24 special

சிக்கிய லேப்டாப்! அந்த டியர் தம்பிக்கு செக் வைத்த அமலாக்கத்துறை! சித்தரஞ்சன் சாலைக்குள் நுழையும் ED! டெல்லியில் முகாமிடும் ஸ்டாலின்!


தமிழக அரசியலில்  ஒரு பெரும் பிரளயத்தையே உருவாக்கிவிட்டன, சமீபத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனைகள். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட அந்தச் சோதனையில், டாஸ்மாக் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் விசாகனோடு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமான ரத்தீஷ், தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் கே.எஸ்.மார்ட் கேசவன் எனப் பலரும் வீட்டிலும் ரெய்டு நடந்துள்ளது. 



“அமலாக்கத்துறையின் குறி விசாகனோ, ரத்தீஷோ அல்ல. அவர்களுடைய டார்கெட் உதயநிதிதான்...” என்கின்றன விவரமறிந்த வட்டாரங்கள். பரபரத்த அந்த அமலாக்கத்துறை சோதனையின் பின்னணி என்ன என்பது குறித்து  திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 1990-களில், வேளச்சேரியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் தன் குடும்பத்துடன் வசித்தபோது, அவரின் எதிர்ப்புற வீட்டில் வசித்தது ரத்தீஷின் குடும்பம். அப்போதிருந்தே உதயநிதியும் ரத்தீஷும் நட்பாகிவிட்டதால், இன்றுவரை அவர்களது நட்பு தொடர்கிறது.அரசியலில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அளவிற்கு அவர்களின் நட்பு தொடர்கிறது.  


இந்த நிலையில் விசாகனிடம், டாஸ்மாக் கொள்முதலில் தொடங்கி, சில மதுபான ஆலைகளுக்குச் சாதகமாக ஆர்டர்கள் வழங்கப்பட்டது வரையில் பல கேள்விகளைக் கேட்டிருக்கிறார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள். அவர் மனைவியிடமும் மகனிடமும் தனித்தனியே விசாரித்திருக்கிறார்கள். அப்போது சில வாட்ஸ்அப் உரையாடல்களின் ‘ஸ்கிரீன் ஷாட்’கள் நகல் எடுக்கப்பட்டு, அவை கிழிந்த நிலையில் விசாகனின் வீட்டினருகே அமலாக்கத்துறையால் கண்டெடுக்கப்பட, பெரும் பரபரப்பு கிளம்பியது. சில உரையாடல்களில், உதயநிதிக்கு விசாகன் பூங்கொத்து அளிக்கும் படங்களும், ‘டியர் தம்பி’ எனக் குறிப்பிட்டு, டாஸ்மாக்கின் வரவு, செலவுக் கணக்குகள் பகிர்ந்துகொள்ளப்பட்ட விவரங்களும் சிக்கின. ஓர் உரையாடலில், ‘எந்தெந்த நிறுவனங்களுக்கு எவ்வளவு ஆர்டர்கள் வழங்கப்பட வேண்டும்’ என்பதை விளக்குகிறார் அந்த ‘டியர் தம்பி.’


இதேபோல, சினிமா பட அதிபர் ஆகாஷ் பாஸ்கரன் என்பவர் வீடு உள்பட மேலும் 7 இடங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினார்கள்.இந்த நிலையில் விசாகன் ஐஏஎஸ்-ன் செல்போன் மற்றும் லேப்டாப்பில் இருந்து பல முக்கிய ஆவணங்கள் அமலாக்க துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதில் தான் சித்தரஞ்சன் சாலை,கோபாலபுரம் வரை பணம் பாய்ந்துள்ளது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளது. 


மேலும் விசாகன் போன்ற ஒரு சீனியர் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் ஆர்டர் போடுமளவுக்கு, ரத்தீஷுக்கு அதிகாரம் இருக்கிறதென்றால், அது உதயநிதியால்தான். ரத்தீஷை வளைத்துவிட்டால் உதயநிதியை வளைத்துவிடலாம் என்பது அமலாக்கத்துறையின் ஸ்கெட்ச். அதற்காக, அவருடைய பாஸ்போர்ட்டை முடக்கவும் ஆலோசித்திருக்கிறார்கள். பாஸ்போர்ட் முடக்கப்பட்டால், ரத்தீஷால் தொடர்ந்து லண்டனில் இருக்க முடியாது. இந்தியாவுக்குத் திரும்பித்தான் ஆக வேண்டும்.


இதற்கிடையே, குற்றத்தால் கிடைத்த பணத்தால்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்ட ஆகாஷ் பாஸ்கரனின் ‘டாவ்ன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தையும், அந்த நிறுவனம் தயாரித்த படங்களையும் முடக்க ஆலோசித்துவருகிறது அமலாக்கத்துறை. உதயநிதிக்கு எதிரான இந்த ஆபரேஷனுக்கு, டெல்லியிலிருந்து அழுத்தமாகவே ‘கிரீன்’ சிக்னல் விழுந்துவிட்டதால், அதிகாரிகளெல்லாம் தீவிரமாகவே இருக்கிறார்கள்” என்றார் அழுத்தமாக.


சிக்கல் இறுகிக்கொண்டே போவதால், ரொம்பவே அதிர்ந்துதான் போயிருக்கிறது ஆட்சி மேலிடம். ‘டாஸ்மாக் விவகாரத்தில், அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒப்புதல் வழங்கிய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்’ என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். 


அந்த வழக்கில் இடைக்காலத் தடை கிடைத்துவிடும் எனப் பெரிதாகவே நம்புகிறார்கள். ஆனால், அமலாக்கத்துறையின் வேகத்தைப் பார்த்தால், மேலிடத்தைத் தொட்டுவிடப் பார்ப்பதுபோலத்தான் தெரிகிறது. ‘அதிகாரிகளெல்லாம் ரொம்பவும் பயந்துபோயிருக்கிறார்கள்...’ எனத் தலைமைக்குத் தகவல் கிடைக்கவே, ‘எவ்விதமான ஆதாரமும் கிடைக்காத நிலையில், அரசு அலுவலர்களை அமலாக்கத்துறை தொடர்ந்து துன்புறுத்திவருகிறது’ எனக் கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி. தலைக்கு மேலே வெள்ளம் கரைபுரண்டு ஓடத் தொடங்கிவிட்ட நிலையில், அவரது அறிக்கையெல்லாம் எந்த அதிகாரிக்கும் தைரியத்தைத் தரவில்லை என்பதுதான் யதார்த்த நிலை.


இந்தநிலையில் பிரதமர் மோடி தலைமையில் மே 24-ம் தேதி டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார்.மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிவந்தார் முதல்வர் ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.