிமா பிரபலங்கள். பாலியால் வன்கொடுமையாளர், போதைப் பொருள் கடத்துபவர்களும்கள்ளச்சாராயப் பேர்வழிகளும் ஊழல்வாதிகளும்திருடர்களும் திமுக அரசின் உயர்மட்ட அதிகார தொடர்பில் இருப்பதை அமலாக்கத்துறை வெட்டவெளிச்சமாக்கி உள்ளது.
இதற்கிடையில் தற்போது சினிமாத்துறையை ஆட்சி செய்யும் ஆகாஷ் பாஸ்கரன் சகோதரியை அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினரான வாலாடி கார்த்தி என்பவர் திருமணம் செய்துள்ளார். வாலாடி கார்த்தியின் உறவினராக பிறகு ஆகாஷ் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணியாற்ற ஆரம்பித்துள்ளார். மேலும், 2021ஆம் ஆண்டு தேர்தல் சமயத்தில் ஆகாஷின் எழும்பூர் வீட்டில் வைத்து வருமான வரித்துறையினர் 5 கோடி ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
இந்த சூழலில், சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆகாஷின் தந்தையின் ஸ்ரீ வேலவன் டிரான்ஸ்போர்ட் கிடுகிடுவென வளர்ச்சியை சந்தித்ததாக கூறப்படுகிறது. 10 முதல் 15 வாகனங்கள் மட்டுமே இருந்த ஸ்ரீ வேலவன் டிரான்ஸ்போர்ட்டுக்கு தற்போது 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது.கெவின்கேர் ரங்கநாதனின் மகளுடன் திருமணம் நிச்சயமான பிறகே ஆகாஷ் பாஸ்கரன் டான் பிக்சர்சை தொடங்கியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து சுமார் 500 கோடி ரூபாய் செலவில் திரைப்படங்களை தயாரித்து வருவதாகவும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் வாரிசுகளுடனுடம் ஆகாஷ் பாஸ்கர் நட்புடன் வலம் வருவதாக கூறப்படுகிறது.
ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தரப்பில் சிவகார்த்திகேயன், தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய 3 நடிகர்களுக்கும் ரொக்கமாக பெரிய தொகை கைமாறி இருப்பதாக தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயம், சிம்பு மற்றும் தனுஷ் ஆகிய 3 நடிகர்களையும் அமலாக்கத்துறை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.