24 special

தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை நடராஜன் வாங்குன அந்த பரிசு....

NADARAJAN
NADARAJAN

ஒருவர் தனக்கான தன் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக பல முயற்சிகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால் அவர்கள் நிச்சயமாக தனது கனவை அடைவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக பலர் தற்போது தங்களது வாழ்வில் சாதனைகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் கிரிக்கெட் உலகில் ஒரு கிராமத்திலிருந்து எந்த ஒரு பின்புலமும் வசதியும் இல்லாமல் தன் முயற்சியால் மட்டுமே தன் திறமையை வளர்த்துக் கொண்டு தற்போது இந்தியாவிற்காக விளையாடும் அளவிற்கு தன்னை உயர்த்தி உள்ளவர் தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன். இவர் சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்ப பின்னணியை கொண்டவர். பள்ளி படிச்சதும் கல்லூரியிலும் என்ஜாய் செய்யும் பழக்கத்தை தவிர்த்து விட்டு தனது குடும்பத்திற்காக சிறு சிறு வேலைகளையும் பார்த்துக் கொண்டே தனது கிரிக்கெட் கனவையும் கைவிடாமல் தற்போது இந்திய அணியின் முக்கிய வீரராகவும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளராகவும் நடராஜன் உள்ளார். இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், 


இங்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது ஆனால் திறமையை வளர்த்துக் கொண்டு இளைஞர்கள் முன் வர வேண்டும் கஷ்டப்பட்டால் மட்டுமே எதுவும் சாத்தியமாகும் ஆனால் இக்காலத்தில் உள்ள இளைஞர்கள் அனைத்திலும் வேகத்தையும் உடனடியாக கிடைத்து விட வேண்டும் என்றும் நினைக்கிறார்கள், ஆனால் அப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லை என்று பேசினார். இதனை அடுத்து மயிலாடுதுறையில் உள்ள தனியார் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் பங்கேற்ற நடராஜன், எந்த துறையாக இருந்தாலும் நமக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுத்து அதை செய்ய வேண்டும் அதற்காக நமக்கு யாரும் ஊக்குவிக்க மாட்டார்கள் தடுக்க தான் பார்ப்பார்கள் எனக்கும் அப்படி நிறைய நடந்திருக்கிறது எல்லாரும் வேலைக்கு போறாங்க நீ என்னடா கைல பேட்டும் பந்துமா சுத்திட்டு திரியுற நீ எல்லாம் எப்படி குடும்பத்த காப்பாத்த போற என்று பலவாறு பேசினார்கள் ஆனால் அவர்களே இன்று எனக்கு அன்றே தெரியும் நான் அப்பவே சொன்னேன் அல்லவா என பெருமையாக பேசுகிறார்கள் என்று தான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடத்தை மற்றவர்களுக்கு எடுத்துக் கூறி இக்காலத்தில் உள்ள இளைஞர்களின் கனவை அடைவதற்கான தூண்டுகோலாக செயல்பட்டு வருகிறார். 

முன்னதாக இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய துடுப்பாட்ட அணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார் முன்னதாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் சீசனில் இருந்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காகவும் தமிழக அணிக்காகவும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டி ஹைதராபாத் அணிக்கு மிகவும் பின்னடைவாகவே சென்று கொண்டிருந்த நிலையில் கடைசியில் 266 ரன்களை குவித்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 19.1 கோவர்களின் 199 ரன்களை குவித்தது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி தோல்வியை தழுவியது. ஆரம்பத்தில் இந்த போட்டி ஹைதராபாத் அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டு வந்த நிலையில் இதில் ஹைதராபாத் சார்பில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி ஹைதராபாத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளார். இதனால், நடராஜருக்கு ஹைதராபாத் அணி சார்பில் எண்பது பவுன் தங்கசெயின் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. தங்கம் விற்ற்கும் விலைக்கு 80 பவுன் தங்கச் செயின் நடராஜரின் உழைப்பிற்கு பரிசாக கொடுக்கப்பட்டுள்ளதால் நடராஜன் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.